மருதநாயகம் என்ற மர்மநாயகம்

மருதநாயகம் என்ற மர்மநாயகம், அமுதன், மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.300. ஐம்பதாண்டு காலப் பணியனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளரான தனசேகரன், அமுதன் என்ற புனைபெயரில் தமிழர்களின் சரித்திரச் சிறப்புகளை எளிய தமிழில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். தஞ்சை பெரிய கோயில், அங்கோர்வாட், ஆதிச்சநல்லூர், கீழடி என்ற வரிசையில் அடுத்து அவர் மருதநாயகம் என்றழைக்கப்பட்ட யூசுப் கானின் வரலாற்றை எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட மறுத்த கலகக்காரர் மருதநாயகத்தை ஐந்தாறு மாதங்களாய் முயன்றும் வீழ்த்த முடியாமல், வஞ்சகத்தால் அதை நிறைவேற்றிக்கொண்டனர். தூக்கிலிட்டும் ஆத்திரம் தீராதவர்களாய் […]

Read more

முரசொலி சில நினைவுகள்

முரசொலி சில நினைவுகள், முரசொலி செல்வம், சீதை பதிப்பகம், பக்.526, விலை ரூ.300. முரசொலி பதிப்பாளரும் ஆசிரியருமான முரசொலி செல்வம், இளம் தலைமுறை வாசகர்களுக்காக எழுதிய 100 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது. விலைவாசிப் போராட்டம்(1962), ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் (1965) எமர்ஜென்சி (1975) அதன் அடக்குமுறைகள் – சோதனைகள் – சென்சார் கெடுபிடி, எம்.ஜி.ஆர். காலத்திய ஆட்சிமுறை, அதில் எழுந்த பிரபலமான குற்றச்சாட்டுகளான திருச்செந்தூர் கோயில் உண்டியல் திறப்பின்போது அறங்காவலர் சுப்பிரமணியப்பிள்ளை கொலை, அதனை வெளிக்கொணர போடப்பட்ட பால் கமிஷன், அதன் அறிக்கையை […]

Read more

மனிதம் புனிதம்

மனிதம் புனிதம், நா.பெருமாள், ஐஸ்வர்யா பப்ளிகேஷன்ஸ், பக்.208, விலை ரூ.150. மனிதர்கள் மனிதத்தன்மையோடு வாழும்போதுதான் மனிதம் புனிதம் பெறும் என்பதை விளக்கும்விதமாக, இந்நூலில் அடங்கியுள்ள 21 கட்டுரைகளும் உள்ளன. தனிமனிதன் தன்னை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறும் கட்டுரைகளும், புறநிலையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் அநாதை இல்லங்களிலும் தள்ளிவிடாமல் பிள்ளைகள்காப்பாற்ற வேண்டும். பிள்ளைகளைச் சார்ந்திருக்காமல் வாழ பெற்றோர் முதலில் இருந்தே சேமிக்கத்தொடங்க வேண்டும். அவ்வாறு சேமித்தவற்றில் தங்களுக்குத் தேவையானது […]

Read more

தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும்

தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும், ச.சீனிவாசன்; பாலாஜி இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 164, விலை ரூ.200. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களாகக் கருதப்படும் அருந்ததியர் சமூகத்தின் வரலாற்றைக் கூறும் நூல். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை அருந்ததியர் பேசுவதால் அவர்கள் அந்த மொழிபேசும் நிலப்பகுதியைச்சேர்ந்தவர்கள் அல்லர்; அவர்கள் தமிழ்நாட்டின் ஆதி குடிகள் என்று இந்நூல் கூறுகிறது. அதற்கான ஆதாரங்களையும் முன் வைக்கிறது. இதுவரை எழுதப்பட்ட வரலாறு ஆதிக்க சக்திகளின் வரலாறாகவே உள்ளது. அடித்தட்டு மக்களின் வரலாற்றை மக்களின் வாய்மொழி வரலாறு, கல்வெட்டுகள், கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், […]

Read more

பேச்சில்லாக் கிராமம்,

பேச்சில்லாக் கிராமம், ம.பெ.சீனிவாசன்; சந்தியா பதிப்பகம், பக்.216; விலை ரூ.215. நூலாசிரியர் வைணவத் தமிழில் மட்டுமல்ல, சங்கத் தமிழிலும், சைவத் தமிழிலும் கூட ஆழங்காற்பட்டவர். அவரது ஆழ்ந்த, அகண்ட, நுண்ணிய ஆராய்ச்சிப் பார்வை, ஐம்பது கட்டுரைகளாகியிருக்கின்றன.<br>அவற்றுள் வைணவத் தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் “தாயைக் குடல் விளக்கம் செய்த’, “இரண்டு கன்றினுக்கு இரங்கும் -ஆ’, “ஓடக்காரனுக்கு நட்டாற்றில் கூலி’, ” தமராக்கி – ஒரு கிராமத்தின் பெயர்’, “கொள்கொம்பா? கொழுகொம்பா?’, “நிலவின் நிழலோ உன் வதனம்’, “இந்திரனின் விருந்தாளி’, “நாணி நின்றன பிடியும் களிறும்’, “நீ […]

