பா.ராகவனின் புத்தகங்கள்

அரசியல் 1. பாக். ஒரு புதிரின் சரிதம் 2. டாலர் தேசம் 3. நிலமெல்லாம் ரத்தம் 4. மாயவலை 5. அல் காயிதா: பயங்கரத்தின் முகவரி 6. ஹிஸ்புல்லா 7. ஓம் ஷின்ரிக்கியோ 8. ஈ.டி.ஏ. 9. ஜமா இஸ்லாமியா 10. தாலிபன் 11. கொலம்பிய போதை மாஃபியா 12. ஹிட்லர் 13. ஐ.எஸ்.ஐ: நிழல் அரசின் நிஜ முகம் 14. 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி 15. பர்வேஸ் முஷாரஃப் 16. மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும் 17. ஆர்.எஸ்.எஸ்: வரலாறும் அரசியலும் 18. […]

Read more

ஜுலியஸ் சீசர்

ஜுலியஸ் சீசர், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், விலை 110ரூ. அலெக்சாண்டரைப்போல் ஒரு மாவீரர் ஜுலியஸ் சீசர், ரோமாபுரி மன்னர். கிளியோபட்ராவின்மனம் கவர்ந்து அவளை மணந்தவர். இறுதியில் ரோமாபுரியின் பாராளுமன்றத்தில், அவர்களுடைய ஆதரவாளர்களாலேயே படுகொலை செய்யப்படுகிறார். ஜுலியஸ் சீசர் வரலாற்றை சுவையாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார் ஜனனி ரமேஷ். சீசர் காலத்து ரோமாபுரி பற்றி அவர் கூறியுள்ள தகவல்களில் சில- உடல் ஊத்தோடு பிறக்கும் குழந்தைகளை பெற்றோரை கொன்றுவிடலாம். இரவு நேரத்தில் கூட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை. நீதிபதிகள் லஞ்சம் வாங்கினால் மன்னிப்பே கிடையாது. […]

Read more

கரப்பான் பூச்சி நகைக்குமோ?

கரப்பான் பூச்சி நகைக்குமோ?, நீதியரசர் பிரபர ஸ்ரீதேவன், கவிதை பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. நீதியரசர் பிரபர ஸ்ரீதேவன் நான் நினைத்ததை, நம்புவதை, உணர்ந்ததை, உள்வாங்கியதை, படித்ததை, நேசித்ததை கட்டுரைகளாக எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். புத்தகத்திற்கு அவர் சூட்டியிருக்கும் ‘கரப்பான் பூச்சி நகைக்குமோ’ என்கிற தலைப்பும், அக்கட்டுரையும் இன்று வெற்றத்தில் மிதக்கும் தமிழகத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவே இருக்கிறது. “ஒரு புறம் உணவு எச்சங்கள் குப்பை மலைகளாகக் குவிகின்றன. மறுபுறம் உணவையே பலநாள் பார்த்திராத மக்கள். ஒரு புறம் ஒவ்வொரு விட்டிற்கும் ஒரு நீச்சல் […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம்

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம், தமிழ்க்கோட்டம், விலை 140ரூ. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், தமிழ் மக்கள் வரலாற்றை இதுவரை 8 புத்தகங்களாக எழுதியுள்ளார். கடைசிப்பகுதியான 9வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. காலமாறுபாட்டால் தமிழர்களின் வாழ்விலும், பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை இதில் விவரிக்கிறார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பெருந்தடையாக இருப்பது சாதிப்பிரிவினையே என்று கூறுகிறார். “இன்றைக்கும் தன்னை வழி நடத்தக்கூடிய தமிழனை சினிமாத் துறையிலேயே தமிழன் தேடுகிறான்” என்று சுட்டிக்காட்டுகிறார். தமிழரிடம் காணப்படும் குறைபாடுகளை, குட்டவும் செய்கிறார், தன் மோதிரக் கையால்! […]

