உணர்வுகள் மோதும் பொழுது
உணர்வுகள் மோதும் பொழுது, மாந்துறை பாபுஜி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.220
நெஞ்சை தொடும் சம்பவங்கள் அடங்கிய நாவல். அற்புத ராஜ் – லுார்து குடும்பத்தினர் நெடுங்காலத் தோழமை உடையவர்கள். லுார்துவின் மகன் ஜோசப் நல்ல பையன். திடீரென்று திருத்த முடியாத குடிகாரன் ஆகிறான். அவன் ஏன் குடிகாரன் ஆனான் என்பது தான் கதையை வளர்க்கிறது.
காதல் தோல்வி அவனை குடிகாரன் ஆக்குகிறது. காதலித்த பெண் கிடைத்ததும் திருந்தி நல்ல மனிதன் ஆகிறான். சம்பவங்களை அடுக்கிச் செல்லும் முறையிலும் கதை மாந்தர் உரையாடலிலும் நேர்த்தி உள்ளது.
– எஸ்.குரு
நன்றி: தினமலர், 29/12/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818