லக்கி லூக்கை சுட்டது யார்?

லக்கி லூக்கை சுட்டது யார்?, ஐம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. துப்பாக்கி வெடிக்கும் ஓசை, வீழ்ந்து கிடக்கும் லக்கி லூக் என்று புதிய கோணத்தில் தொடங்கி கொலையாளி யார்? காரணம் என்ன? என்ற ப்ளாஷ்பேக்கில் நகரும் கதை. அப்பாவுக்கும் மகன்களுக்கும் இடையே நடக்கும் கொலைவெறி கோல்ட் வேட்டை அது மக்களிடையே பரவி நடக்கும் கரகர சண்டைகள் என்று கதையும் படங்களும் ‘ஜிவ்’வுகின்றன. உச்சக்கட்டத்தில் லக்கிக்கு உயிர் பிழைக்கும் லக் இருந்ததா, இல்லையா? சுட்டது யார்? என்பது யூகிக்க முடியாத சஸ்பென்ஸ், சிரியஸ் […]

Read more

பழி வாங்கும் பாவை

பழி வாங்கும் பாவை, மேக்ஸி லயன் காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. நிறவெறியின் உச்சத்தில இருக்கும் அமெரிக்க ராணுவத்தின் கர்னல் அர்லிங்டன், அப்பாவி செவ்விந்திய கிராம மக்களை யுத்த தர்மத்தை மீறிக் கொன்று தீர்க்கிறார். நியாயத்தின் பக்கமே எப்போதும் நிற்கும் டெக்ஸ் வில்லர், செவ்விந்தியர்களுக்குத் துணையாக இருந்து, அமெரிக்க ராணுவக் கோட்டையைத் தகர்க்க வழி சொல்கிறார். செவ்விந்தியத் தலைவன் ப்ளாக் புல்லின் மனைவியோ கர்னலைப் பழிவாங்கத் துடிக்கிறாள். திகல், திருப்பம், திட்டமிடல் என்று மிரட்டலாக வண்ணச் சித்திரங்களுடன் கண்முன் காட்சியாக நகர்கிறது கதை. […]

Read more

நிழலும் நிஜமும்

நிழலும் நிஜமும், ஜம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. சம்மரில் காமிக்ஸ் பிரியர்களைக் கூலாக்க வந்திருக்கும் ஜேம்ஸ்பாண்ட் 007 காமிக்ஸ். உளவாளிப் பெண் ஒருத்தியின் முகமூடி கலைந்துபோக, அவளைக் காப்பாற்ற வருகிறார் ஜே.பி. 007, அவரது வருகையும் தெரிந்துவிட, இரு நாட்டு உளவாளிகளுக்கு இடையே நடக்கும் உரசல்கள். இதற்கிடையே நாட்டில் ஆங்காங்கே நடக்கும் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் யார் என்று கண்டுபிடிக்க, பாண்ட் செய்யும் உளவுப் பணிகள், பரபர சண்டைகள் என்று அதிரடியாக நகர்கிறது கதை. கிளைமாக்ஸில் வில்லன் யார் என்பது ரகசியம். […]

Read more

லயன் காமிக்ஸ்

லயன் காமிக்ஸ், எஸ். விஜயன், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் கடந்த, 70 – 80ம் ஆண்டுகளில் அதிக அளவில் இருந்தது. பல நிறுவனங்கள் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டிருந்தாலும், ஆங்கிலத்தில் வெளியான காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியதில் முன்னணியில் இருந்தது, முத்து காமிக்ஸ். பேன்டம் மற்றும் இரும்பு கை மாயாவி போன்ற கற்பனை கதாபாத்திரங்களில் வீரதீர சாகச கதைகள், வாசகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. அந்த வரிசையில், சிவகாசியைச் சேர்ந்த, லயன் காமிக்ஸ் நிறுவனத்தார், ஆங்கிலத்தில் பிரபலமாக இருந்த […]

Read more

டைனமைட் ஸ்பெஷல்

டைனமைட் ஸ்பெஷல், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 700ரூ. வீர சாகச அதிரடி கதாநாயகன் டெக்ஸ்வில்லர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆவதையொட்டி 507 பக்க அளவில் வண்ணப்படங்களுடன் ஒரு கதையும் அதே போல கருப்பு வெள்ளையில் ஒரு மெகா கதையுமாக வெளியாகி உள்ள இந்தப் புத்தகம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பனியில் ஒரு பிரளயம்

