சித்தர்களின் மனிதச் சார்பியல் கொள்கை

சித்தர்களின் மனிதச் சார்பியல் கொள்கை, குருதேவ் முத்துக்கொத்தள மாரியப்ப செல்வராஜ், நர்மதா பதிப்பகம், பக். 378, விலை ரூ.300. இன்றைய நவீன அறிவியலின் அடிப்படைக் கோட்பாடாக அமைந்தது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு. ஆற்றலின் மதிப்பை அளவிட உதவும் இயற்பியல் கொள்கையான பொது சார்பியல் கோட்பாடு, பொருளின் நிறையையும் ஒளிவேகத்தின் இருமடங்கையும் பெருக்கினால் கிடைப்பதே ஆற்றலின் மதிப்பு என்று அளவிடுகிறது. இதை சுருக்கமாக E = mc2 என்ற சூத்திரமாக எழுதுவது வழக்கம். இது ஒரு வடிவியல் கணிதச் சமன்பாடாகும். அண்டத் தோற்றத்தை […]

Read more

ஜீவன் லீலா

ஜீவன் லீலா, குஜராத்தியில் – காகா காலேல்கர், தமிழில் – பி.எம்.கிருஷ்ணசாமி, பக்.480, விலை ரூ.385. குஜராத்தியில் “லோகமாதா’ எனும் பெயரில் வெளியான நூலின் தமிழாக்கமே “ஜீவன் லீலா’. இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக காணப்படும் அருவி, ஆறு, ஏரி இவற்றோடு சேர்ந்த கடல், கடல்-ஆறு சங்கமம், கடற்கரை குறித்து 70 தலைப்புகளில் நூலாசிரியர் இந்நூலில் விவரித்துள்ளார். ஒவ்வொரு தலைப்பிலும் தனது பயண அனுபவங்களோடு அதன் பின்புலமாக உள்ள புராண – இதிகாச குறிப்புகள், வரலாறு, அங்கு வாழும் மக்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட […]

Read more

மகிழ்ச்சிச் சிறகுகள்

மகிழ்ச்சிச் சிறகுகள், முனைவர் இளசை சுந்தரம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.270 ‘தினமலர்’ நாளிதழில் வெளியான ‘என் பார்வை’ என்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். அண்மையில் மறைந்த எழுத்தாளர் இளசை சுந்தரத்தின் கடைசி நுால். முன்னுரையிலேயே ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை விதைக்கிறார். காலம் எனும் சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அதில் நாம் சிற்பமா… இல்லை சிதறி விழும் கற்களா? சிற்பமாக வேண்டுமானால் சாதனை செய்ய வேண்டும். பூமியை படுக்கையாக்குவதும், பாதையாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. […]

Read more

பொருநை – ஆதிச்சநல்லூர்

பொருநை – ஆதிச்சநல்லூர் (அறிக்கைகளும், அருங்காட்சியகங்களும்), முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், பக்.383, விலை ரூ.375. ஆதிச்சநல்லூரின் தாழிகளை, இருக்கும் இடத்திலேயே பார்த்து மகிழவும், வரவிருக்கும் மத்திய அகழாய்வுத் துறை அருங்காட்சியகத்தின் விளக்கங்களையும், திருநெல்வேலியில் அமைக்கப்படவுள்ள மாநில அகழாய்வுத் துறை அருங்காட்சியகம் குறித்தும் நூல் எடுத்துரைக்கிறது.  நூலுக்கு மெருகேற்ற பல்வேறு காலங்களில் ஆதிச்சநல்லூர் குறித்து வெளியிடப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிக்கையின் முழு வடிவங்களை ‘க்யூ ஆர்’ கோடு மூலம் பார்க்கும் வசதி உள்ளது. இதில் முனைவர் சத்தியபாமாவின் அறிக்கையும் (2004), அதே ஆண்டில் […]

Read more

தேசியமும் திராவிடமும்

தேசியமும் திராவிடமும், துரை கருணா, எம்.ஜி.ஆர். பாசறை, பக் – 200, விலை ரூ. 300. தேசியமும் திராவிடமும் – என்ற இந்த நூலில் பெரும் பகுதி திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, ஆட்சி, அதிகாரம் குறித்து எழுதப்பட்டுள்ளது. மொத்தமாக 39 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தேசியம் என்று வரும் போது, காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆரம்ப கால சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி, வாஞ்சிநாதன் வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடங்குகிறது. “வாஞ்சியின் தீவிரவாதச் செயலும் அவரது உயிரிழப்பும் தனக்கு உவப்பிலை’ என்று வ.உ.சி.யின் அறிக்கையை எடுத்துக்காட்டி […]

