தலித் பண்பாடு

தலித் பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை 100ரூ. சாதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் எவ்வாறு கட்டமைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள நுால். சாதிப்படி நிலையில் அங்கீகாரம் பெற செய்து வரும் பூஜை, தான, தர்மம் முதலானவற்றை, மக்கள் வாழ்வியலில் உள்ளபடி படம்பிடிக்கிறது. தலித் பண்பாடு ஒரு கலந்துரையாடல், பெரிய புராணத்தில் மேல், கீழ் வரிசையும் முறைமீறல்களும், தமிழ் தலித் இலக்கியம் உட்பட, புத்தகம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கைக் கட்டமைப்புக்கு ஆலோசனை சொல்கிறது. […]

Read more

தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு

தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. பழங்காலத் தமிழ் குடிமக்களின் மூலத் தமிழ்ப் பண்பாடு, பின்னர் முடியாட்சி நடைபெற்ற காலத்தில் ஆரியப் பண்பாடு எவ்வாறு தமிழகத்தில் ஊடுருவியது? தமிழ்ப் பண்பாட்டில் பெண்களைப் பற்றிய கருத்துக்கள், பெண்ணியம் மற்றும் தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு ஆகியவை இந்த நூலில் விளக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான கருத்துகளை, கட்டுரைகளாகத் தொகுத்து இருப்பதோடு, இருவருக்கு இடையே நடைபெறும் தலித் மொழியிலான உரையாடல்களாகவும் தந்து இருக்கும் புதிய முயற்சி பாராட்டப்படக்கூடியதாகும். […]

Read more

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 370ரூ. பழங்கால தமிழ்ச் சமுதாயத்தில் அறங்களின் தோற்றம் எவ்வாறு ஏற்பட்டது, அறத்தின் மரபுகள், தொல்காப்பிய அறம் உள்ளிட்ட பல்வேறு அறங்களின் உருவாக்கம், அவை பரவிய வரலாறு மற்றும் சங்க காலத் தமிழ்ச் சங்க வரலாறு ஆகியவை ஆய்வு நோக்கில் தரப்பட்டுள்ளன. தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் பயன் அளிப்பதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 24/7/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029562.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more