சுட்டிக் கதைகள்

சுட்டிக் கதைகள், நீலாவதி, சுருதிலயம், விலை: ரூ.125. அஞ்சல் துறையின் முன்னாள் ஊழியரான நூலாசிரியர் தன் பெயர்த்திக்குக் கதைகள் சொல்வதற்காக நிறைய சிறார் கதைகளைப் படித்து, அதன் மூலம் தானே சிறார் கதைகளைப் படைக்கத் தொடங்கினார். அப்படி அவர் இயற்றிய 16 சிறார் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் சிறாருக்கான நீதிக் கருத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

நூறு புராணங்களின் வாசல்

நூறு புராணங்களின் வாசல், முபீன் சாதிகா, நன்னூல் பதிப்பகம், பக்.128, விலை ரூ.130. நூலாசிரியர் தனது முகநூலில் அவ்வப்போது எழுதி வந்த குறுங்கதைகளின் தொகுப்பு இந்த நூல். மொத்தம் நூறு கதைகள் உள்ளன. ஃபிளாஷ் ஃபிக்ஷன் அல்லது மைக்ரோ ஃபிக்ஷன் என்று கூறப்படும் வகையைச் சார்ந்தவை. ஈசாப்பின் நீதிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஜென் கதைகள் போன்ற வடிவத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகளில் யதார்த்தம் போன்ற அம்சங்களுடன் அதீத கற்பனையும் கலந்து தரப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 3333-ஆம் ஆண்டில் நவீன மனிதர்கள் தனி கிரகத்தில் […]

Read more

இளையோரே, இனியவை கேளீர்!

இளையோரே, இனியவை கேளீர்! (நன்னெறிக் கதைகள்), பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.360. பொதுவாகவே பலருக்கு நல்ல விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில் அடைத்தோ தருவதைப் போன்று, பல நல்ல கருத்துகளை குட்டிக் கதைகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த நுாலின் ஆசிரியர். அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்ததைப் போன்று, இந்த நுாலில் உள்ள இரு பக்க கதைகளில் ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். நுாலின் தலைப்பு, ‘இளையோரே […]

Read more

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும், முனைவர் ஆ.புஷ்பா சாந்தி, காவ்யா, பக்.279, விலை ரூ.280. சங்க இலக்கியங்களை அணுகப் பண்பாட்டுச் சூழலியல் பெரிதும் துணை புரிகிறது. தற்போது பல துறைகளிலும் சூழலியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், சங்க காலமும் சரி, பண்டைத் தமிழ்ச் சமூகமும் சரி இயற்கையோடு இயைந்த வாழ்வையே கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் செழிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் சூழலியல் கோட்பாட்டாளர்கள். தற்போது உலகம் பல பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. […]

Read more

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம், முனைவர் செளந்தர மகாதேவன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 நுாலாசிரியர் முனைவர் சவுந்தர மகாதேவனின், ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற புத்தகம், திருக்குறளின் சாறு பிழிந்து, சுவைமிகு ரசமாக படைக்கப்பட்டிருக்கிறது. இன்பம், துன்பம், நம்பிக்கை, நட்பு என எந்த பக்கம் திரும்பினாலும், வழிகாட்டியாய், கலங்கரை விளக்கமாய் திருக்குறள் நமக்கு ஆறுதல் தருகிறது என்பதை சொல்லியிருக்கிறார். உலகப் பொதுமறையான திருக்குறளை விளக்க உரையுடன் தராமல், சிறு சிறு குட்டிக் கதைகளை சொல்லி, அவற்றின் வழியே திருக்குறள் கருத்துக்களை விளக்கும் […]

Read more

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலைரூ.230 குழந்தைகளுக்கான வீர, தீர கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். தமிழ் பேராய விருது பெற்றது. படுக்கையறையில் குழந்தைகளை குதுாகலமூட்ட, சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாட்டி வடை சுட்ட கதையில் துவங்கி, அரசரும் பன்றியும் என்ற குறுங்கதையுடன் முடிகிறது. ஏற்கனவே கேட்ட கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் பேராய விருது பெற்று நுாலாக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 25/10/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000006539_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்

கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம், சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், விலை 200ரூ. அக்காலம் மட்டுமல்ல; எக்காலத்திலும் சிறுவர்களுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். கதை சொல்வதும், கதை கேட்பதும் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கம். நாம் ஒவ்வொருவரும் அத்தகைய இளமைப்பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தான். இளமைப் பருவத்தில் கதை கேட்பதும், அக்கதையினுாடே பேசும் விலங்குகள், பறவைகள், தேவலோகம், தேவதைகள், அசுரர்கள் எனக் கற்பனை உலகில் மிதப்பதும் இனிமையான கனாக்காலம். உலக இயலைத் தெரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களிலிருந்து மீள்வதற்கும், வாழ்க்கைச் சூழலில் […]

Read more

பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள்

பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள், இராஜகோபாலன், மணிமேகலைப் பிரசுரம், பக். 256, விலை 135ரூ. பிரபல தனியார் கம்பெனிகளில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியரின் பொழுதுபோக்கு, புத்தகம் படிப்பதும், சேகரிப்பதும்தான். பல நூல்களைப் படித்து அறிய வேண்டிய கதை வடிவிலான பல்வேறு செய்திகளை இந்த ஒரு நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூலில் உள்ள எந்தவொரு குட்டிக்கதையும் இவரது கற்பனையில் உதித்ததல்ல. எல்லாமே உலக அளவில் தோன்றிய பல மகான்கள், மேதைகள், பெரியோர்கள், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், சூஃபிகள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள், […]

Read more

குட்டிக் கதைகளும் சுவையான விஷயங்களும்

குட்டிக் கதைகளும் சுவையான விஷயங்களும், அரிமா கே. மூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. மேடைப் பேச்சாளர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும்போது, இடையிடையே குட்டிக் கதைகள் சொன்னால்தான் கூட்டம் கலையாமல் இருக்கும். அத்தகைய குட்டிக்கதைகளுடன், சுவையான துணுக்குச் செய்திகளும் இதில் நிறைந்துள்ளன. இதில் உள்ள குட்டிக்கதைகளும், துணுக்குகளும் மொத்தம் 339. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விஷயங்கள். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

அழகான அம்மா

அழகான அம்மா, (ரஷ்ய சிறார் கதைகள்), யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 352, விலை 290ரூ. குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆசையா? குழந்தைகளின் உலகம் மிக இனிமையானது. சாதாரண விஷயங்களையும் கதையாக சொல்லும் போது, ஈர்க்கும் பருவம் அது. வாழ்க்கையின் புரிதலை, கதை வழியாக கேட்பதால் ஆனந்தமடையும் வயது. அதனால் தான், வீடியோ காட்சிகளாகவும், ஆடியோ பேச்சுகளாகவும் வடிவம் எடுத்துள்ள கதைகளுக்கும் மவுசு குறையவில்லை. ‘டிவி சேனலில்’ ஒளிபரப்பாகும், பொம்மை படங்களின் கதைகள், இந்த தலைமுறை குழந்தைகளை ஈர்க்கின்றன. இருந்தாலும், […]

Read more
1 2