ஊகானில் தொடங்கிய ஊரடங்கு
ஊகானில் தொடங்கிய ஊரடங்கு, திண்டுக்கல் ஜம்பு, அழகு பதிப்பகம், விலைரூ.180.
கோவிட் – 19 தோற்றம், வளர்ச்சி, உலகை விழுங்கிய மரண விபரங்கள், தொடரும் அவலங்களை அளந்து காட்டும் நுால். கடந்த 1918ல் வந்த, ‘ஸ்பேனிஷ் ப்ளூ’ பெருந்தொற்றால் ஐந்து கோடி பேர் மாய்ந்தனர். பின் வந்த கொரோனா வைரசால் பாதிப்பு உச்சம் தொட்டதாகக் கூறியுள்ளார்.
வைரஸ் சீனா ஊகானிலிருந்து வந்தது என்பது ஊகமா, உண்மையா, ஜப்பான் அணுகுண்டு போல், கொரோனா அணுகுண்டும் பாதிப்பு தருமா, தடுப்பு ஊசி அலாவுதீனின் அற்புத விளக்கா, உயிரியல் குண்டும் அணுகுண்டும் ஒன்றா, தென்கொரியா எப்படி முன் ஜாக்கிரதையுடன் தப்பியது போன்றவற்றுக்கு விரிவாக விடை தருகிறது.
சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகள் எடுத்த முன் எச்சரிக்கையால், பின்விளைவுகள் குறைந்தன. இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் கோட்டை விட்டன என்ற உண்மையை உடைத்துள்ளார்.
– முனைவர் மா.கி.ரமணன்
நன்றி: தினமலர், 17/10/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%8a%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818