தமிழ் இலக்கியத்தின் வரலாறு

தமிழ் இலக்கியத்தின் வரலாறு, பால.இரமணி, ஏகம் பதிப்பகம், பக்.184, விலை  ரூ.150. தமிழ் இலக்கியத்தின் வரலாறு குறித்து இதிலுள்ள எட்டு கட்டுரைகளும் அழுத்தமாகவும், ஆழமாகவும், சுருக்கமாகவும் செவ்விலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சொல்லிச் செல்கின்றன. “தமிழில் இதுவரை பல இலக்கிய வரலாறுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இலக்கியத்தின் வரலாறு உரைக்கும் முதல் நூல், முன்னோடி நூல் இது ஒன்றுதான்’ என்று வ.நாராயண நம்பி பதிவு செய்துள்ளது போலவே, 184 பக்கங்களில் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை மிகமிக எளிமையாக எடுத்துரைக்கும் நூல் இதுவாகத்தான் இருக்கும். காப்பியம், […]

Read more

அன்னை தெரசா

அன்னை தெரசா, கள்ளிப்பட்டி சு.குப்புசாமி, ஏகம் பதிப்பகம், விலை 55ரூ. வாழ்க்கை வரலாறு என்ற வரிசையில், அன்னை தெரசா, ராமானுஜர், போதிதர்மர், நெல்சன் மண்டேலா, காந்தியடிகள், அடால்ப் ஹிட்லர், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, பாரதியார், அம்பேத்கர், காமராஜர், கக்கன், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜிகணேசன் ஆகியோரின் வாழ்க்கை குறிப்பு சுருக்கமாகவும் சிறப்பாகவும் தனித்தனி நூல்களில் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினதந்தி, 17/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தொழில் முனைவோர்

தொழில் முனைவோர், இரத்தின நடராசன், ஏகம் பதிப்பகம், பக்.120, விலை 90ரூ. பண்டைய காலந்தொட்டு உழவு மற்றும் நெசவு தொழில்கள் மிக முக்கியமாகக் கருதப்பட்டு வந்தன. திரைகடலோடியும் திரவியம் திரட்டு என்பர். நாம் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் இந்நுால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் செய்பவர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளையும், அனுபவங்களையும், ஆலோசனைகளையும் உள்ளடக்கிய அறிவுப் பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

மாணவர்களுக்குரிய பொதுக் கட்டுரைகள்,

மாணவர்களுக்குரிய பொதுக் கட்டுரைகள், புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், பக். 200+192, விலை 80+75ரூ. தமிழறிஞர் மா.நன்னன், பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளும், பல மேடைகளில் பேசிய பேச்சுக்களும் இவ்விரண்டு தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியரின் நுண்ணிய அறிவுத் திறனை ஒவ்வொரு கட்டுரையும் இயம்புகின்றன. இரு நூல்களிலும் முறையே, 25 + 20 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் நூலில், ‘பெண் தன் உணர்வை ஆணைப் போல் வெளிப்படுத்தாமையே அதன் சுவையைக் கூட்டும்போலும்’ என்றும் (பக்.21), ‘உண்மையறிவே மிகும்’ என்ற கட்டுரையில், வள்ளுவரின், ‘தொட்டனைத் […]

Read more

பெரியார் கணினி

பெரியார் கணினி, புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 650ரூ. பகுத்தறிவு தந்தை என்றும், பகுத்தறிவு பகலவன் என்றும் போற்றப்பட்டவர் தந்தை பெரியார். அவர் உதிர்த்த ஐயாயிரம் பொன் மொழிகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அரசியல், அறிவியல், கடவுள், கல்வி, சமூக சீர்திருத்தம், சாதி, சுயமரியாதை, தமிழர் நாத்திகம், நரகம் மோட்சம், மதம், பகுத்தறிவு, புராண இதிகாசங்கள், பொதுவுடைமை, மூடநம்பிக்கை என்பன போன்ற தலைப்புகளில் பெரியார் மொழிந்த மொழிகளை புலவர் நன்னன் இந்த நூலில் அழகுற தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நூல் குறித்து […]

