ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம்
ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.290. பற்றில்லாத நிலை என்பது தன்னை மறத்தல். உடம்பை, உணவை மறந்து போதல். தெய்வக்குழந்தையாக பிறந்து வளர்ந்த ஸ்ரீசேஷாத்ரியும் அந்த நிலையை இளம்வயதிலேயே அடைந்தார். பதின்ம வயதில் தந்தை, தாத்தாவை இழந்து பின்னர் தாயை இழந்த நிலையில், தாய் சொன்ன அருணாச்சலம் என்ற வார்த்தையை மட்டும் பற்றுக்கோடாக கொண்டார். உணவை மறந்த உடல் நலிந்தாலும் அருணாச்சல மந்திரத்தால் உள்ளம் உறுதியடைந்தார். அப்படியே ஊருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சேஷாத்ரி கதையை படிக்க […]
Read more