மகிழ்ச்சிச் சிறகுகள்

மகிழ்ச்சிச் சிறகுகள், முனைவர் இளசை சுந்தரம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.270 ‘தினமலர்’ நாளிதழில் வெளியான ‘என் பார்வை’ என்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். அண்மையில் மறைந்த எழுத்தாளர் இளசை சுந்தரத்தின் கடைசி நுால். முன்னுரையிலேயே ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை விதைக்கிறார். காலம் எனும் சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அதில் நாம் சிற்பமா… இல்லை சிதறி விழும் கற்களா? சிற்பமாக வேண்டுமானால் சாதனை செய்ய வேண்டும். பூமியை படுக்கையாக்குவதும், பாதையாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. […]

Read more

மகாத்மா 200

மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. மகாத்மா காந்தியைப் பற்றி பொதுவாகச் சில விஷயங்களே தெரிந்தவர்களுக்கு, அவரது எளிமை, அன்பு, அஹிம்சை, ஒழுக்கம், நேர்மை, சகிப்புத்தன்மை, எதையும் சரியாகச் செய்யும் குணம் என்று காந்தியின் எல்லா நற்குணங்களையும் சித்திரித்துக் காட்டுவது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் இருநூறு. படிக்கப் படிக்க காந்திஜி மீது மதிப்பு கூடுகிறது. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027224.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

மகாத்மா 200

மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. அதிகாரம் ஈரோட்டில் இருக்கிறது! தேசப்பிதா மகாத்மா காந்தி, மோகன் தாஸ் ஆகப் பிறந்து 150ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. பாபுஜியைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சிறிதளவேனும் அவரைப் பின்பற்ற முயல்கிறவர்களின் எண்ணிக்கை தான் நாளும் அருகிக்கொண்டே வருகிறது. முனைவர் இளசை சுந்தரம், பாபுஜியின் வாழ்க்கையிலிருந்து 200 அரிய நிகழ்வுகளைத் தொகுத்துப் பலாப்பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துத் தந்திருக்கிறார். ஒரு சமயம் பாபுஜியின் பவுண்டன் பேனா காணாமல் போய்விட்டது. […]

Read more

ஆன்மிகம் அறிவோம்

ஆன்மிகம் அறிவோம், முனைவர் இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. பூஜை, சடங்குகளை செய்யும் போது அதற்கான காரண, காரியங்களை அறிந்து செய்தால், வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்; பக்தி பரவசம் பெருகும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 21/5/2017.   —-   காலத்தை வென்ற ஜோதிட சித்தர்கள், கவிதா, விலை 200ரூ. ஜோதிடக் கலையின் மூலவர்கள் சித்தர்கள். சித்தர்கள் விவரித்துள்ள பஞ்சபட்சி சாஸ்திரம், ஆரூடம், கைரேகை சாஸ்திரம், வான சாஸ்திரம் போன்ற சோதிடக் கலையைப் பற்றிய முழு விளக்கங்களை […]

Read more

வாசலுக்கு வரும் நேசக்கரம்

வாசலுக்கு வரும் நேசக்கரம், முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ. எழுத்தாளரும், பேச்சாளருமான இளசை சுந்தரத்தின் சிந்தனையில் உருவான, 15 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. கட்டுரையில் கருத்து சொல்லும் வேளையில், அதனோடு நகைச்சுவையை கலந்து கலகலப்பாக்குவது இவரது பாணி. அன்றாடம் நாம் சந்திக்கும் வாழ்வியல் சவால்கள், அதற்கான தீர்வுகள், போகிற போக்கில் எளிதாய் எப்படி இவற்றை எதிர்கொள்வது என, எளிமை சொற்களில் தந்திருக்கிறார். தன் கருத்திற்கு கூட்டு சேர்க்க, குட்டி, குட்டி கதைகளையும் கட்டுரைகளில் கலந்து இருக்கிறார். […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தியாகசீலர் கக்கன்ஜியைப் பற்றிய ஒரு விரிவான நூல் வெளியாவது இதுதான் முதல் முறை. அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்ட இந்நூலாசிரியர் மிகவும் சிரமப்பட்டிருப்பதை இந்நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. மிக எளிய குடும்பத்தில், அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர், விடுதலைப் போராட்ட வீரராகவும், சிறந்த கொள்கைப் பிடிப்புள்ளவராகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும், நிர்வாகத் திறமை மிக்கவராகவும், இறுதிவரை எளிய வாழ்க்கையையே விரும்பியவராகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உயர்ந்து விளங்கியுள்ளது பாராட்டத்தக்கது. இவரின் பிறப்பு […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, பக். 240, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-232-1.html காமராஜரைப் பற்றி அருமையான நூல் எழுதிய பெரும் பேச்சாளர் இளசை சுந்தரம், கக்கன்ஜி பற்றி எழுதியுள்ள அபூர்வ நூல் இது. யார் யாருக்கோ நூல்கள் உள்ள இந்த நாட்டில் தன்னலமற்ற தேசத் தொண்டர் கக்கனுக்கு அதிக நூல்கள் இல்லையே என்பது என் ஆதங்கம் என்ற முன்னுரையுடன் துவங்கியுள்ள நூலாசிரியர், நூறு கட்டுரைகளாக தந்துள்ளார். கக்கன் பற்றி அவ்வளவாக பதிவுகள் […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, பக். 240, விலை 100ரூ. எளிய குடும்பத்தின் பிள்ளை கக்கன். 12ஆம் வயதில் பண்ணை வேலைக்குப் போனவர். ஆனால் கல்வியில் ஆர்வம் அதிகம். படித்தார். படிப்படியாக முன்னேறினார். மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், காங்கிரஸ் தலைவர், அரசியல் சட்ட அமைப்புச் சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் என்று மிகப் பெரிய பதவிகளையெல்லாம் வகித்தவர் என்றாலும் தமக்காக எதையும் சேர்த்து வைக்காதவர். பதவிகளை இழந்து வறுமையில் வாடியபோதும், தம் வாழ்க்கைப் பாதையில் தடம் […]

Read more

வானொலி வளர்த்த தமிழ்

வானொலி வளர்த்த தமிழ், முனைவர் இளசை சுந்தரம், மீனாட்சி புத்தகம் நிலையம், பக். 150, விலை 260ரூ. காசிநகர்ப் புலவன் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம் என மகாகவி பாரதியார் கண்ட கனவை நனவாக்கிய கருவி வானொலி. அந்த வானொலி பற்றிய ஆய்வு நூலை, பாரதி பிறந்த எட்டையபுரத்து மண்ணின் மைந்தர், பாரதி வேடமிட்டு உலக மேடைகளில் உலா வரும் பேச்சாளர், எழுத்தாளர் இளசை சுந்தரம் எழுதியிருப்பது பொருத்தமானது. தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். வானொலியின் வரலாறு, […]

Read more