சங்ககால வானிலை

சங்ககால வானிலை, முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன், முக்கூடல், பக். 272, விலை 300ரூ. வானிலையும் காலநிலையும்தான் மனிதன் முதல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வரை அத்தனையும் தோன்றக் காரணம். வானிலை குறித்து சங்ககாலத்திலேயே ஆய்வு செய்திருக்கிறார்கள். அதனை உணர்த்தும் வகையில் சங்க இலக்கிய நூல்களில் கோள்களின் இயக்கம் முதல், மேகம், மழை, இடி, மின்னல், வெப்பசலனம் என்று வானிலை சார்ந்த அத்தனை விஷயங்களும் இடம் பெற்றிருப்பதை உதாரணங்களுடன் விளக்கும் நூல். நம் முன்னோரின் வானிலை அறிவு(வியல்) நுட்பம் ஆச்சரியப்படவைக்கிறது. நன்றி: குமுதம், 6/11/19 . இந்தப் […]

Read more

முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள், நாகூர் சா.அப்துர் ரஹீம், அறிவு நாற்றங்கால், பக். 142, விலை 120ரூ. உடல்நலம் முதல், மனித நேயம் வரை அவசியமானது எது? அவசர உலகில் முக்கியம் என்று நினைத்து நாம் செய்து கொண்டிருக்கும் முட்டாள்தனங்கள் என்னென்ன என்பதை புரியும் வகையில் எளிய நடையில் சொல்லியிருக்கும் புத்தகம். சிறியவர் முதல் பெரியவர் வரை எந்தப் பாகுபாடும் இன்றி அத்தனைபேரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய இஸ்லாத்தின் அடிப்படையில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 6/11/19 . இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெனரல் பப்ளிஷர்ஸ், பக். 224, விலை 140ரூ. இசை… பெயருக்கு ஏற்ப எல்லோருக்கும் இசைந்து செல்வது, அனைவரையும் இசையச் செய்வது. ஸ்வர, தாள, பாவங்களோடு கர்நாடக சங்கீதமாக உருவெடுக்கும் அதனை ராகமாக அடையாளம் காண்பது எப்படி? என்பதில் தொடங்கிய தனது சங்கீத வேட்(கை)டையில் படிப்படியாக உயர்ந்து, கச்சேரிகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு முன்னேறியுது? செம்மங்குடி முதல் ஜேசுதாஸ் வரையானவர்களைப் பற்றிய தமது நினைவலைகள் என்று அனைத்தையும் சுவைபடப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் வாதூலன். வாசிக்க வாசிக்க வயலின் இசையாய் வசீகரிக்கிறது. நன்றி: […]

Read more

வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள்

வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள், ஞானபாரதி செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், விலை 150ரூ. மாவீரர்களின் ஞானிகளின் தன்னலமற்ற தலைவர்களின் வரலாறுகளைப் படிப்பதன் மூலம் நாமும் அப்படி ஆக முடியும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் ஆழ விதைக்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பொதி

பொதி, காஞ்சி சாந்தன், புதியவன் பப்ளிகேஷன்ஸ், விலை 140ரூ. இந்நூல் எனது அரை நூற்றாண்டு காலச் சேமிப்பு எனக் கூறும் நூலாசிரியர், கவிதைக்கான அடித்தளமாக அனுபவத்தை அழகியலாக்கிய, இருபதின் தொடக்கமும் அறுபதின் அடக்கமும் என்று நிஜம் சொல்கிறார். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள்

காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள், அ.அமல்ராஜ் ஐ.பி.எஸ்., விஜயா பதிப்பகம், பக். 352, விலை 290ரூ. சவால்களும் பொறுப்புகளும் எல்லாத் துறைகளிலுமே உண்டு என்றாலும் காவல்துறையில் அவை மிகமிக அதிகம். நிர்வாகத்திற்ன் அதிகம் தேவைப்படும் அந்தத் துறையில் இருந்து கொண்டே வாழ்வின் மற்ற எல்லா நிலைகளையும் திறம்பட நிர்வகித்து வெற்றி காண்பதற்கான வழியினை எளிய முறையில் சொல்லும் நூல். புலம்பலோ மன அழுத்தமோ இல்லாமல், பணியிடம், குடும்பம், நட்பு வட்டாரம், வெளியிடம் என்று எல்லா இடங்களிலும் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட சின்னச் சின்ன […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு, மா.ராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், விலை 260ரூ. தமிழகத்தை 7 நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் பூர்வீகம் எது என்பதுஇன்னும் உறுதிப்படாத நிலையிலும், கி.பி.250ல் தொடங்கி, கி.பி.882 வரை நீடித்த பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றிய அரிய செய்திகளின் தொகுப்பாக இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. பல்லவ மன்னர்கள் ஒவ்வொருவர் பற்றிய விவரம், அவர்களின் ஆட்சித் திறமை, அவர்கள் காலத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்று அனைத்து விவரங்களையும் அடக்கியுள்ள இந்த நூல், பல்லவ மன்னர்களின் வரலாற்றின் முழுமையான ஆவணமாகத் திகழ்கிறது. […]

Read more

இலக்கிய இணையர் படைப்புலகம்

இலக்கிய இணையர் படைப்புலகம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 175ரூ. கணவர், மனைவி இருவருமே இலக்கியவாதிகளாக இருந்து பல படைப்புகளை வழங்கி இருக்கிறார்கள் என்ற சிறப்பான தகவலை அறிந்து கொள்ள இந்த நூல் வகை செய்து இருக்கிறது. பேராசிரியர் இரா.மோகனும், அவரது மனைவி நிர்மலா மோகனும் ஆக்கிய சிறந்த பல நூல்களுக்கு கவிஞர் இரா.ரவி இணையங்களிலும், வலைப்பூ மற்றும் முகநூலிலும் மதிப்புரைகள் எழுதி இருக்கிறார். அந்த மதிப்புரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இரா.மோகன், நிர்மலா மோகன் […]

Read more

வைகை நதிக் கரை முதல் வாடிவாசல் வரை

வைகை நதிக் கரை முதல் வாடிவாசல் வரை, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 148, விலை 50ரூ. மதுரை மாநகரின் பெருமைக்குடி காரணமாக ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் அவற்றுள் தனிச்சிறப்பானது வைகை நதி. ஆற்றங்கரைகளில்தான் நாகரிகத்தின் வளர்ச்சியே ஏற்பட்டது என்பது வரலாறு.. அந்த வகையில் மதுரையில் அனனை மீனாட்சியின் ஆட்சிக் காலம் தொடங்கி, இன்றைய காலம் வரை நடந்த, நடக்கிற அத்தனை ஏற்றங்களும் மாற்றங்களையும் சொல்லும் நூல். சித்திரைத் திருவிழா முதல், சிலிர்ப்பான ஜல்லிக்கட்டு வரை ஒவ்வொன்றுக்கான விளக்கமும் பல்வேறு கோணத்தில் தரப்பட்டிருப்பது சிறப்பு. […]

Read more

கருத்துக் குவியல்

கருத்துக் குவியல், டாக்டர் நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன், முல்லை பதிப்பகம், பக். 168, விலை 150ரூ. நீதித்துறையில் தனி முத்திரை பதித்த நீதியரசரின் சொல்லோவியங்களும் எழுத்தோவியங்களும் அடங்கிய நுல். பல்வேறு சமயங்களில், சட்டம், ஆன்மிகம், இலக்கியம், பெண் உரிமை, பொது நலம், சுற்றுச் சுழல் போன்ற தலைப்புகளில் நீதியரசர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. சட்டத் துறையில் மட்டுமன்றி தான் தொட்ட துறைகள் எல்லாவற்றிலும் அரசராக விளங்குவதை படிக்கப்படிக்க உணர முடிகிறது. உதாரணமாக, குழல், யாழ், முழவு இம்மூன்றும், தமிழின் தனிச் சிறப்பான இசைக்கருவிகள். காரணம், தமிழின் […]

Read more
1 2 3 8