பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர்
பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர், தமிழறிஞர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 150ரூ.
இவர்தாம் பெரியார் என் றதலைப்புடன் பெரியார் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார் தமிழறிஞர் நன்னன். பெரியாரின் பாராட்டைப் பெற்ற பெரியோர் என்ற தலைப்பில் 7வது புத்தகம் வெளிவந்துள்ளது. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மகாத்மா காந்தி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குன்றக்குடி அடிகளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, ஜி.டி.நாயுடு, வ.உ.சி., நெ.து. சுந்தரவடிவேலு, ஈ.வெ.கி.சம்பத், ஆதித்தனார், எம்.ஆர்.ராதா போன்ற 41 பெரியோர்கள் பற்றி பெரியார் பாராட்டு தெரிவித்ததை சான்றுடன் சிறப்பாக தொகுத்தளித்திருக்கிறார் புலவர் நன்னன். நன்றி: தினத்தந்தி.
—-
ஏர்வாடி சையது இப்ராகீம், சையத் முகம்மத் அப்துல் அலீம் (செஞ்சி), எஸ்.கே.எஸ். பப்ளிஷர்ஸ், விலை 40ரூ.
இறைநேசர் ஏர்வாடி சையது இப்ராகீம் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, நபிளாரின் பாரம்பரியத்த்தில் வந்த சையது இப்ராகீம், மார்க்கப் பணியாற்ற இந்தியா வந்தார். மதுரையில் ஆட்சி புரிந்த அவர், பின்னர் கீழ்க்கரை ஏர்வாடியில் ஆட்சி செய்தார். 1200ம் ஆண்டில் போரில் வீரமரணம் அடைந்தார். அவரது வரலாற்றை சையத் முகம்மத் அப்துல் அலீம் (செஞ்சி) எளிமையாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி.