அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள்

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள், தமிழில்: வி. வி. பாலா, தடம் பதிப்பகம், பக்.120, விலை ரூ.100, லண்டனிலிருந்து ஆயுதங்கள் வாங்கி அதனை இந்தியாவில் விநியோகித்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போர் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சாவர்க்கர் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார். நாசிக் சதி வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனையும் பெற்ற சாவர்க்கர், அந்தமான் சிறைக்கு மாற்றப்படுகிறார். அந்தமான் சிறைக் கைதிகள் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உறவினர்களுக்கு கடிதம் எழுத முடியும் என்ற கடுமையான விதி அமலில் இருந்தது. […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக்.1040, விலை ரூ.1000. தென்காசி, தூத்துக்குடியை உள்ளடக்கி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை புராண விளக்கங்கள், வரலாற்றுத் தரவுகளுடன் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் உற்பத்தி குறித்து மிக விரிவாக பதிவு செய்திருப்பதோடு மட்டுமல்லாது அது கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலான அணைகள், சிற்றாறுகள், கால்வாய்கள், கோயில்கள், மூலிகைகள் உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவருக்கு எட்டையபுரத்தில் தர்கா உள்ளது. இந்த தர்காவை […]

Read more

அகநானூற்றின் அமைப்பும் சிறப்பும்

அகநானூற்றின் அமைப்பும் சிறப்பும், சோ.ந. கந்தசாமி, மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.175. அகநானூறை எழுவகை நோக்கில் ஆராயும் முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது. முதல் இயலில் அகநானூறு பற்றிய அடிப்படைத் தகவல்கள் உள்ளன. இரண்டாவது இயல், பாடிய புலவர்களின் பாடல்களை தொகை வகை செய்துள்ளது. தமக்குரிய ஊரின் பெயரையும், பெற்றோரின் பெயரையும் முன்னொட்டாகக் கொண்ட புலவர்கள், பாடியோர் வரிசையில் அரசரும், பெண்பாற் புலவர்களும் என இவ்வியல் அமைந்துள்ளது. “அகநானூற்று அக மாந்தர்’ எனும் மூன்றாவது இயலில் முதன்மை மாந்தர்கள், துணை மாந்தர்கள் ஆகியோர் நாடகப்பாங்கில் […]

Read more

ஆறங்கம்

ஆறங்கம் (அரசியல் நாவல்), ஆர். நடராஜன், ஆதாரம்வெளியீடு, பக்.208, விலை குறிப்பிடப்படவில்லை; அரசியல் உலகில் ஜாம்பவான்களாக வலம் வந்த ஒவ்வொருவரும், அரசியல் – அரசியல்வாதிகள் குறித்த அவர்களின் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல சாமானியர்களும் நகைச்சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவையெல்லாம் இந்நூலுக்கு வலு சேர்த்திருக்கின்றன. நாட்டை ஆளும் தலைவனுக்கு (அரசர்) தேவையான ஆறு உறுப்புகள் என்று சொல்லக்கூடிய படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவற்றையும், ஆறு வேதாங்கங்களையும் சுற்றி நூல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இந்நூலுக்கு ஆறங்கம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் […]

Read more

பிராணாயாமம்

பிராணாயாமம், வேணு சீனிவாசன், குறிஞ்சி, விலைரூ.160. நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும் பிராணாயாமம் என்ற மூச்சுப்பயிற்சி செய்முறையை எளிமையாக விளக்கும் நுால். பிறவி வேண்டும் என்ற தலைப்பில் துவங்கி, நோய் நீக்கும் பிராணாயாமம் என்ற தலைப்பு வரை, 31 கட்டுரைகள் உள்ளன. மிக எளிய முறையில், மூச்சு பயிற்சி செய்யும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சித்தர்களின் பாடல்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன. ஆசிரியர் நேரில் அமர்ந்து விளக்குவது போல் உள்ளது. முத்திரைகள் பற்றியும் ஒரு அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக கருத்தை […]

