நிழலும் நிஜமும்
நிழலும் நிஜமும், ஜம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ.
சம்மரில் காமிக்ஸ் பிரியர்களைக் கூலாக்க வந்திருக்கும் ஜேம்ஸ்பாண்ட் 007 காமிக்ஸ். உளவாளிப் பெண் ஒருத்தியின் முகமூடி கலைந்துபோக, அவளைக் காப்பாற்ற வருகிறார் ஜே.பி. 007, அவரது வருகையும் தெரிந்துவிட, இரு நாட்டு உளவாளிகளுக்கு இடையே நடக்கும் உரசல்கள். இதற்கிடையே நாட்டில் ஆங்காங்கே நடக்கும் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் யார் என்று கண்டுபிடிக்க, பாண்ட் செய்யும் உளவுப் பணிகள், பரபர சண்டைகள் என்று அதிரடியாக நகர்கிறது கதை. கிளைமாக்ஸில் வில்லன் யார் என்பது ரகசியம். ஹைடெக் தியேட்டரில் 4டி யில் மூவி பார்த்த த்ரில்லைத் தரும் படங்களோடு கொள்ளை கொள்கிறது.
நன்றி: குமுதம், 5/6/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818