தமிழ் சினிமா உலகம் தொகுதி 1
தமிழ் சினிமா உலகம், தொகுதி 1, திருப்பூர் அகிலா விஜயகுமார், மணிவாசகர் பதிப்பகம், விலை 600ரூ.
தமிழ் சினிமா உலகில் 1930-ம் ஆண்டு மவுன மொழிப் படங்களின் சகாப்தம் முடிவடைந்து, 1931-ல் ‘காளிதாஸ்’ படம் மூலம் பேசும் மொழிப்படங்களின் வருகை தொடங்கியது என்ற தகவலைத் தரும் இந்த நூல், 1931 முதல் 1940 வரை வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வரலாறு, அந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ஆகிய விவரங்கள், சினிமா ரசிகர்கள் படித்து சுவைக்கும் வகையிலும், மாணவர்களுக்கு உதவும் ஆய்வு தகல் என்ற வகையிலும் முழு விவரத்துடன் தரப்பட்டுள்ளன.
அந்தக் காலத்தில் வெளியான ஒவ்வொரு படங்களின் தயாரிப்பு நிறுவனம், அதில் நடித்த நடிகர், நடிகைகள் விவரம், பாடல் ஆசிரியர்கள், இயக்குனர்கள், இடம் பெற்ற பாடல்கள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தப் படங்களின் பாட்டுப் புத்தக அட்டைப் படங்கள், படக் காட்சிகள், விளம்பரங்கள், நடிகர் நடிகை படங்கள் ஆகியவையும் தரப்பபட்டுள்ளன.
தமிழ் சினிமாவின் ஆரம்பகால வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் நல்ல வழிகாட்டியாக இந்த நூல் விளங்குகிறது.
நன்றி: தினத்தந்தி 3/7/19,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818