Read more

பனை ஓலையும் பழந்தமிழும்

பனை ஓலையும் பழந்தமிழும், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.140, விலை ரூ.125. பனை ஓலையும் பழந்தமிழும் என்ற நூலின் தலைப்புக்கேற்ப பனை ஓலை தொடர்பான அனைத்துத் தகவல்களும், பழந்தமிழர் வாழ்க்கை தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன. மன்னர் காலத்துக்கு முன்பிருந்து மனிதர்களிடையே தகவல் தொடர்புகள் எவ்வாறு இருந்தன, அதில் ஓலைச்சுவடிகளின் பங்கு என்ன என்பதை நூல் தெளிவாக விளக்குகிறது. பனை ஓலை தொடர்பான கட்டுரையில் பனை மரத்தின் பயன்கள், பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள், பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை, பனை பொருள்களின் விற்பனை என […]

Read more

கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன், வழக்கறிஞர் சுமதி, சந்தியா பதிப்பகம், பக்.192, விலை ரூ.200. வெகுஜன மாத இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தொழில் ரீதியாக தான் கண்டவற்றை 27 தலைப்புகளில் கதை சொல்வது போல சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். பெற்றோர் விவாகரத்து பெற்றுப் பிரியும் நிலையில், பிள்ளைகள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனர்; குடிகாரக் கணவனால் பாதிக்கப்படும் பெண்களின் எதிர்காலம்; வயதான தாய்-தந்தையை பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள்; தற்கொலை செய்து கொள்ள நினைப்போர்; தாய்-தந்தை பேச்சைக் கேட்டு கணவனை விட்டுப் பிரியும் பெண்களின் நிலைமை; கட்டாயத் […]

Read more

அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலை:ரூ. 160. நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ் நாவல்கள், சென்னையில் இருந்த பீப்பிள்ஸ் பூங்கா, அந்தக் கால சினிமாவின் புகழ்பெற்ற நடிகைகள், தீபாவளிக்கு வெளியாகி சாதனை படைத்த சினிமா போன்ற மலரும் நினைவுகள் சுவாரசியமாகத் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 13/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031315_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அடிமை முறை ஒழிப்பும் ஆபிரகாம் லிங்கனும்

அடிமை முறை ஒழிப்பும் ஆபிரகாம் லிங்கனும், வி.என்.ராகவன், அலைகள் வெளியீட்டகம், விலை:ரூ. 110. அமெரிக்காவில், கறுப்பினத்தவரின் அடிமை வாழ்வுக்கு எதிரான அடிமை முறை ஒழிப்பும் குறித்த முதல் தமிழ் நூலாக இது காணப்படு கிறது. இளமைப் பருவத்தின்போதும், அரசியலில் ஆபிரகாம் லிங்கனும் ஈடுபட்டபோதும் ஆபிரகாம் லிங்கன் எதிர் கொண்ட சவால்கள், அவற்றை மன உறுதியுடன் சந்தித்து அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்தது எவ்வாறு என்பது விளக்கமாகத் தரப்பட்டு இருக்கிறது. அவர் பதவி ஏற்றதும் நடைபெற்ற உள்நாட்டுப் போர், 1862-ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப்பட்டு வெளியான […]

Read more

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், சாத்தான்குளம் அ.இராகவன், அழகு பதிப்பகம், விலை 220ரூ. தமிழர்களின் நாகரிகத் தொட்டில் என்று வர்ணிக்கப்படும் ஆதித்த நல்லூர் நாகரிக வரலாற்றை தமிழில் முதல் முறையாக விளக்கமாக ஆதித்தநல்லூரும் | எடுத்துக் கூறியவர் என்ற பெருமையைப் பெற்ற பொருநைவெளி நாகரிகமும் இந்த நூலின் ஆசிரியர், தமிழர்களின் ஆதிகால நாகரிகத் தன்மை குறித்து வியப்பான தகவல்களைத் தந்து இருக்கிறார். ஆதித்தநல்லுர் நாகரிகம், சிந்துவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதையும், இரும்பை முதன் முதலாகக் கண் டுபிடித்தது தமிழர்களே என்பதையும் சான்றாதாரங்களுடன் தெரிவித்து இருக்கிறார். ஆதித்தநல் […]

Read more
1 2 3 4 5 88