வெற்றிதரும் மேலாண்மை

வெற்றிதரும் மேலாண்மை, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. மேலாண்மை நுட்பங்கள் காலங்கள்தோறும் வளர்ந்து வருபவையே. ஒரு நிறுவனத்திற்கான வெற்றி தோல்விக்கு காரணங்கள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வது அவசியமாகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தொழில் முனைவோருக்கு தமிழில் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் பெரிதும் உதவக்கூடும்.உலகப் பொருளதாதாரத்தில் பெரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், மேலாண்மை யுக்திகளை சரிவர இனம் கண்டு கொள்வது தொழில் நிறுவனங்களின் கடமையாகும். புதிய யுக்திகளை நடைமுறைப்படுவத்துவது இன்றைய மேலாளர்கள் மற்றும் தொழில் […]

Read more

ஈழம் அமையும்

ஈழம் அமையும், கா. அய்யநாதன், கிழக்குப் பதிப்பகம், பக். 336, விலை 250ரூ. இலங்கையில் அரசியல் சம உரிமைக்காக அறவழியில் போராடிய மக்கள், அரச பயங்கரவாதத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றும் ஓர் இன அழித்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது சிங்களப் பேரினவாதம். சிங்களப் பேரினவாதம் வெற்றி பெற்றிருக்கிறது. ஈழம் புதைக்கப்பட்டுவிட்டது. இந்த திரைமறைவு நாடகம் எப்படி அரங்கேறியது. அதற்கு துணை நின்றவர்கள் யார்? இவற்றையெல்லாம் விரிவாக வரலாற்றுப் பின்னணி கொண்டு, அழுத்தமான அரசியல் […]

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி.கா. மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், விடுதலைப் போராட்டவீரர், சீறாப்புராண உரையாசிரியர் என்று பன்முக அடையாளம் கொண்ட கவி.கா. மு. ஷெரீப், தமிழ் இலக்கியத்துக்கு இஸ்லாமிதயர் ஆற்றியிருக்கும் அரும்பணிக்கு அடையாளமாகவும் திகழ்பவர். உயிர் நேயம் மனித உணர்வின் உச்சம். இதை இஸ்லாம் இயல்பான வாழக்கை முறைக்குள் எந்தளவு நடைமுறைச் சாத்தியமாகியிருக்கிறது என்பதை தனது ஆய்வு அறிவின் மூலம் ஆதாரங்களோடு விளக்கும் நூல் இது. சமூக நல்லிணக்கம் நாடுவோர் அவசியம் படிக்க வேண்டிய […]

Read more

மஞ்சள் முத்தம்

மஞ்சள் முத்தம், அ.ரோஸ்லின், அகநாழிகை பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. ஒரு அமைதியின் இருப்பைக்கூட அர்த்தப்படுத்தி கவிதையாக்கும் திறன் கவிஞருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றிருக்கிறது. உதாரணமாக, இருளைத் தின்றிருந்த இரவை குத்திக் கிழிக்கும் வன்மம் நம்மையும் புளகாங்கிதமடையச் செய்கிறது. அதில் பிரியங்கள் எப்படி அந்நியப்பட்டுப்போகின்றன என்பதை காட்சிப்படுத்தும் முயற்சி புரிகிறது. ‘சதைகளின் சந்தையில், ஆட்டிறைச்சியைவிட விலை மலிவாகியிருக்கிறது, பெண்களுடையது’ -என்ற சமூகநீதிக்கான சாடல்கள் உக்கிரம் கொள்கின்றன. ஆனால் இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கின்றன வாசகனுக்கெழுதப்பட்ட கடிதங்கள் என்ற நிலையிலேயே மொத்த கவிதைகளும் வார்த்தைகளால் அடுக்கப்பட்டு அடைபட்டுக்கிடக்கின்றன. […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, முனைவர் எஸ். வெங்கடராஜலு, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 75ரூ. சமகால அரசியல் வரலாற்றை விளக்குவதும் பாமர மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகிய இரண்டு நோக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தன்னலமற்ற தொண்டாற்றி அரசியலில் நேர்மையுடன் வாழ்ந்த தமிழகத் தலைவர்களின் பொது வாழ்க்கை வழி சமகால அரசியல் அலசப்பட்டுள்ளது. அடுத்தாக, நாட்டில் நல்லாட்சி நிலவ ஊடகங்களின் பங்கு எத்தகையது என்று விளக்கப்பட்டுள்ளது. அரசியலில் ஈடுபடுவோரின் தகுதிகள், பணிகள், தேவையான சீர்திருத்தங்கள் பற்றி எடுத்துரைப்பது நாட்டிற்கு நன்மை சேர்ப்பதாக உள்ளது. […]

Read more

காமராஜ் புதிரா? புதையலா?

