தமிழ் சினிமா உலகம் தொகுதி 1

தமிழ் சினிமா உலகம், தொகுதி 1, திருப்பூர் அகிலா விஜயகுமார், மணிவாசகர் பதிப்பகம், விலை 600ரூ. தமிழ் சினிமா உலகில் 1930-ம் ஆண்டு மவுன மொழிப் படங்களின் சகாப்தம் முடிவடைந்து, 1931-ல் ‘காளிதாஸ்’ படம் மூலம் பேசும் மொழிப்படங்களின் வருகை தொடங்கியது என்ற தகவலைத் தரும் இந்த நூல், 1931 முதல் 1940 வரை வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வரலாறு, அந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ஆகிய விவரங்கள், சினிமா ரசிகர்கள் படித்து சுவைக்கும் வகையிலும், மாணவர்களுக்கு உதவும் ஆய்வு தகல் […]

Read more

திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி

திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி, பொன்.செல்லமுத்து; மணிவாசகர் பதிப்பகம், தொகுதி: 1- பக்.240; விலை ரூ.250; தொகுதி: 2.பக்.256; விலை ரூ.250; தொகுதி: 3, பக்.240;  விலை ரூ.250. கவிஞர் வாலி 1959 முதல் 2013 வரை திரைப்படங்களில் எழுதிய பாடல்கள் தொடர்பான தகவல்களின் களஞ்சியமாக இந்த மூன்று தொகுதிகளும் இருக்கின்றன. 1959 முதல் 1980 வரை 297 படங்களுக்கும், 1981 முதல் 1990 வரை 405 படங்களுக்கும், 1991 முதல் 2013 வரை 372 படங்களுக்கும் கவிஞர் வாலி பாடல்கள் எழுதியிருக்கிறார். இந்த பாடல்கள் […]

Read more

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம், கருத்துரை குறிப்புரை கோ. வடிவேலு செட்டியார், தொகுதி 1, பக். 872, தொகுதி 2, பக். 888, இரண்டு தொகுதிகளும் விலை ரூ 1400. பல்கலை வித்தகரான கோ.வடிவேலு செட்டியார் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்தவர். இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், வேதாந்தம் முதலியவற்றில் கரைகண்ட வித்தகர். இவர், திருக்குறள் பரிமேலழகர் உரைக்குச் செய்துள்ள தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் அடங்கிய நூல், பல்லாண்டுகளாகத் தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்டும், பின்பற்றப்பட்டும், பாராட்டப்பட்டும் வந்த பெருமைக்குரியது. இந்நூலில் திருக்குறளின் […]

Read more

கலீல் ஜிப்ரான் கவிதைகள் 1, 2

கலீல் ஜிப்ரான் கவிதைகள் 1, 2, கலீல் ஜிப்ரான், கிருஷ்ணபிரசாத், காவ்யா, தொகுதி 1, பக். 1412, தொகுதி 2, பக். 1312, விலை ரூ.1400, 1300. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-319-7.html கலீல் ஜிப்ரான் ஒரு கவிஞர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர், தத்துவஞானி, இறையியலாளர். அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் ஒரு சேர படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பது அரிது. அதுவும் தமிழில் சாத்தியம் குறைவே. அந்தக் குறையை நிறைவாக செய்திருக்கிறார் கிருஷ்ணபிரசாத். முதல் தொகுதியில் கலீல்ஜிப்ரான் கவிதைகளான […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம்

சைவ சமயக் கலைக் களஞ்சியம், தொகுதி 1, சைவ-சமய-தமிழகம், முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வ சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 895, விலை – 10 தொகுதிகளும் சேர்த்து 15000ரூ. சைவ சமயம், தமிழகம் என்பதாக அமைந்துள்ள கலைக் களஞ்சியத்தின் மூலம் தொகுதி, சைவ சமய வழிபாடு தமிழகத்தில் எவ்வாறு நிலை பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தரவுகளைத் தருகிற இக்கலைக் களஞ்சியம், நுண்ணிய நோக்கோடு அவற்றை ஒருங்கமைக்கவும் செய்கிறது. கலைக்களஞ்சியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வரைமுறை […]

Read more