மங்களநாயகி ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி

மங்களநாயகி ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி; ஆசிரியர் : ஸ்ரீதரன் மணி, வெளியீடு: கிரி டிரேடிங் ஏஜன்சி , விலை 150/- தாயின் அம்சங்களாக விளங்கும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை, ஆண்டாள், சத்தியபாமா, வேதவதி, பத்மாவதி பெருமை கூறும் நுால். மஹிஷாசுரனை அழிக்க, ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி அவதாரம் எடுப்பதும், போரில் தேவி மஹிஷாஸுரமர்தினி என்ற பெயர் பெறுவதும் விளக்கப்பட்டு உள்ளது. திருப்பாவைப் பாசுரங்களை விளக்கி, அதன் மூலம், ஸ்ரீதேவியின் புகழ் விவரிக்கப்பட்டுள்ளது. நரகாசுரன் வதம் வரலாறு விளக்கப்பட்டுள்ளது; தீபாவளி கொண்டாடுவதின் நோக்கமும் அருமையாக கூறப்பட்டு உள்ளது. இறுதிப் பகுதியில், […]

Read more

திரைக்கலைஞர்களும் அரிய தகவல்களும்(தொகுதி 1)

திரைக்கலைஞர்களும் அரிய தகவல்களும்(தொகுதி 1), கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 200ரூ. தமிழ சினிமா நடிகர் – நடிகைகள் பற்றிய முழு விவரத்தையும் இந்நூலில் கொடுத்துள்ளார் ஆசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து. நடிகர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் பாடிய பாட்டுகள், இசை அமைத்தவர்கள், டைரக்ட் செய்தவர்கள், உடன் நடித்தவர்கள் முதலான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. விவரங்களை சேகரிக்க நூலாசிரியர் பட்ட சிரமங்கள் பக்கத்துக்கு பக்கம் காண முடிகிறது. சினிமா ரசிகர்கள் விரும்பி ரசிக்கக்கூடிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 16/3/2016. சப்தரிஷி நாடி சோதிட […]

Read more

சங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள்

சங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள், முனைவர் மா. அமுதா, காவ்யா, விலை 320ரூ. இந்நூல் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூல். கணவன் – மனைவியிடையே நிகழும் அன்பு வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது அக இலக்கியங்கள். இவ்விருவர்களிடையே உண்டாகும் சிறு சிறு உணர்வு மோதல்களைக் களைந்து இணைத்து வைக்க வருபவர்கள் வாயில்கள்’ தூதுவர்களான இவர்கள் உறவின் உன்னதத்தை எடுத்துரைத்து இருவரையும் இணைத்து வைக்கவே முற்படுவர். உளச் சிக்கல்களை தீர்த்திட உதவும் வாயில்களைப் பற்றிய உளவியல் ஆய்வை, மிகவும் சுவாரஸ்யமாக செய்திருக்கிறார் முனைவர் மா. […]

Read more

புத்தகங்கள் பார்வைகள்

புத்தகங்கள் பார்வைகள், வெளி ரங்கராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. வாசிப்பின் வழியே விரியும் உலகம் நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என கலை, இலக்கியம் சார்ந்த புத்தகங்களைப் பற்றிய வெளி ரங்கராஜனின் கருத்தோட்டங்களை உள்ளடக்கியது இந்தப் புத்தகம். வெளி ரங்கராஜன், கலை இலக்கிய தளத்தில், பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர். தான் வாசித்த புத்தகங்கள் பற்றிய தனது விமர்சனத் தன்மையற்ற எளிய மதிப்பீடுகளை நம் முன் வைக்கிறார். புத்தகங்களைப் பற்றிய அறிமுகமாகவும், வாசிப்பவர்களுக்குத் […]

