இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும்

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும், ப. முருகன், கங்காராணி பதிப்பகம், பக்.223, விலை ரூ.140. சங்க இலக்கியம், சித்தர் இலக்கியம், பக்தி இலக்கியம், அற இலக்கியம், இதழியல் இலக்கியம், கடித இலக்கியம், சொற்பொழிவு என மொத்தம் இருபது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கட்டுரை ‘அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மைக்ரோ சாஃட் நிறுவனம் தயாரித்துள்ள சொல் 39’ மென்பொருளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது 39’ என்ற தகவலையும், தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினொரு நீதி நூல்களுடன் ஔவையாரின் நான்கு நூல்களையும் சேர்த்து, அவை புலப்படுத்தும் […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம், பக்.136, விலை ரூ.80. அக்காலத்தில் பாலி ஆறு எனப்படும் பாலாற்றின் இரு கரைகளிலும் சைவ, வைணவ புண்ணிய திருத்தலங்கள் பல இருந்துள்ளன. அவற்றில் எத்தனையோ ஆலயங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இருப்பினும் இன்றைக்கும் நிமிர்ந்து நின்று தலப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருத்தலங்கள் அநேகம்! நவக்கிரகங்களில் அமைந்துள்ள புதன் பகவான், நவக்கிரகங்களில் ஒருவராக தம்மை மேம்படுத்திக்கொள்ள காஞ்சியில் உள்ள திருநெறிக்கரைக்காடு ஈசனை வேண்டிப் பெற்றுள்ளார். மற்றொரு அதிசயச் செய்தி, காஞ்சி, கோனேரிக்குப்பத்தில் அருள்புரியும் வீரட்டானேஸ்வரர் […]

Read more

கன்னடியர் மகள்

கன்னடியர் மகள், சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 100ரூ. இது வள்ளியூரைக் களமாகக் கொண்டு ஐவர் ராஜாக்கள் கதையைத் தழுவி எழுதப்பட்ட நாவல். இதை சுந்தரபாண்டியன் என்ற புனைப் பெயரில் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் எழுதியுள்ளார். கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் பண்பாடு, வீரம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக இந்த நாவல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 12/7/2017.

Read more

கேள்வி யுத்தம்

கேள்வி யுத்தம், எம்.அஸ்வின் ரோம் பொன் சரவணன், ரோமரிஷி வெளியீடு, விலை 55ரூ. தாய், தந்தை, குரு, நட்பு, எனது கிராமம் என்பன போன்ற பல்வேறு தலைப்புகளில் கவிதை. அதைத் தொடர்ந்து அது தொடர்பான விளக்கக் கட்டுரை என இந்த நூலைப் படைத்துள்ளார், 11-ம் வகுப்பு பயிலும் மாணவர் எம்.அஸ்வின் ரோம் பொன் சரவணன். ‘குண்டூசி விற்றாலும் பீரங்கி விற்றாலும் தொழில் தர்மம் வேண்டும்’ ‘குருவை நேசிக்காத எவரும் கல்வி மீது உரிமை கொண்டாட முடியாது’ என்பன போன்ற வாசிக்கத் தூண்டும் வரிகள். நன்றி: […]

Read more

சிந்துவெளி ரகசியங்கள்

சிந்துவெளி ரகசியங்கள், சு. சீனிவாசன், அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. சிந்து சமவெளி நாகரிகம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அங்கு புதைந்துபோன நகர அமைப்பைப் பார்க்கும்போது, நாகரிகத்தின் உயர்நிலையில் இருந்த சமூக அமைப்பு வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகிறது என்ற விவரங்களை இந்த நூலில் சு. சீனிவாசன் எளிமையாக எடுத்துக்கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 12/7/2017.

