வரலாற்றில் எம்.ஜி.ஆர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆர்., வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 784, விலை 500ரூ. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பொதுவாழ்கையைப் பற்றி புரிதலை இன்றைய தலைமுறையினருக்கு நுட்பமாக எடுத்துச் சொல்லும் தொகுப்பு நூல் இது. கலைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய செயற்கரிய பணியை அவரோடு பழகியவர்கள் எழுத்தில் சொல்வது படிக்கப் படிக்க புதுமை. சிவாஜி, ம.பொ.சி., பழதுநெடுமாறன், கண்ணதாசன், சோ, சோலை, எம்.ஆர். ராதா, டைரக்டர் ஸ்ரீதர், நீதியரசர் இஸ்மாயில், மணியன், வாலி, பானுமதி என்று அவரோடு அன்பாக இருந்தவர்கள் பலரின் அரிய கருத்துக்களை […]

Read more

உன்னால் முடியும்

உன்னால் முடியும், சந்தனம்மாள் பதிப்பகம், வி.ஜி.பி. தலைமை அலுவலகம், சென்னை, விலை 150ரூ. ஏழையாக இருந்தாலும், புத்திசாலித்தனமும், கடும் உழைப்பும் இருந்தால் உச்சியைத் தொடலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள் வி.ஜி.பி. சகோதரர்கள். மூத்தவர் பன்னீர்தாஸ் யாரும் எதிர்பாராத விதத்தில் இளமையிலேயே காலமாகிவிட, அந்த மாபெரும் நிறுவனத்தை கட்டிக்காத்து, மேலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். தன்னைப்போலவே மற்றவர்களும் வளரவேண்டும் என்ற பரந்த உள்ளம் படைத்த வி.ஜி.சந்தோஷம் அதற்கான வழிகளைக் கூறுகிறார் உன்னால் முடியும் என்ற இந்த நூலில். உழைப்பால் உயர்ந்தவர்களான […]

Read more

சுயமரியாதை

சுயமரியாதை, ஏகம் பதிப்பகம், 3 பிள்ளையார் கோவில் தெரு, 2ம் சந்து, முதல்மாடி, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 175ரூ. இவர்தான் பெரியார் வரலாற்று தொடரில் 3வது புத்தகம்தான் இந்த சுயமரியாதை. தந்தை பெரியாருடன் நெருங்கிய தாடர்பு வைத்திருந்த பேராசிரியர் ம. நன்னன் இப்புத்தகத்தை தொகுத்து வெளியிட்டு உள்ளார். தந்தை பெரியாரின் பேச்சுக்கள், குடியரசு பத்திரிகையில் வந்த தலையங்கங்கள், திராவிட இயக்க மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். சுயமரியாதை இயக்கம் பற்றிய விளக்கங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. கடலூர் மாவட்டம் வட்டக் காவனூரை சேர்ந்த நன்னனின் இயற்பெயர் […]

Read more

மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி?

மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி? (ஆசிரியர்: ஏ.கே.சேஷய்யா; வெளியீடு: உஷா புத்தக நிலையம், 1, நரசிம்மன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33: விலை:ரூ. 42. மன அழுத்தம் காரணமாக கோபம், பொறாமை, எரிச்சல், உண்டாகின்றன். மன அழுத்தம் இன்றி அமைதியாக வாழ எளிதாக கடைபிடிக்கும் வழிகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. ——   தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம், ஆசிரியர்: முனைவர் அ.ஆறுமுகம், வெளியிட்டோர்: பாவேந்தர் பதிப்பகம், ’சீரகம்’, 4/79 நடுத்தெரு, திருமழபாடி, அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம்; விலை: […]

Read more