அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை

அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை,  ய.சு. ராஜன், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர்,  பதிப்பாசிரியர் – சிற்பி பாலசுப்பிரமணியம்; அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், பக்.724, விலை ரூ.600. விண்வெளித்துறையில் அப்துல்கலாமுடன் பயணித்த, அவரது நெருங்கிய நண்பரான விண்வெளி விஞ்ஞானி யக்ஞசுவாமி சுந்தர்ராஜன் என்கிற ய.சு. ராஜன் மற்றும் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயரும் இணைந்து அப்துல்கலாமைப் பற்றிய பலரும் அறியாத தகவல்களின் களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் உயர்ந்ததற்கான பின்னணியை இந்நூல் விளக்குகிறது. கலாமின் […]

Read more

மனத்தில் மலர்ந்த மடல்கள்

மனத்தில் மலர்ந்த மடல்கள்,  இறையன்பு, கற்பகம் புத்தகாலயம், பக்.64, விலை ரூ.40; அஞ்சல் மூலம் கடிதம் எழுதுவது அறவே இல்லாமல் போன நிலையில், தன்னுடைய மனத்தில் மலர்ந்த மடல்களை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். ஒரு தந்தை என்கிற முறையில் மகன்களுக்கு, கொஞ்சம் வயதானவர் என்கிற முறையில் கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு, பழைய விடுதி மாணவன் என்கிற முறையில் வீட்டில் இருந்து விடுதிக்குப் புலம்பெயர்ந்த இளம் நண்பர்களுக்கு, தகப்பன் என்ற நிலையிலிருந்து இன்றைய மாணவர்களுக்கு, பெற்றோர் என்ற நிலையில் இன்றைய […]

Read more

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள்

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள், துக்ளக் ரமேஷ், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.232, விலை ரூ.220. பத்திரிகைத்துறையில் நாற்பதாண்டு அனுபவம் உள்ள இந்நூலாசிரியர், தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகள் பலருடனான தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். முரசொலி அடியார் நடத்திய நீரோட்டம் பத்திரிகையில் பணியில் சேர்ந்ததில் தொடங்கி, மாஃபா பாண்டியராஜனுக்காக ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தது வரை நூலாசிரியரின் எல்லா அனுபவங்களுமே மிகவும் சுவையாக இருக்கின்றன. குறிப்பாக திமுகவைச் சேர்ந்த ரகுமான் கானும், அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியனும் பேரவை வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு வரை போனது, தனக்கு முதல்வராகும் […]

Read more

உப்புச்சுமை

உப்புச்சுமை,  ஐ.கிருத்திகா,  தேநீர் பதிப்பகம்,  பக்.168, விலை ரூ.160. கடந்த 20 ஆண்டுகளாக எழுதிவரும் நூலாசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். நாம் பலவிதமான மனிதர்களுடன் பழகுகிறோம். என்றாலும், பிறரின் வாழ்க்கையை நாம் நுட்பமாகக் கவனிப்பது இல்லை. ஆனால் நூலாசிரியர் மிக மிக நுட்பமாகக் கவனித்து, அவற்றின் அடிப்படையில் அற்புதமான சிறுகதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றில் 19 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். செருப்புத் தைப்பவரின் வாழ்க்கையைக் கூறும் செருப்புகளில் சிக்கிய வாழ்க்கை,  திருந்தவே மாட்டான் என்று கருதப்பட்ட பிக்பாக்கெட் திருடன் ராசு, செய்யாத குற்றத்தைச் செய்ததாக […]

Read more

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு – மு.நீலகண்டன்; கனிஷ்கா புத்தக இல்லம்,  பக்.202. விலை ரூ.180. தொன்மைக்கால பாண்டிய மண்டலம் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டதாக இருந்தது. கி.மு. 3 – ஆம் நூற்றாண்டில் பெளத்தம் பாண்டிய மண்டலத்துக்கு வந்திருக்கலாம் என்று கூறும் நூலாசிரியர், பாண்டிய மண்டலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பெளத்த சமயமும், சமண சமயமும் உயர்ந்தநிலையில் இருந்திருக்கின்றன; நாட்டின் பல பகுதிகளில் பெளத்த விகாரங்கள் அமைக்கப்பட்டன; புத்த பள்ளிகள் இருந்தன என்கிறார். அதற்கான பல வரலாற்று ஆதாரங்களை எடுத்துக் […]

