அகநானூற்றின் அமைப்பும் சிறப்பும்

அகநானூற்றின் அமைப்பும் சிறப்பும், சோ.ந. கந்தசாமி, மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.175. அகநானூறை எழுவகை நோக்கில் ஆராயும் முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது. முதல் இயலில் அகநானூறு பற்றிய அடிப்படைத் தகவல்கள் உள்ளன. இரண்டாவது இயல், பாடிய புலவர்களின் பாடல்களை தொகை வகை செய்துள்ளது. தமக்குரிய ஊரின் பெயரையும், பெற்றோரின் பெயரையும் முன்னொட்டாகக் கொண்ட புலவர்கள், பாடியோர் வரிசையில் அரசரும், பெண்பாற் புலவர்களும் என இவ்வியல் அமைந்துள்ளது. “அகநானூற்று அக மாந்தர்’ எனும் மூன்றாவது இயலில் முதன்மை மாந்தர்கள், துணை மாந்தர்கள் ஆகியோர் நாடகப்பாங்கில் […]

Read more