திரைக்கலைஞர்களும் அரிய தகவல்களும்(தொகுதி 1)
திரைக்கலைஞர்களும் அரிய தகவல்களும்(தொகுதி 1), கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 200ரூ.
தமிழ சினிமா நடிகர் – நடிகைகள் பற்றிய முழு விவரத்தையும் இந்நூலில் கொடுத்துள்ளார் ஆசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து. நடிகர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் பாடிய பாட்டுகள், இசை அமைத்தவர்கள், டைரக்ட் செய்தவர்கள், உடன் நடித்தவர்கள் முதலான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. விவரங்களை சேகரிக்க நூலாசிரியர் பட்ட சிரமங்கள் பக்கத்துக்கு பக்கம் காண முடிகிறது. சினிமா ரசிகர்கள் விரும்பி ரசிக்கக்கூடிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 16/3/2016. சப்தரிஷி நாடி சோதிட நூல் ரிஷப லக்னம், ஸ்ரீபிரபா பப்ளிகேஷன்ஸ், விலை 700ரூ. நமக்கு பிற்காலத்தில் ஏற்படப் போகும் நன்மை தீமைகளை முன்கூட்டியே அறிய உதவும் ஓர் உன்னதமான சாஸ்திரம் ஜோதிட சாஸ்திரமாகும். இந்த சாஸ்திரம், வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் சப்த ரிஷ நாடி (சப்த ரிணி வாக்கியம்) மிகத் தொன்மையானது. சிறப்பானது. இந்த நூலை சுவாமி பிஷோபானந்தா சேகரித்து உரை எழுதியுள்ளார். இந்த நூலில் ரிஷப லக்ன ஜாதகங்கள் இடம் பெற்றுள்ளன. முன் பின் ஜென்ம விவரம், ஜாதக பலன்கள், தோஷ விவரங்கள், பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. ஜோதிட விற்பன்னர்களுக்கும், ஜோதிடத்தைக் கற்பவர்களுக்கும், ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்த நூல் மிகவும் பயனளிக்கும். நன்றி: தினத்தந்தி, 16/3/2016.