திருச்சி ஜெயில்

திருச்சி ஜெயில், எல்.எஸ்.கரையாளர், அழிசி, விலை:ரூ.170; இரண்டுமுறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட எல்.எஸ்.கரையாளரின் சுதந்திரப் போராட்ட சிறை அனுபவங்களாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. 1940-ம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தியதால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கு இருந்த ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், டாக்டர் சுப்பராயன் ஆகியோரின் சிறை அனுபவங்களையும் தெரிவித்து திருக்கிறார். சிறையில் அன்றாடம் என்ன நடக்கும்? சிறை மருத்துவமனை எப்படி இருக்கும் […]

Read more

ஊகானில் தொடங்கிய ஊரடங்கு

ஊகானில் தொடங்கிய ஊரடங்கு, திண்டுக்கல் ஜம்பு, அழகு பதிப்பகம், விலைரூ.180. கோவிட் – 19 தோற்றம், வளர்ச்சி, உலகை விழுங்கிய மரண விபரங்கள், தொடரும் அவலங்களை அளந்து காட்டும் நுால். கடந்த 1918ல் வந்த, ‘ஸ்பேனிஷ் ப்ளூ’ பெருந்தொற்றால் ஐந்து கோடி பேர் மாய்ந்தனர். பின் வந்த கொரோனா வைரசால் பாதிப்பு உச்சம் தொட்டதாகக் கூறியுள்ளார். வைரஸ் சீனா ஊகானிலிருந்து வந்தது என்பது ஊகமா, உண்மையா, ஜப்பான் அணுகுண்டு போல், கொரோனா அணுகுண்டும் பாதிப்பு தருமா, தடுப்பு ஊசி அலாவுதீனின் அற்புத விளக்கா, உயிரியல் […]

Read more

கொரோனா விளைவுகளும் விபரீதங்களும்

கொரோனா விளைவுகளும் விபரீதங்களும், என்.எஸ்.பிரதாப் சந்திரன், இன்சுவை பதிப்பகம், விலை 70ரூ. ஏற்கெனவே உலகில் பேரழிவை ஏற்படுத்திய தொற்றுநோய்கள் பற்றிய விளக்கங்களுடன், தற்போது உலகை உலுக்கிக் கொண்டு இருக்கும் கொரோனா நோய் எவ்வாறு பரவியது? அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன? கொரோனாவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?  இதை அரசியல்வாதிகள் கையாண்ட விதம், அரசுகள் செய்யத் தவறியவை ஆகிய அனைத்தும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 12/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள்

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள், தமிழில்: வி. வி. பாலா, தடம் பதிப்பகம், பக்.120, விலை ரூ.100, லண்டனிலிருந்து ஆயுதங்கள் வாங்கி அதனை இந்தியாவில் விநியோகித்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போர் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சாவர்க்கர் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார். நாசிக் சதி வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனையும் பெற்ற சாவர்க்கர், அந்தமான் சிறைக்கு மாற்றப்படுகிறார். அந்தமான் சிறைக் கைதிகள் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உறவினர்களுக்கு கடிதம் எழுத முடியும் என்ற கடுமையான விதி அமலில் இருந்தது. […]

Read more

அகதியின் துயரம்

அகதியின் துயரம், பெர்னார்ட் சந்திரா, காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.120 இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாடு திரும்பவில்லை. இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களின் துயரங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். உலக அகதிகளின் நிலவரம், இந்திய நாடு எதிர்கொள்ளும் அகதி பிரச்னை, உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் அகதிகள், மொழி சார்ந்த நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ள போட்டி அரசியல் என பல கருத்துகளை அலசுகிறது. இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான […]

Read more

கொடிய கரோனா ஓர் அலசல்

கொடிய கரோனா ஓர் அலசல், மேஜர் ஜெப ராஜ், முதற்சங்கு பதிப்பகம், விலை 120 ரூ. கரோனா ஏற்படுத்திய தாக்கம், அந்த நோயை தடுக்கும் முறைகள் ஆகியவற்றுடன் குறைந்த காலத்தில் மத்திய அரசு, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள், நோயினால் தாக்கப்பட்ட அவர்களுக்கு உதவிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகியோரின் அர்ப்பணிப்புகள் அனைத்தும் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 28/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

