இந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்

இந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன், ஆ. பூமிச்செல்வம், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்று புகழப்படும் நகுலனின் இயற்பெயர் டி.கே.துரைசாமி. கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் எழுத்தாளராக நிலை கொண்டவர். திருவனந்தபுரம், ‘மார் இவானியஸ்’கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். நகுலன், நவீனன், எஸ்.நாயர், ஜான் துரைசாமி என பல பெயர்களில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல் தொகுப்பு, மொழிபெயர்ப்பு என, நவீனத் தமிழ் இலக்கியத்தின் சகல தளங்களிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதியவர். ஆங்கிலத்திலும் […]

Read more

ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும்

ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும், முனைவர் ஜே.ஆர். லட்சுமி, மதன்மோனிகா பதிப்பகம், பக். 194, விலை 200ரூ. பன்முகத் திறமை கொண்ட நூலாசிரியர், கள ஆய்வு மேற்கொண்டு, வேளூர் வட்டம், ஜவ்வாது மலையில் அடங்கிய மொழலை கிராமம் முதல், கோவிலூர் வரை, 32 கிராமங்களில் கள ஆய்வு செய்து, அங்கு நிலவும் வாழ்வு முறை, தொழில், பண்பாடு, திருமணம், உணவு முறை, பேச்சு மொழி போன்ற எல்லாத் தகவல்களையும் திரட்டி வழங்கியுள்ளார். அறிமுகம் துவங்கி, கள ஆய்வுக்கு உதவியவர்கள் வரை, […]

Read more

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம்

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம், ஜெ. ஜெயஸிம்ஹன், கலைஞன் பதிப்பகம், பக். 225, விலை 218ரூ. ஜேகே என்கிற ஜெயகாந்தன் என்கிற எழுத்துச் சித்தரின் நூல் வடிவம் பெறாத பேட்டிகள், சொற்பொழிவுகள், கட்டுரைகள் என, பல்வேறு இதழ்களில் வெளிவந்தவற்றைத் தொகுத்து புத்தகமாக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். பொதுவுலக வாழ்க்கையிலும், எழுத்துலக வாழ்க்கையிலும் ஜெயகாந்தன் யார் என்பதைப் பற்றி, அவருடைய வாசகர்கள் அறிந்து கொள்ள இது உதவும். ஜெயகாந்தன் வலம் வராத துறைகளே இல்லை என்பதற்குச் சான்றாக, சினிமா, நாடகம், இலக்கியம், அரசியல், படைப்புலகம் என, […]

Read more

உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை

உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை, நவீனா அலெக்சாண்டர், அந்தாழை, பக். 142. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தி வந்த உலகத் திரைப்படங்களையே இன்னமும் நாம் பார்த்துக் கொண்டிருந்தால், தற்காலத்தில் உலக சினிமா அரங்கில் நடந்து கொண்டிருக்கும் சோதனை முயற்சிகளையும், முன்னேற்றங்களையும் எப்போது தெரிந்து கொள்வது? அதை இட்டு நிரப்புவது தான் இந்தப் புத்தகம்! கடந்த, ௨௦௦௦க்குப் பின் வந்த உலகின் அனைத்து சிறந்த திரைப்படங்களின் தொழில்நுட்ப (திரைக்கதை உத்தி, கேமரா டெக்னிக் மற்றும் எடிட்டிங்) விஷயங்களை உள்ளடக்கிய புத்தகம். மேலும், திரைக்கதையின் மூன்று விதமான அணிகள் […]

Read more

கவிதை ஒளி

கவிதை ஒளி, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 198, விலை 130ரூ. உரைநடை இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்துள்ள பேராசிரியர் இரா.மோகனின் 22 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தொன்மை இலக்கியத்திலும், புதுமைஇலக்கியத்திலும் நிறைய ஆய்வுக் கட்டுடிரைகள் எழுதியுள்ள இவர், இந்நூலில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ, சங்க இலக்கியம் பற்றிய கட்டுரைகள் தந்துள்ளார். ‘கவி ஆளுமைகள், கவிதைக் கீற்றுகள்’ என்ற தலைப்பிலான அத்தியாயங்களில், 13 கவிஞர்களின் சொல் ஆளுமையை, நேர்த்தியான ஒப்பீடுகளுடன் விளக்கி உள்ளார். ‘கேட்டிசின் வாழி தோழி’ என்ற குறுந்தொகை […]