காமராஜ் புதிரா? புதையலா?, எஸ்.பி. கணேசன், காமராஜ் விழிப்புணர்வு மையம், பக். 193, விலை 70ரூ. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்வு, அவரின் சாதனை, வாழ்க்கை நிகழ்வுகள், அறிவுரைகள் ஆகியவற்றை இளந்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி, புரிந்தவர்களுக்கு அவர் புதிராகவும், புரிந்தவர்களுக்கு அவர் புதையலாகவும் இருப்பதை நல்ல விளக்கங்களுடன் தந்திருப்பது சிறப்பு. மற்ற தலைவர்கள்போல் அவர் தலைவர் மட்டுமல்ல, நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ இறைவன் அனுப்பி வைத்த தவப்புதல்வன் என்கிறார் நூலாசிரியர். அதாவது காமராஜரை கல்வி, அணைக்கட்டுகள், மின்சாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றை இத்தமிழ்மக்களுக்கு வழங்க […]

Read more

நீவாநதி

நீவாநதி, கவிப்பித்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 502, விலை 385ரூ. பொன்னை ஆற்றின் நுரைத்து ஓடிய வெள்ளத்தோடும் அதில் துள்ளிக் குதித்த மீன்களோடும் வாழ்ந்த வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தொலைத்துவிட்டதுமட்டுமல்ல, அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் வாழப் பழகிக் கொண்ட கொடுமையை அவர்களின் மொழியிலேயே ‘நீவாநதி’ என்ற தலைப்பில் நாவலாக்கித் தந்துள்ளார் கவிப்பித்தன். வேலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைதான் நாவலின் மைய இழை. அவர்களின் உயிர் ஆதாரமாக இருந்த நீவாநதி எனும் பொன்னை ஆறு ஆந்திர அரசு கட்டிய குறுக்கணையாலும் […]

Read more

வரலாற்றில் எம்.ஜி.ஆர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆர்., வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 784, விலை 500ரூ. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பொதுவாழ்கையைப் பற்றி புரிதலை இன்றைய தலைமுறையினருக்கு நுட்பமாக எடுத்துச் சொல்லும் தொகுப்பு நூல் இது. கலைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய செயற்கரிய பணியை அவரோடு பழகியவர்கள் எழுத்தில் சொல்வது படிக்கப் படிக்க புதுமை. சிவாஜி, ம.பொ.சி., பழதுநெடுமாறன், கண்ணதாசன், சோ, சோலை, எம்.ஆர். ராதா, டைரக்டர் ஸ்ரீதர், நீதியரசர் இஸ்மாயில், மணியன், வாலி, பானுமதி என்று அவரோடு அன்பாக இருந்தவர்கள் பலரின் அரிய கருத்துக்களை […]

Read more

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பாயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பாயன், செ.ராசு, கொங்கு ஆய்வு மையம், விலை 120ரூ. தமிழக சட்டசபை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநில அமைச்சர், முதல் அமைச்சர், எம்.பி., எதிர்கட்சித்தலைவர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர், வெளிநாட்டுத் தூதர், மாநில ஆளுநர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தவர் டாக்டர் ப. சுப்பராயன். இவருடைய வாழ்க்கையே நிரந்தரமான பாடப்புத்தகம். அதைப்புரட்டிப் படிக்கப்படிக்க ஏராளமான புதுச்செய்திகள் எந்தக்காலத்துக்கும் பொருந்தும்படி கிடைத்துக்கொண்டேயிருக்கும் வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நூலில் பல புதிய செய்திகள், படங்கள், ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் […]

Read more

புதுச்சேரி கோயில்கள்

புதுச்சேரி கோயில்கள், சங்கர் பதிப்பகம், விலை முதல்பாகம் 550ரூ, இரண்டாம் பாகம் 400ரூ. புதுச்சேரி, இந்திய பிரெஞ்சு கலாச்சாரத்தின் வியத்தகு வரலாற்றுப் பெட்டகம். சித்தர்கள், கவிஞர்கள், தேசாபிமானிகள் நிறைந்த ஊர். புதுச்சேரி சிறிய மாநிலம் என்றாலும் இங்கு கோயில் இல்லாத ஒரு தெருவைக்கூட காண முடியாது. அத்தகைய கோயில்களின் தலவரலாறு, தலபுராணச் செய்தி, ஆலயத்தின் தனிச் சிறப்புகள், திருவிழாக்கள், கோவில்களுக்குரிய பாடல்களை டாக்டர் சி.எஸ். முருகேசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் விநாயகர் கோயில்கள், முருகன் கோயில்கள், சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்கள், அய்யனார் கோயில்கள், […]

Read more
1 2 3 6