சித்த வைத்திய முறைகள்
சித்த வைத்திய முறைகள், தொகுப்பாசிரியர் லாவண்யா, மேகதூதன் பதிப்பகம், பக். 184, விலை 120ரூ.
அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், அலோபதி மருந்துகளை வியாபாரம் செய்து, பெருமளவில் சம்பாதிக்கச் சதித்திட்டம் தீட்டிச் செயல்படுகின்றன.
இந்நிலையில் அலோபதி டாக்டரான c.அம்பிகாபதி M.B.B.S., D.L.O.. இந்தியாவின் பாரம்பரிய சித்தா மருத்துவத்தின் சிறப்பை உணர்ந்து, அதையும் கற்று, அதன் அடிப்படையிலேயே பல வருடங்களாக மக்களுக்கு மருத்துவப் பணியாற்றி வருகிறார். இது கவனிக்கத் தக்க, பாராட்டத்தக்க விஷயமும் கூட.
தவிர, இந்த மருத்துவம் நன்கு வளர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சித்த மருத்துவ நூல்களையும் ‘சித்த மருத்துவம் பெட்டகம்’ என்ற மாத இதழையும் வெளியிட்டு வருகிறார். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு நோய்களுக்கான மருத்துவ முறைகளையும், அபூர்வமான செய்திகளையும் தொகுத்து இந்நூலை உருவாக்கி உள்ளார் ஹோமியோபதி மருத்துவரும், ஹிப்னாடிஸ நிபுணருமான இந்நூலின் தொகுப்பாசிரியர்.
அதன்படி இந்நூலில் தலைப்பகுதியில் உள்ள கண்கள் மற்றும் முடிக்கு ஏற்படும் பிரச்சினைகள், வயிற்றிலுள்ள கல்லீரல், மண்ணீரல், மலச்சிக்கல், புழுக்கள் போன்ற பிரச்னைகள், முப்பெரும் நோய்களான எய்ட்ஸ், பால்வினை நோய், ஹிபாடைடிஸ் – பி ஆகியவற்றுக்கான தீர்வுகள், பெண்களுக்கான நோய்கள், ஆண்களின் பலவீனங்கள், குழந்தைகளுக்கான பிரச்னைகள், இருதய நோய்கள், நீரழிவு நோய், புற்றுநோய், தோல்நோய்கள்… என்று பல்வேறு நோய்களும், அவை உருவாகக் காரணங்களும், அவற்றிற்கான மருத்துவ முறைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள், மூலிகைகள், ஆசனங்கள் சிறப்பான மருத்துவச் செய்திகள் என்று பல விஷயங்களும் எளிய தமிழ்நடையில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.
-பரக்கத்
நன்றி: துக்ளக், 17/7/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818