Read more

இசைத்தமிழ்ச் சாரல்

இசைத்தமிழ்ச் சாரல், தஞ்சை ந.இராமதாசு, வாசன் பிரதர்ஸ், பக். 76, விலை 50ரூ. இயலுக்குடைய பாட்டுக்கு இசை நன்று என்பது அவ்வையின் அமுத வாக்காகும். இசையுடன் கூடிய பக்திப் பாடல்கள் என்னென்ன வகையான இன்பம் பயக்கும் என்பதை, நூலாசிரியரின் இசைப்பா தொகுப்பைக் கற்பார் அனைவரும் கண்டுணர்வர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. சுவாமி படங்களுடன் அலங்கரிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more

ஹாஷிம்புரா மே 22

ஹாஷிம்புரா மே 22, விபூதி நாராயண் ராய், இலக்கியச்சோலை, பக். 200, விலை 120ரூ. கடந்த, 1987, மே மாதம், 22 இரவில், கோரத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள், படுகொலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்கள் என, பலரையும் சந்தித்து இந்நூலை வடித்துள்ளார் ஆசிரியர். இந்தியாவில், உத்தர பிரதேசத்தில் மறைக்கப்பட்ட மாபெரும் சிறைப் படுகொலை சம்பவத்தைச் சொல்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more

பெண்களும் அவர்களின் குணங்களும்

பெண்களும் அவர்களின் குணங்களும், அமராவதிபுதூர் அ.மோகன், மணிமேகலை பிரசுரம், பக். 328, விலை 160ரூ. எது ஒன்று இல்லாவிட்டால் நம்மால் வாழ முடியாதோ அதைப் போற்றி வாழ்வதே அறிவுடைமை என்று படித்ததுண்டு. ஆணும், பெண்ணும் சமூகக் கட்டமைப்பின் தவிர்க்க முடியாத அங்கங்கள். ஆனால், இன்பமாய் செல்லும் இல்லறம் பலருக்குக் காலப்போக்கில் கசப்பதற்குப் பெண்களையே காரணமாகக் காட்டுகிறது இந்நூல். கூர்மையான பார்வைகளுக்குத் தெரியும் பெண்கள் பலவீனர்களோ, துணிச்சலற்றவர்களோ அல்ல என்பது. உலக வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளத்தின் வலிமையையும், உடை நாகரிகங்களையும் துணிச்சலோடு மாற்றிக் கொண்டு வருபவர்கள் […]

Read more

எமகாதக எத்தர்கள்

எமகாதக எத்தர்கள், கி.ஹரி கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், பக். 152, விலை 140ரூ. கற்பனைக்கு எட்டாத, பிரமிக்க வைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை. பொய், சூழ்ச்சி, வஞ்சகம், திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்று என்று இவர்கள் பயன்படுத்தாத வழிமுறைகளும், செய்யாத சட்டவிரோத செயல்களும் இல்லை என, எமகாதக எத்தர்களின் மோசடிகளைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், கே.எஸ். சுப்பிரமணியன், பக். 80, விலை 50ரூ. ஜெயகாந்தனின் முக்கிய பரிமாணங்களாக பரந்த மனித நேயம், மானுடத்தில் ஆரோக்கிய நம்பிக்கை, அறிவு நேர்மையில் விளைந்த கம்பீரம், மனித உள்ளத்தின் ஆழங்களில் நிழலாடும் மெல் அதிர்வுகளை படம் பிடிக்கும் லேசர் பார்வை, ஆன்மிகச் சாய்மானத்தை முன்னிறுத்திய அறிவியல் கண்ணோட்டம் உள்ளிட்ட சிறப்புகளைக் குறிப்பிடுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more
1 2 3 8