Read more

இந்தியா – அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

இந்தியா – அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு, ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498 – 1765), ராய் மாக்ஸம், தமிழில் – பி.ஆர். மகாதேவன்; கிழக்கு பதிப்பகம், பக். 280; ரூ. 325;    ராய் மாக்ஸமின் தி தெப்ஃட் ஆஃப் இந்தியா நூலின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.இந்தியாவின் உப்புவேலி, ஆப்பிரிக்காவின் தேயிலைச் சுரண்டல் பற்றிய நூல்களுக்கான தரவுகளைத் தேடியபோது கண்டடைந்த தகவல்களின் அடியொற்றி மேற்கொண்ட தொடர் தேடுதல்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியா மீதான ஆக்கிரமிப்பு கால கறுப்புப் பக்கங்களை விவரிக்கும் இந்நூலில், ஐரோப்பிய ஆதிக்க சக்திகளின் […]

Read more

தருமபுரி முதல் பூடான் வரை

தருமபுரி முதல் பூடான் வரை – வரலாற்றுத் தடங்களின் வழியே ,  இரா.செந்தில்; டிஸ்கவரி புக் பேலஸ், பக்.104; விலை ரூ.120;  தருமபுரியில் மருத்துவராக உள்ள நூலாசிரியர், பயணங்களின் பயனை அறிந்தவர் மட்டுமல்ல; அதற்கான நெறிமுறைகளையும் அனுபவத்தால் உணர்ந்தவர். தனது பூடான் வரையிலான மகிழுந்துப் பயண அனுபவத்தை நூலாகத் தந்திருக்கிறார். தருமபுரியில் தொடங்கி நாட்டின் பல மாநிலங்கள் வழியே காரில் பயணித்து, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச்சூழல், விருந்தோம்பல், சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றை ஆங்காங்கே பதிவு செய்யும் நூலாசிரியரின் நுட்பம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்திய […]

Read more

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள்

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள்,  ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம்,  பக்.144;  விலை ரூ. 200.  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஆண்கள் அறுபது பேர்; பெண்கள் மூவர். காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசியார் மூவரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் நேரிடையாக (திருத்தொண்டத் தொகையில்) குறிப்பிடப்பட்டவர்கள். ஆனால், நாயன்மார்கள் பலரது வாழ்க்கையில் அவர்களுக்குப் பெருமளவில் உதவியதுடன், அவர்களை இறையருளுக்குப் பாத்திரமாக்கிய இல்லத்தரசிகள், சகோதரி, மகள் போன்றோரின் சிறப்புகளை உலகறியவில்லை என்பதுடன், நாம் உலகத்தாருக்கு உணர்த்தவில்லை என்பதுதான் உண்மை. அந்த அருஞ்செயலை இந்நூல் செய்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்று பெண் […]

Read more

அழகிய நதி

அழகிய நதி, பி. ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், விலைரூ.400.   வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர் தரம் பால். இந்தியா பற்றிய கனவுகளில் ஆழ்ந்த கருத்தை சிந்தித்தவர். இந்திய அளவிலும், உலக அளவிலும் அவரது ஆய்வுகளுக்கு வரவேற்பு இருந்துள்ளது. இந்த நுாலில், 18ம் நுாற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்திருக்கின்றன என்பதை மிகவும் விரிவாக ஆவணங்களின் தரவுகளோடு எடுத்துரைக்கிறார். கணிதவியல், வானவியல் சிறந்திருந்ததை பிரிட்டிஷார் ஆவணங்களிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கும்போது, பெருமையை உணர்கிறோம். இந்தியாவில் […]

Read more

ஒரு மோகினியின் கதை

ஒரு மோகினியின் கதை, பூவை.எஸ்.ஆறுமுகம், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.110 பத்து சிறுகதைகளைக் கொண்ட நுால். கதைகள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திச் செல்கின்றன. மரபு வழிக் கதை சொல்வனவாய் அமைந்துள்ளன. சந்தர்ப்பச் சூழ்நிலையில் பெண்கள் படும் அவலம், ஆணாதிக்கம் அவர்களை அடிமைப்படுத்த முயலுதல், பெண்களின் சமயோசிதம் முதலான போக்குகளில் கதை சொல்லப்படுகிறது. ஒரு மோகினியின் கதையில், தாசி அழகால் ஈர்க்கப்பட்டு வாழ்வில் குறுக்கிடும் இளைஞர்கள் பற்றியது. காதல் பொல்லாதது என்ற கதையில், மனைவியை மிகவும் நேசிக்கும் ஒருவன், இள வயது தோழியையும் விரும்புவதை சொல்கிறது. சில […]

Read more
1 2 3 5