Read more

எலும்போடு ஒரு வாழ்க்கை

எலும்போடு ஒரு வாழ்க்கை,  பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ராணி மைந்தன், வானதி பதிப்பகம், பக்.224, விலை ரூ.275. முடநீக்கியலின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் எம்.நடராஜனின் வழிகாட்டுதலால், அவருடைய மகனான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், முடநீக்கியல்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி அத்துறையில் புகழின் உச்சியை எப்படி அடைந்தார் என்பது இந்நூலில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் ராணிமைந்தன் டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும், முடநீக்கியல் மருத்துவம் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் இந்நூலில் பதிவு செய்திருப்பது […]

Read more

பறவையியல்

பறவையியல், வ.கோகுலா, சி. காந்தி, ஜாசிம் பப்ளிகேஷன், பக். 200, விலை 300ரூ. செல்லப்பிள்ளைகளாய் வளர்த்தும், செல்லும் இடங்களிலெல்லாம் ரசித்தும் மக்கள் பரவசப்படும் பறவைகளின் பரிணாம வளர்ச்சிகளையும், கோட்பாடுகளையும் அவற்றின் உடலியக்கத்தில் உள்ள அற்புதமான அறிவியல் அருமைகளையும் உள்ளடக்கிய நூல் இது. பண்டைய காலம்தொட்டு தூதாக, அமைதியின் அடையாளமாக, இலக்கிய அங்கமாக, விளையாட்டுப் பொருளாக, பந்தயம் நடத்த, ஆரூடம் பார்க்க, புராணப்புனைவுகளில் இறை வாகனங்களாக, மூதாதையரின் நினைவூட்டிகளாக வாழ்ந்து, இன்றும் நாகரிக அடையாளமாகவும், தேசிய சின்னமாகவும் விளங்கும் பறவையினத்தின் வரலாறு பயில பயில வியப்பைத்தரும். […]

Read more

ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்

ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம், மோஹன் ஜகந்நாத் யாதவ்-தமிழில்: சிவசங்கரி, ஷீரடி சாயி டிரஸ்ட், பக். 384, விலை: குறிப்பிடப்படவில்லை. ஸ்ரீ சாயி சரித்திர தரிசனத்தை தமிழில் பக்திபூர்வமாக மொழி பெயர்த்துத் தந்துள்ளார் எழுத்தாளர் சிவசங்கரி. இந்நூலில் மகான் சாயி பாபாவின் அருமை பெருமைகளை, அவரின் அருள் திறத்தை ஆன்மிகக் கருவூலத்தை தனித்தனி அத்தியாயங்களில் தனிச் சிறப்போடு தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சாயிபாபா உள்ளிட்ட மகான்களும் அவதார புருஷர்களும் ஏன் யாசகம் பெறுகின்றனர் என்பதற்கான அருமையான, அரிதான விளக்கம் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஞானிகளின் கதைகளைக் கேட்க […]

Read more

வாழ்வில் வெற்றி பெற இதிகாசங்கள்

வாழ்வில் வெற்றி பெற இதிகாசங்கள், கவிஞர் பாரதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை புதிய பார்வையில் ஆய்வு செய்து கவிஞர் பாரதன் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட நூல். சரளமான நடை, சிந்தனைக்கு விருந்தளிக்கும் கருத்துகள். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம்

ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம், பெரில் கிரேன், கண்மணிசுப்பு, கண்ணதாசன் பதிப்பகம், பக்.128, விலை 80ரூ. நோய்கள் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. நோய்கள் வந்து முற்றிடும் வரை பலர் அதற்கு முக்கியத்துவம் தந்துவிடுவதில்லை. இன்றைய அறிவியல் யுகத்திலும், உலகளாவிய பலவற்றை அறிந்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களில் பலர் தங்கள் உடல் உறுப்புகளையோ, அவற்றின் இயக்கத்தையோ, பலவீனத்தையோ அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மருத்துவத்தின் மீதான அச்சமும் செலவினங்களும் அச்சம் தருவதாகவும் அமைகின்றன. ஆனால், கி.மு., காலத்திலேயே நம்மவர்கள் உடல் தகுதியில் நாட்டமுள்ளவர்களாக இருந்து, ஒவ்வொரு உறுப்புக்கும் உகந்த மூலிகை மருத்துவத்தில் வல்லுனர்களாக […]

Read more
1 2 3 4 8