என் பெயர் நுஜூத்

என் பெயர் நுஜூத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது!, நுஜூத் அலி, உடன் இணைந்து டெல்ஃபின் மினோவி, ஆங்கிலத்தில்: லிண்டா கவர்டேல், தமிழில்: சூ.ம.ஜெயசீலன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.180. யேமன் நாட்டின் கார்ட்ஜி கிராமத்தில் பிறந்த நுஜூத், ஒரு விஷயத்தில் தன் அம்மாவை விஞ்சிவிடுகிறாள். அம்மாவுக்கு 16 வயதில் திருமணம் நடக்க, நுஜூத்துக்கோ பத்து வயதிலேயே மணமாகிவிடுகிறது. அம்மாவுக்கு 16 குழந்தைகள் பிறந்தன. மூன்று முறை கரு கலைந்தது. நான்கு குழந்தைகள் இறந்துவிட்டன. அப்பாவுக்குக் கூலி வேலை. வறுமைக்கு வீட்டுப் பொருட்கள் […]

Read more

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!, ஜி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.155. விடுதலைக் குயில் பாரதி குறித்த அரிய செய்திகளை விரித்துச் செல்லும் நுால். பாரதியின் பெருமித உணர்ச்சி, கவித்துவ மேன்மை, இசை அறிவு, நட்பு போற்றும் உருக்கம் எனப் பல்வேறு செய்திகளை விறுவிறுப்பு குறையாமல் சுவைபடச் சொல்கிறார் ஆசிரியர். காந்திமதிநாதனுடன் விளைந்த கவிதைப் போர், கிருஷ்ணசாமி செட்டியார், குவளைக்கண்ணனுடன் பாரதிக்கு இருந்த நெருக்கம், வ.ரா.,வின் பற்றும் ஈடுபாடும், சுதேசமித்திரன், இந்தியா நாளிதழ்கள் குறித்த செய்திகள், பாரதியின் இறுதிச் சொற்பொழிவு, ச.து.சி.யோகியார் பாரதியிடம் கொண்டிருந்த அன்பு […]

Read more

என் பெயர் நுஜூத்

என் பெயர் நுஜூத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது!, நுஜூத் அலி, உடன் இணைந்து டெல்ஃபின் மினோவி, ஆங்கிலத்தில்: லிண்டா கவர்டேல், தமிழில்: சூ.ம.ஜெயசீலன், வெளியீடு:டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.180. யேமன் நாட்டின் கார்ட்ஜி கிராமத்தில் பிறந்த நுஜூத், ஒரு விஷயத்தில் தன் அம்மாவை விஞ்சிவிடுகிறாள். அம்மாவுக்கு 16 வயதில் திருமணம் நடக்க, நுஜூத்துக்கோ பத்து வயதிலேயே மணமாகிவிடுகிறது. அம்மாவுக்கு 16 குழந்தைகள் பிறந்தன. மூன்று முறை கரு கலைந்தது. நான்கு குழந்தைகள் இறந்துவிட்டன. அப்பாவுக்குக் கூலி வேலை. வறுமைக்கு வீட்டுப் பொருட்கள் […]

Read more

நதிநீர் இணைப்பின் முன்னோடி

நதிநீர் இணைப்பின் முன்னோடி. பரம்பிக்குளம்  ஆழியாறு பாசனத் திட்டம் (பி.ஏ.பி),  தொகுப்பாசிரியர்: என்.ஆர்.மகேஷ்குமார், தமிழக வேங்கை வெற்றி, பக்.96, விலை ரூ.130. காமராஜர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம்தான் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம். மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கிழக்கு நோக்கி திசைமாற்றி, தமிழகம் – கேரளம் ஆகிய இருமாநிலங்களுக்கும் பயன்படாமல் கடலில் கலந்த நீரை, இரு மாநிலங்களும் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டதுதான் இந்தத் திட்டம். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களும், கேரளத்தின் பாலக்காடு மாவட்டமும், […]

Read more
1 2 3 17