Read more

தினகரன் பொங்கல் மலர்

தினகரன் பொங்கல் மலர், தினகரன், பக். 240, விலை 100ரூ. மும்பை தாராவியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை உடன், இந்த மலர் துவங்குகிறது. கடந்த ஆண்டு 1500 குடும்பங்கள், தாராவியில் ஒரே இடத்தில் பொங்கலிட்டு, கொண்டாடி உள்ளனர். வெள்ளம், வறட்சி என தமிழகம் அவதிப்பட்டு வரும் நிலையில், கோவில் குளங்களில் நீர் சேமிப்பது குறித்த முன்னோர் தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரை வரவேற்கப்படத்தக்கது. கர்நாடக சங்கீத வாத்தியங்களில் ஒன்றான கடம், தயாரிக்கப்படுவது குறித்த கட்டுரை, நாய்கள் கண்காட்சி குறித்த, தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, முனைவர் எஸ். வெங்கடராஜலு, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 75ரூ. சமகால அரசியல் வரலாற்றை விளக்குவதும் பாமர மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகிய இரண்டு நோக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தன்னலமற்ற தொண்டாற்றி அரசியலில் நேர்மையுடன் வாழ்ந்த தமிழகத் தலைவர்களின் பொது வாழ்க்கை வழி சமகால அரசியல் அலசப்பட்டுள்ளது. அடுத்தாக, நாட்டில் நல்லாட்சி நிலவ ஊடகங்களின் பங்கு எத்தகையது என்று விளக்கப்பட்டுள்ளது. அரசியலில் ஈடுபடுவோரின் தகுதிகள், பணிகள், தேவையான சீர்திருத்தங்கள் பற்றி எடுத்துரைப்பது நாட்டிற்கு நன்மை சேர்ப்பதாக உள்ளது. […]

Read more

ஒரு யாகம் ஒரு தியாகம்

ஒரு யாகம் ஒரு தியாகம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், விலை 90ரூ. சினிமா உலகில் ஏறத்தாழ 1000 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாதனை படைத்தவர் ஆரூர்தாஸ். அவர் எழுதிய ஒரு யாகம் ஒரு தியாகம், பரிகாரம், வாத்தியாரய்யா ஆகிய 3 குறுநாவல்கள் அடங்கிய நூல். ஒரு யாகம் ஒரு தியாகம் என்ற கதையில் அமைச்சர் ஆளவந்தாரை அவரால் பாதிக்கப்பட்ட பலரும் பழி வாங்கத் துடிக்கிறார்கள். அந்தச் சம்பவங்களை அவருக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். மேலும் பரிகாரம், வாத்தியாரய்யா […]

Read more

சொல்லில் அடங்காத உலகம்

சொல்லில் அடங்காத உலகம், பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் பராக்கா. அந்தப் படத்தின் காட்சிகள் வழியாகத் தான் அடைந்த அனுபவத்தை வார்த்தைகளில் கடத்துவதற்கு நூலாசிரியர் செய்திருக்கும் முயற்சியே இந்த நூல். பக்கத்துக்குப் பக்கம் விதவிதமான உணர்ச்சிகள், அறைகூவல்கள், போராட்டங்கள், பொழுதுபோக்குகள், விழிப்புணர்வுகள், பழிவாங்கல்கள், மனித நேயத்தின் அவசியம் இப்படிப் பல அம்சங்களும் இந்நூலில் உள்ளன. புத்தகத்தை முழுவைதுமாக வாசித்து முடிக்கும்போது, பங்கேற்பாளராக இல்லாவிட்டாலும், இந்தப் புத்தகச் சாளரத்தின் மூலமாக உலகின் பார்வையாளராக நாம் […]

Read more

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார், வெ. மு.ஷா. நவ்ஷாத், ஓவியம் பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 110ரூ இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என்று பல துறைகளில் சாதனையாளராகத் திகழ்ந்தவர் பாக்யராஜ். இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் அவரது பாணியில் அமைந்த திரைப்படங்கள் தமிழக மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தன என்றால் அது மிகையாகாது. முந்தானை முடிச்சு தொடங்கி பாக்யராஜ் இந்திய 24 திரைப்படங்களின் துணை கொண்டு, அவரது அறிவுகூர்மையையும் விரிவாக அலசியிருக்கிறார் நூலாசிரியர். மேலும் ஒவ்வொரு திரைப்படத்தை இயக்கும்போதும் அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள், கடைபிடித்த […]

Read more

கவிஞர்களின் பார்வையில் காரிகைகள்

கவிஞர்களின் பார்வையில் காரிகைகள், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 156, விலை 95ரூ. பெண்ணின் உரிமை ஓட்டம் இன்னமும் முடியவில்லை பெண் வீட்டிலும், நாட்டிலும் எவ்வாறு போற்றப்படுகிறாள் என்பதை ஏட்டில் கவிஞர்கள் எப்படி தீட்டியுள்ளனர் என்று இந்த நூல் காட்டுகிறது. உலகில் முதன்முதலில், தாய் ஆட்சிதான் இருந்தது. தாயின் வழியே குடும்பமும், கூட்டங்களும் அறியப்பட்டன. ஆனால், ஆண் ஆதிக்கத்தால் பிறகு தலை கீழாக மாறிவிட்டன என்று துவங்குகிறது ஆய்வுப் பயணம். வீட்டுப் பராமரிப்பு, பயிரிட்டு பாதுகாத்தல், பிள்ளைப் பேறு என, பெண்ணின் […]

Read more
1 2 3 8