Read more

ஆலய வழிபாடு

ஆலய வழிபாடு, தொகுப்பாசிரியர்: சத்யவதனா; சத்யா பதிப்பகம், பக். 198; விலை ரூ.150. ஆலயங்களின் சிறப்பம்சங்கள், விளக்கேற்றுதல், விரதம் இருத்தல், தானம் அளித்தல், வழிபாட்டு முறைகள், மந்திர மகிமை போன்றவை குறித்து விளக்கமாக எழுதப்பட்டிருக்கும் நூல். முதல் சிவபக்தன், விளக்கேற்றும் ரகசியம், சென்னையில் பஞ்சபூதக் கோயில்கள், கேதார கெளரி விரதம், புரட்டாசி விரதம், நவராத்திரி, மகாளய அமாவாசை என்பன உள்ளிட்ட 30 தலைப்புகளில் ஆன்மிக கட்டுரைகளும், 6 ஆன்மிக சிறுகதைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. சிதம்பரம், காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகியவை பஞ்ச பூதத்தலங்களாக […]

Read more

மொழியின் நிழல்

மொழியின் நிழல், ந.பெரியசாமி, தேநீர் பதிப்பக வெளியீடு, விலை: 180. படைப்பின் ஊற்றுக்கண்ணைத் தேடும் முயற்சி கவிதை, நாவல், சிறுகதைத் தொகுப்புகள், நிகழ் நாடகங்கள், சுயசரிதங்கள், மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் பற்றிக் கவிஞர் ந.பெரியசாமி எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு ‘மொழியின் நிழல். இந்தப் புத்தகங்கள் தரும் அனுபவங்கள் பற்றி நிதானமாகப் பேசுவதோடு, அந்தந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல், சமூகப் போக்கையும் பதிவுசெய்யும் எழுத்து முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் பெரியசாமி. புத்தகங்கள் தரும் அனுபவங்களை இரண்டு விதங்களில் இவர் வெளிப்படுத்துகிறார். முதலாவதாக, தன்னுடைய அனுபவம் சார்ந்த நிகழ்வுகளின் வழியாக விவரிப்பது. […]

Read more

யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில்

யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில், முனைவர் சுடர்க்கொடி ராஜேந்திரன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150 தேடலே மனித வாழ்வின் ஆரம்பம். தேடலை துவங்கும் போது தடைகளை தாண்டும் பக்குவம் வேண்டும். அதை பழகினால், வெற்றி காணலாம் என்பதை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். மதுரை தினமலர் நாளிதழில் தொடராக எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு புத்தகமாகியுள்ளது. மொத்தம், 30 கட்டுரைகள் உள்ளன. தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு நுால்களை கற்ற அறிவுடன், அனுபவ அறிவை குழைத்து எழுதப்பட்டுள்ளது. முன்னேறத் துடிப்போருக்கு வளம் தரும் […]

Read more

தேவேந்திரர்களின் கதைகள்

தேவேந்திரர்களின் கதைகள், தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.120. வேளாண்மையை தொழிலாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் பரம்பரையாக செவிவழிச் செய்தி கதைகளை புரிந்து, ஆய்வு ஏடுகளுக்கு பயன்படுத்திய பெருமக்களின் குறிப்புகளோடு வெளிவந்திருக்கும் நுால். நெல்லை முதலில் பயிராக கண்டவர்கள் என்பதுடன், தேவர்களின் தலைவன் தேவேந்திரன் தான் மழை மற்றும் உழவுத் தொழிலின் கடவுள் எனச் சொல்கிறது. அதனால் தான் பல பிரிவுகளாக பிரிந்திருந்தாலும், தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றனர். வட்டார வழக்கு மொழிச்சொற்களில் அமைந்துள்ளது சிறப்பு. – சீத்தலைச்சாத்தன். நன்றி: தினமலர்,8/8/21 இந்தப் […]

Read more

சில தருணங்களும் சில நிகழ்வுகளும்

சில தருணங்களும் சில நிகழ்வுகளும், டாக்டர் கல்யாணி நித்யானந்தன், வெளியீடு: இந்து தமிழ் திசை, விலை: ரூ.200. எண்பது வயதைக் கடந்துவிட்ட டாக்டர் கல்யாணி நித்யானந்தன் கரோனா ஊரடங்கு காலத்தில், ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் தன் வாழ்வனுபவங்களையும் மருத்துவப் பணி அனுபவங்களையும் முன்வைத்து எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு இது. சென்னையில் பிறந்து, வளர்ந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்றவர் கல்யாணி. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாட்டின் முதல் மாரடைப்பு நோய் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். 20 ஆண்டுகளுக்கும் மேல் […]

Read more
1 2 3 76