இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம், சிகரம் ச செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், பக்கம் 520, விலை 520ரூ. சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற பல வழக்குகளை நடத்தி வெற்றி பெற்ற இந்நூலாசிரியர் இலக்கிய உலகிலும் சிகரம் செந்தில்நாதன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். தமிழ் இலக்கியத்திற்கு இதுவரை 30 நூல்களை இயற்றியுள்ளார். தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி பலரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை தொகுத்துள்ளார். இந் நூலின் முகப்புக் கட்டுரையில் கட்டுரையிலே தொன்மையான நாகரிகத்திற்கும் பண்பாட்டுக்கும் உரிய இந்தியாவில் வடக்கே சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் தெற்கே […]

Read more

பஞ்ச தந்திரக் கதைகள்

பஞ்ச தந்திரக் கதைகள், தொகுப்பாசிரியர் முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், பக். 520, விலை 380ரூ. பஞ்ச தந்திரக் கதைகள் கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் தெற்குப் பகுதியை அமரசக்தி என்ற அரசன் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தும், அவர்கள் எந்தத் திறமையும் அற்றவர்களாக இருந்தது அரசனுக்கு கவலையாக இருந்தது. அவர்களை 6-மாதத்தில் எல்லாத் திறமைகளும் கொண்டவர்களாக உருவாக்குவதாக, விஷ்ணுசர்மா என்ற அந்தண ஆசிரியர் பொறுப்பேற்கிறார். அதன்படி கல்வியறிவு அற்ற அவர்களை, […]

Read more

சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெரல் பப்ளிஷர்ஸ், பக். 220, விலை 140ரூ. ஓய்வு பெற வங்கி அதிகாரியான இந்நூலாசிரியர், சிறுகதைகள், நாடகம், பேட்டிகள், சமூகப் பிரச்னைகள் குறித்த கட்டுரைகள் என்று பல பத்திரிகைகளிலும் எழுதியுள்ளதோடு, அவற்றை தொகுத்து பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இசையை பற்றியும், இசைக்கலைஞர்களைப் பற்றியும் இவர் எழுதிய இரண்டாவது நூல் இது. கர்நாடக இசையில் ஆயிரக்கணக்கான ராகங்கள் உள்ளன என்றும், அவற்றை எல்லாம் முழுமையாக அறியும் இசை ஞானம் தனக்கு இல்லை என்றும் எழுதியுள்ளது எப்படி என்று எண்ணத் […]

Read more

திருக்குறள் குறளின் எளிய குரல்

திருக்குறள் குறளின் எளிய குரல், டாக்டர் நா.வெங்கட், தி ராமன்ஸ் புக்ஸ், பக். 280, விலை 40ரூ. திருக்குறளுக்கு 19 ஆம் நூற்றாண்டு முடிய பதின்மர் உரைகளே இருந்தன. 20 ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை ஆயிரக்கணக்கான உரைகள் உருவாகி, உலகமெங்கும் சென்றுவிட்டன. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், உலகின் மூத்த மொழியாகிய தமிழில் இதை இயற்றினாலும், இதை ஒரு குறிப்பிட்ட மொழியினருக்கும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கும், குறிப்பிட்ட நாட்டினருக்குமாக இன்றி, உலகின் அனைத்து மக்களுக்குமான ஒழுக்கம் நிறைந்த வாழ்வியலைக் கற்பிக்கும் உலகப் பொதுமறையாக ஈர்த்துள்ளார். […]

Read more

மேடை நயம்

மேடை நயம், சொல் அரசு ஹபீபுல்லா, காமா பதிப்பகம், பக். 300, விலை 200ரூ. தனது மிகச் சிறந்த மேடைப் பேச்சால், சொல் அரசு என்ற பட்டத்தைப் பெற்ற இந்நூலாசிரியர், ஏற்கெனவே மேடைச் சிதறல் என்று பிரபலமானவர்களின் மிகச் சிறந்த மேடை பேச்சுக்களை கொண்ட ஒரு நூலையும், மேடை நடை என்று மேடை பேச்சிற்கு வழிகாட்டியாக ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். அவற்றுக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து, இந்நூலையும் வெளியிட்டுள்ளார். இதில் பல வகையான மேடைப் பேச்சாளர்களின் சொல் நயத்தினை, படித்து ரசிக்கும்படியாகவும், […]