பனியில் ஒரு பிரளயம், தமிழில் எஸ். விஜயன், ஜம்போ காமிக்ஸ் சன்ஷைன் லைப்ரரி வெளியீடு, விலை 200ரூ. மீண்டும் தமிழுக்கு வரும் ஜேம்ஸ் பாண்ட் உள்ளங்கவர் உளவாளியாம் ஜேம்ஸ் பாண்ட், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்; முற்றிலும் புதிய வடிவில். வண்ணச் சித்திரங்கள் கொண்ட இந்த காமிக்ஸ் கதை, ஷான் கானரி காலத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போலன்றி, டேனியல் க்ரெய்க் பாணி படங்களைப் போல் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டது. அதேசமயம், அதிக விவரணைகள், வசனங்கள் இல்லாமல் காட்சிகள் […]

Read more

யார் அந்த மிஸ்டர் X

யார் அந்த மிஸ்டர் X, முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 75ரூ. காமிக்ஸ் உலகின் கதாநாயகர்களுள் ஒருவரான கர்னல் க்ளிப்டன் ஆக்ஷன் பள்ஸ் காமெடி மன்னர். தன் டிடெக்டிவ் மைண்டால் டிஃபரண்டாக திட்டம் தீட்டி, கொள்ளை கும்பல் ஒன்றைப் பிடிக்கும் கதைதான் யார் அந்த மிஸ்டர் எக்ஸ், கர்னலின் சீரியஸ் ஆன வீரதீர சாகஸம், சிரியஸ் ஆனாலும் வெற்றி அவர் பக்கமே திரும்புவதும், திருடர்கள் போர்வைக்குள் ஒளிந்திருப்பவர்கள் யார் என்ற உண்மை தெரியவரும் க்ளைமேக்ஸும் உம்மணா மூஞ்சிகளையும் சிரிக்க வைக்கும். நெடுங்கதையோடு குட்டிக்குட்டியாய் […]

Read more

ஹெர்லக் ஷோம்ஸ் ஒரு குரங்கு வே(சே) ட்டை

ஹெர்லக் ஷோம்ஸ், ஒரு குரங்கு வே(சே) ட்டை, ஜம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 115ரூ. கலகலப்பாக ஒரு காமிக்ஸ் புக் படித்து பலகாலம் ஆச்சு என்று ஏக்கப்பெருமூச்சு விடுபவர்களுக்காகவே வந்திருக்கும் விசேஷம் இது. ஹாலிவுட்டின் ஹெர்லக் ஹோம்ஸையும் மிஸ்டர் எக்ஸையும் கலந்து செய்த கலவை ஹெர்லக் ஷோம்ஸ். உதவியாளர் வேஸ்ட்சன்னுடன் சேர்ந்து காணாமல் போன குரங்கு, சிங்கங்கள், ஒரு சிறுமி ஆகியோரைக் கண்டுபிடிப்பதோடு, கொள்ளைக் கூட்டம் ஒன்றையும் விடிக்கச் செல்லும் சாகஸத்தில் இவரது ஒவ்வொரு மூமென்டும் சூப்பர் காமெடி. வித்தியாசமான கோணங்களில் வரையப்பட்ட […]

Read more

பிரியமுடன் ஒரு பிரளயம்

பிரியமுடன் ஒரு பிரளயம் (லார்கோ த்ரில்லர்), முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. காமிக்ஸ் உலகின் ஜோம்ஸ்பாண்ட் குழுமத்தின் தலைவன், லார்கோ கலக்கும் காதல் மணக்கும் அதிரடி திரில்லர். சந்திக்கும் பெண்கள் பலரும் வீசும் காதல் வலைகளில் இருந்து தப்பித்து, இளம்பெண் ஒருத்தியின் அழகில் சிக்குகிறான் லார்கோ. அவளது அன்புக்குப் பின்னால், தீவிரவாதிகளின் சதி என்ற அபாயம் ஒளிந்திருப்பது தெரியாமலே அவளை நேசிக்கிறான். பயங்கரவாதத்தின் பல்வேறு முனைத் தாக்குதல்கள், லார்கோ சந்திக்கும் சவால்கள், ஒட்டுமொத்தமாக அவனது குழுவையே அழிக்க செய்யப்படும் சதி என […]

Read more