மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்

மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும், சர்மிலா வினோதினி, பூவரசி பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. ஈழத்தைச் சேர்ந்த படைப்பாளி சர்மிலா வினோதினியின் வித்தியாசமான கதை தொகுப்பான இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமாக காணப்படுகின்றன. பெரும்பாலான கதைகள், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போருக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்களையும், போர் ஏற்படுத்திய இழப்புகள், மற்றும் ரணங்களை மையப்படுத்தி இருப்பதால் அவற்றைப் படிக்கும் போது மனம் கனக்கிறது. இந்தக் கதைகளின் வரிகளில் வார்த்தை ஜாலங்கள் இல்லை. ஆனால் கதைகயை நகர்த்திச் செல்லும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் ஏற்ற வர்ணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. […]

Read more

கூண்டுக்குள் பெண்கள்

கூண்டுக்குள் பெண்கள், விலாஸ் சாரங்; தமிழில்: ஆனந்த் ஸ்ரீனிவாசன், நற்றிணை பதிப்பகம், பக்.320, விலை ரூ.350. மராத்தி மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளரான விலாஸ் சாரங் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல கல்லூரிகளில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய  நூலாசிரியரின் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு நேரடித் தொடர்பில்லாத பல்வேறு அனுபவங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள  சிறுகதைகளில் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. கூண்டுக்குள் பெண்கள் சிறுகதை மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள வயதாகிக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணின் கதை. இக்கதை மூலம் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் சிரமம் […]

Read more

நினைவின் பயணம்

நினைவின் பயணம் (கட்டுரைகள்-கவிதைகள்), ஜே.ஜி.சண்முநாதன், விஜயா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120 கோவை கங்கா மருத்துவமனையின் தலைவரான நூலாசிரியர், தனது 82 – ஆம் வயதில் மகாகவி பாரதியின் மானுடம் நேயம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற சிறப்புக்குரியவர். அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மிக எளிமையாகவும், உலகியல் சார்ந்தும் அவர் வெளிப்படுத்திய சிறந்த கருத்துகளின் தொகுப்பாக இந்நூல் மிளிர்கிறது. தேசம் அடிமைப்பட்டிருக்கும் காலத்தில்மக்கள் உறங்கிக் கிடப்பது இயற்கை. அது அடிமைப்பட்டதின் விளைவு. ஆனால் விடுதலை […]

Read more

ஸ்ரீவேதாந்த தேசிகர்(1268-1369)

ஸ்ரீவேதாந்த தேசிகர்(1268-1369), ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்-750, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.300. வேதாந்த தேசிகரின் 750-வது ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் வெளியீடு இது. வில்லூர் நடாதூர் கருணாகராசாரியாரைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் இப்புத்தகத்தில், வேதாந்த தேசிகரின் திவ்யசரிதம், தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அவர் அருளிய நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் என 37 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வேதாந்த தேசிகரின் வாழ்வில் அங்கம் வகித்த திருத்தலங்களின் புகைப்படங்கள் இப்புத்தகத்துக்கு அழகுசேர்க்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 28/9/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்

கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும், ஒ.சுந்தரம், சிவகாமி பதிப்பகம், பக்.336, விலை ரூ.200. உள்ளாட்சி அமைப்பின் தலைவர் முதல் மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர் பொறுப்பு வரை வகித்தவர் மு.கண்ணப்பன். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மு.கண்ணப்பன் தனது 17 -ஆவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டது, விலைவாசி உயர்வை எதிர்த்து 1962 இல் நடந்த மறியல் போராட்டத்தில் தந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது கலந்து கொண்டு சிறை சென்றது, 23 ஆவது வயதில் ஆலாம்பாளையம், அனுப்பர்பாளையம் கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சிமன்றத் தலைவரானது, 1965 இல் […]

Read more

பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை

பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை, அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.160, விலை ரூ.120. புரட்சிக் கவிஞர் என்று அறியப்பட்ட பாரதிதாசன் படைப்புகளில் காணப்படும் நகைச்சுவை பற்றி ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.நகைச்சுவை என்றால் என்ன? என்பதை நூலின் முதல் கட்டுரையான நகைச்சுவையும் பாரதிதாசனும் விளக்குகிறது. நகைச்சுவை உணர்வை பாரதிதாசன் எவ்வாறு கையாண்டார் என்பதையும் அது கூறுகிறது. நகைச்சுவை என்பது இருபக்கமும் கூர்மையான வாள். அதை மிகத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அது பயன்படுத்துபவரையே தாக்கிவிடும் என்று கூறும் நூலாசிரியர்,  பாரதிதாசன் எழுதிய பாடல்களில், நாடகங்களில், கதைகளில், திரைப்படங்களில் […]

Read more
1 6 7 8