Read more

தமிழகத்தில் முஸ்லிம்கள்

தமிழகத்தில் முஸ்லிம்கள், எஸ்.எம்.கமால், அடையாளம் பதிப்பகம், பக். 180, விலை150ரூ. வரலாற்று ஆய்வாளரான இந்நூலாசிரியர், தாம் ஆற்றிய வரலாற்றுப் பணிகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தவிர விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், மாவீரர் மருது பாண்டியர், ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், உள்ளிட்ட 18 நூல்களை இயற்றியவர். அந்த வகையில் தமிழக முஸ்லிம்களைப் பற்றி வரலாறு, இலக்கியம், செப்பேடு போன்ற தளங்களிலிருந்து அரிய தகவல்களைத் திரட்டி இந்நூலை இயற்றியுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகத்தொடர்புகள், அதற்குப் […]

Read more

கவி காளிதாசரின் மகா காவியங்கள்

கவி காளிதாசரின் மகா காவியங்கள், சி.எஸ். தேவநாதன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 496, விலை 350ரூ. வால்மீகி ராமாயணம், மகாபாரதம், திருமந்திரம், உபநிடதம் பேசும் உண்மை போன்ற குறிப்பிடத்தக்க நூல்களை எளிய உரைநடையில் அளித்த இந்நூலாசிரியர், இதுவரை 300 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவற்றில் ‘நம் தேசத்தின் கதை’ என்ற நூல் 2013 ல் தமிழக அரசின் விருதைப் பெற்றது. அந்த வகையில் இந்நூலில் கவி காளிதாசர் இயற்றிய உலகப் புகழ்பெற்ற மகா காவியங்களான மேகதூதம், குமார சம்பவம், ரகுவம்சம், அபிஞான சாகுந்தலம் […]

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன், நாடக வடிவம், சக்தி வெங்கடாசலம் வயிரவன், முல்லை பதிப்பகம், பக். 296, விலை 200ரூ. அமரர் கல்கியின் படைப்புகளில் தலைசிறந்தது ‘பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் கதை. அதன் இலக்கிய ஆழமும், கற்பனை வீச்சும், வண்ணத் தமிழும் படிப்பவர்களை பரவசப்படுத்தும். 2400 பக்கங்களைக் கொண்ட 5 பாகங்களான அந்த நாவலை, 296 பக்கங்களில் நாடக வடிவில் தந்துள்ளார் இந்நூலாசிரியர். இவர் இயல், இசை, நாடகத்தின் மீது பற்றுக் கொண்டு, தனது கல்லூரி நாட்களிலேயே நாடகங்களை எழுதி இயக்கும் ஆற்றலைப் பெற்றவர். […]

Read more

சித்த வைத்திய முறைகள்

சித்த வைத்திய முறைகள், தொகுப்பாசிரியர் லாவண்யா, மேகதூதன் பதிப்பகம், பக். 184, விலை 120ரூ. அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், அலோபதி மருந்துகளை வியாபாரம் செய்து, பெருமளவில் சம்பாதிக்கச் சதித்திட்டம் தீட்டிச் செயல்படுகின்றன. இந்நிலையில் அலோபதி டாக்டரான c.அம்பிகாபதி M.B.B.S., D.L.O.. இந்தியாவின் பாரம்பரிய சித்தா மருத்துவத்தின் சிறப்பை உணர்ந்து, அதையும் கற்று, அதன் அடிப்படையிலேயே பல வருடங்களாக மக்களுக்கு மருத்துவப் பணியாற்றி வருகிறார். இது கவனிக்கத் தக்க, பாராட்டத்தக்க விஷயமும் கூட. தவிர, இந்த […]

Read more

பட்டினத்தார் தத்துவம்

பட்டினத்தார் தத்துவம், கு. பொன்மணிச்செல்வன், செந்தமிழ் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. காதறுந்த ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே என்ற ஞான வரிகளுக்கும், பட்டினத்தாருக்கும் உள்ள தொடர்பு தமிழகம் அறிந்தது. அத்தகைய சித்தர், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழநாட்டின் பெருநகரமாகவும், மிகப்பெரிய துறைமுகமாகவும் விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்தில், செல்வம் கொழிக்கும் முதன்மை வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருவெண்காடர். இவர் மாடமாளிகை, அயல்நாட்டு வணிகம், இன்பமான குடும்ப வாழ்க்கை, ஏராளமான பணியாளர்கள்… என்று செல்வச் செழிப்போடு வாழ்ந்தார். ஒருநாள் […]

Read more
1 2 3 21