Read more

லவகுசா

லவகுசா, தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோயில்களின் அதிசயத்தக்க வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய செல்லப்பாவின் இரண்டாவது புத்தகம். கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுகுட்டிகளம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு. இக்கதையில் மணமுடிக்கும் போது சீதாவின் வயது, கானகம் சென்றபோது வயது, மகப்பேறின் போதுள்ள வயதை குறிப்பிடுவது அரிய தகவல்.பொறுமையின் சிகரமான சீதா ஏன் பொங்கி எழுந்தாள்… வானளாவ புகழ்ந்து ராமகதைகள் சொல்லிய அவளது […]

Read more

சுரங்க நகரம்

சுரங்க நகரம், மு.நடேசன், செம்மண் பதிப்பகம், விலைரூ.150. நெய்வேலி நிலக்கரி நிறுவன வளர்ச்சி வரலாற்றை, பணி அனுபவ பின்புலத்துடன் விவரிக்கும் நுால். மாற்றங்களை ஆவணப்படுத்தும் உள்ளூர் வரலாற்றுப் பதிவாக உள்ளது. எளிய மொழி நடை வாசிக்க ஏதுவாக உள்ளது. சுரங்கம் துவங்கியதில் இருந்து, வளர்ந்த விதம், உழைப்பு, அதை நெறிப்படுத்தும் நிர்வாகச் செயல்பாடு என கவனமுடன் பதிவாகிஉள்ளது. மொத்தம் 22 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. போட்டோ மற்றும் ஆவண ஆதாரங்கள் உரிய இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. சுரங்கம் தோண்ட பயன்பட்ட இயந்திர படங்கள், பணி நடைமுறை […]

Read more

பறையும் பாவையும்

பறையும் பாவையும், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.110. புத்தகத்தில் பக்கங்களைத் திருப்பினால், பாடல்களும், அதன் அர்த்தமும் வரிசையாக உள்ளன. ‘திருப்பாவைக்கு நிறைய புத்தகங்கள் அர்த்தத்துடன் வந்துவிட்டதே…’ என்ற எண்ணம் முதலில் எழத் தான் செய்கிறது. ‘இவ்வளவு தானா… விசேஷம் ஒன்றும் இல்லையே…’ என்ற எண்ணத்துடன், 43ம் பக்கத்தைத் திருப்பும்போது தான், ஆசிரியரின் சிறப்பம்சம் துவங்குகிறது. பாவை என்றால் என்ன, பாவை நோன்பு எங்கு தோன்றியது, ஆண்டாள் யார், பறைக்கு ஆண்டாள் ஏன் முக்கியத்துவம் கொடுத்தாள், கண்ணன் காலத்திலேயே இந்த நோன்பு இருந்ததற்கான ஆதாரம் என […]

Read more

புதுவைப் புயலும் பாரதியும் காற்றென வந்தது கூற்றம்

புதுவைப் புயலும் பாரதியும் காற்றென வந்தது கூற்றம், முனைவர் . ய. மணிகண்டன், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.125. புதுவையில் பெரும்புயல் பற்றி, பாரதியின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு நுால். செய்திக் கட்டுரையாக, கவிதையாக, நிவாரணப் பணியாளராக என பன்முகமாக வெளிப்பட்டுள்ளது. புதுவையில் பாரதியார் வசித்தபோது, எத்தனையோ முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் பெரும் பாதிப்பு ஏற்படுத்திய புயல் ஒன்றும் வீசியது. அது தொடர்பான நிகழ்வுகளை செய்திக் கட்டுரைகளாக வடித்துள்ளார் பாரதி. கவிதைகளிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டுள்ளது. புயல் வீசுவதற்கு முந்தைய தினம் புதிய வீட்டில் […]

Read more

சபாஷ் சாணக்கியா – பாகம் 2

சபாஷ் சாணக்கியா – பாகம் 2. சோம வீரப்பன், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், விலைரூ.170.   வாய் சொல்லில் வீரர், யாருக்கு உதவக்கூடாது, சொந்த காலில் நிற்பது, கடல் கடந்து பொருள் ஈட்டுவதன் தேவை, யாரை எதற்கு மதிக்க வேண்டும், வெற்றி எப்போது கைகூடும், பெரியோர்களின் ஆலோசனை ஏன் அவசியம், நம் பலம், பலவீனம் எது, சேவல், கழுதையிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை போன்ற வாழ்வியல் அடிப்படையை விவரிக்கிறது இந்த நுால்.   எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நான் […]

Read more
1 2 3 8