Read more

கலைவாணி டீச்சர்

கலைவாணி டீச்சர், திருவாரூர் பாபு, சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. பல்வேறு பத்திரிகைகளில் வெளியான கலைவாணி டீச்சர் உள்ளிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை எழுதியுள்ள திருவாரூர் பாபு, மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை ஒவ்வொரு கதையைப் படித்து முடித்தபோதும் உணர முடிகிறது. கதாபாத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன. நெடுநேரம் அந்த கதாபாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டகலாமல் உயிர் பெற்று உலா வருகின்றன. புத்தக வடிவமைப்பு பிரமாதம். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —- சென்னை வானொலிப் பொழிவுகள், ஏகம் பதிப்பகம், விலை 30ரூ. […]

Read more

இவர்தாம் பெரியார்

இவர்தாம் பெரியார், 8.திருமணம், புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 70ரூ. பெரியார் வரலாறு தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “இவர்தாம் பெரியார்” என்ற தலைப்பில் தொடர்ந்து புத்தகங்களாக புலவர் நன்னன் எழுதி வருகிறார். எட்டாவது புத்தகம், “திருமணம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. திருமணம் என்றால் அது பெரியாரின் திருமணம் பற்றியது அல்ல. பல்வேறு திருமணங்கள் பற்றி பெரியார் வெளியிட்ட அறிக்கைகளும், நிகழ்த்திய சொற்பொழிவுகளும் கொண்டது. மாதிரிக்கு ஒன்று- 24/2/1932-ல் “குடியரசு” பத்திரிகையில் பெரியார் வெளியிட்ட அறிக்கை: “புதுவை முரசு” ஆசிரியர் தோழர் பொன்னம்பலனார் […]

Read more

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும்

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. இந்து சமயத்தில் நிறைய சம்பிரதாயங்கள், சடங்குகள். ஆனால் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. அர்த்தம் அறியாததால் அவை வீண் என்று கருதுகிறோம். அவற்றின் பயன் அறிந்து பலன் பெற இந்நூல் உதவும். கோவிலில் இறைவனை வழிபடுதல், பிரகாரத்தைச் சுற்றி வருதல், திருமுழுக்கு (அபிஷேகம்) செய்தல், தானம் செய்தல், பூஜையறையின் விதிமுறைகள் இவை போன்ற ஆன்மிகத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய பல விஷயங்களை கேள்வி – பதில் வடிவில் தொகுத்து அளித்துள்ளார் […]

Read more

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? தொகுதி 1

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? தொகுதி 1, புலவர் மா. நன்னன், ஏகம் பதிப்பகம், இரண்டு தொகுதிகள் சேர்ந்து விலை 1250ரூ. தமிழைப் பிழை இல்லாமல் எழுத வேண்டும். பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்பதில் பெரு விருப்பம் கொண்டவர் பேராசிரியர், புலவர் மா. நன்னன் ஆவார். எழுத்தாளர்கள், தாம் ஆளும் சொற்களின் திறத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். தக்க இடத்தில், தக்க சொல்லைப் பயன்படுத்துவதைப் பொறுத்தே அந்த உரைநடையின் பயன், தரம் போன்றவை விளங்கும். அந்த வகையில் நல்ல உரைநடையை எழுதுவதற்கு இந்த […]

Read more

பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர்

பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர், தமிழறிஞர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 150ரூ. இவர்தாம் பெரியார் என் றதலைப்புடன் பெரியார் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார் தமிழறிஞர் நன்னன். பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர் என்ற தலைப்பில் 7வது புத்தகம் வெளிவந்துள்ளது. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மகாத்மா காந்தி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குன்றக்குடி அடிகளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, ஜி.டி.நாயுடு, வ.உ.சி., நெ.து. சுந்தரவடிவேலு, ஈ.வெ.கி.சம்பத், […]

Read more
1 2