சபாஷ் சாணக்கியா – பாகம் 2

சபாஷ் சாணக்கியா – பாகம் 2. சோம வீரப்பன், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், விலைரூ.170.   வாய் சொல்லில் வீரர், யாருக்கு உதவக்கூடாது, சொந்த காலில் நிற்பது, கடல் கடந்து பொருள் ஈட்டுவதன் தேவை, யாரை எதற்கு மதிக்க வேண்டும், வெற்றி எப்போது கைகூடும், பெரியோர்களின் ஆலோசனை ஏன் அவசியம், நம் பலம், பலவீனம் எது, சேவல், கழுதையிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை போன்ற வாழ்வியல் அடிப்படையை விவரிக்கிறது இந்த நுால்.   எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நான் […]

Read more

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம், கருத்துரை குறிப்புரை கோ. வடிவேலு செட்டியார், தொகுதி 1, பக். 872, தொகுதி 2, பக். 888, இரண்டு தொகுதிகளும் விலை ரூ 1400. பல்கலை வித்தகரான கோ.வடிவேலு செட்டியார் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்தவர். இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், வேதாந்தம் முதலியவற்றில் கரைகண்ட வித்தகர். இவர், திருக்குறள் பரிமேலழகர் உரைக்குச் செய்துள்ள தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் அடங்கிய நூல், பல்லாண்டுகளாகத் தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்டும், பின்பற்றப்பட்டும், பாராட்டப்பட்டும் வந்த பெருமைக்குரியது. இந்நூலில் திருக்குறளின் […]

Read more

கேட்டதும் கிடைத்தது

கேட்டதும் கிடைத்தது, ‘பதின் கவனகர்’ இராமையா, தொகுப்பு கனகசுப்புரத்தினம், கற்பகம் புத்தகலாயம், விலை 150ரூ. இந்நூல் வினா- விடை வாயிலாகத் திருக்குறளுக்கு விளக்கம் அளிக்கிறது. சில வினாக்கள் வேடிக்கையாகக் கேட்கப்பட்டவைபோல் தோன்றினாலும் அதற்குரிய விடையை விளக்கமாகவும் பொருத்தமாகவும் தந்திருக்கிறார் பதின் கவனகர் இராமையா. கொம்புக்குறி இடம் பெறாத குறள் ஒன்றைக் கூறுமாறு கேட்க, அதற்கு 17 குறளைக் காட்டுகிறார் ஆசிரியர். அதேபோல் நீட்டலளவை, நிறுத்தல் அளவைக்கு ஒரு குறள், விதையில்லாப் பழம் உள்ள குறள், தோல்வியே வெற்றி ஆகின்ற குறள், ஐந்து உவமைகள் இடம் […]

Read more

உற்றதும் உணர்ந்ததும்(3-ம் பாகம்)

உற்றதும் உணர்ந்ததும்(3-ம் பாகம்), சுவாமி ஓங்காரநந்தா ,ஓங்காரம், விலை 350ரூ. “உற்றதும் உணர்ந்ததும்” என்ற தலைப்பில் சுவாமி ஓங்காரநந்தா எழுதி வரும் நூலில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. தமது அனுபவங்களையும், சிந்தனைகளையும் கலந்து, ஆன்மிக கட்டுரைகளாக வழங்கியுள்ளார் சுவாமி ஓங்காரநந்தா. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- திருக்குறள் அறத்துப்பால் தெளிவுரை, மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. திருக்குறள் அறத்துப்பாலுக்கு எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் உரை எழுதியுள்ளார் பி.வி. சண்முகம். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more