Read more

போர்களும் தொலைந்து போன மனிதமும்

போர்களும் தொலைந்து போன மனிதமும், தஞ்சை செல்வன், மணிமேகலைப் பிரசுரம், விலை 190ரூ. உலகின் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த எழுத்தாளர் தஞ்சை செல்வன், தன் பரந்த அனுபவத்தின் காரணமாக 416 பக்கங்கள் கொண்ட இந்த நெடிய நாவலை படைத்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த போர்கள் பற்றியும், தமிழ் ஈழத்தில் நடந்த போர் பற்றியும் பல ஆச்சரியமான உருக்கமான தகவல்களை இந்த நாவலில் பதிவுசெய்துள்ளார். கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. ஆசிரியரின் அழகான தமிழ்நடை இந்த பெரிய நாவலை விறுவிறுப்புடன் நடத்திச் செல்கிறது. “கடந்த […]

Read more

ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது

ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது, வி.செ. இம்மானியேல், விலை 150ரூ. ஜெபம் என்றால் என்ன? ஜெபம் அவசியம்தானா? ஜெபம் என்னவெல்லாம் செய்யும்? யாரை நோக்கி யார் வழியாக ஜெபிக்க வேண்டும் என்பதை எல்லாம் ஜெபிக்க வேண்டும் என்பதை எல்லாம் விளக்கும் நூல். கிறிஸ்தவ மக்களுக்கு சிறந்த வழிகாட்டி. நன்றி: தினத்தந்தி, 9/3/2016.   —- பாரதிதாசன் தமிழ் முழக்கம், பாவேந்தர் பாரதிதாசன், முல்லை பதிப்பகம், விலை 25ரூ. “தமிழுக்கு வாழ்வதே வாழ்வாகும்” என்று பாடும் அளவுக்கு ஆழமாகச் சென்றவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரது நூல்களிலிருந்து […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், விலை 175ரூ. சோழ மண்டலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்ட சரித்திரச் சிறப்பு வாய்ந்த மகாதேவபுரத்தை கதைக்களனாக கொண்டு படைக்கப்பட்ட பரபரப்பான மர்ம நாவல். ‘ஆனந்த தாண்டவம்’ என்ற உடனேயே எல்லோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனந்தம் ஏற்படப்போய் அவர் ஆடுகிறபடியால் அப்படி ஒரு பெயரா இல்லை, அதைப் பார்ப்பவருக்கு ஆனந்தம் வரும் என்பதால் அப்படி ஒரு பெயரா என்பது விவாதத்துக்குரியது மட்டுமல்ல, பெரும் ஆராய்ச்சிக்கும் உரியது. அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்தபடியே இருக்கின்றன. குறிப்பாக […]

Read more

ஆழ்வார்கள் நோக்கில் அரங்கன்

ஆழ்வார்கள் நோக்கில் அரங்கன், கல்யாணி ஸ்ரீதரன், சார்யன் பதிப்பகம், பக். 404, விலை 300ரூ. திருவரங்கம் பெரிய கோவிலின் சிறப்புகளையும், அக்கோவில் குறித்த அனைத்துச் செய்திகளையும் இந்த நூல் தொகுத்துக்கூறுகிறது. திருவரங்கம் செல்வோர், இந்த நூலைப் படித்துவிட்டுச் சென்றால், மிகவும் பயனடைவர். நூலில் திருவரங்கம் கோவிலின் அமைப்பு, மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.(பக். 30-50). ஆழ்வார்கள் காவிரி குறித்துப் பாடியுள்ள பாசுரங்களை மிக விரிவாக விளக்கிக் காட்டுவதும் (பக். 60-68), சோலைகள், பூம்பொழில்களின் விளக்கமும் (பக். 69 -77), ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக, அரங்கனின் குணங்களையும், […]

Read more

வறட்சியிலும் வளமை

வறட்சியிலும் வளமை, ஆர்.எஸ். நாராயணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 127, விலை 100ரூ. தமிழகத்தில் ஒரு காலத்தில், புஞ்சை பயிர்களுக்கு என்று ஒரு தனி இடம் இருந்தது. நெல், வாழை, கரும்பு போன்றவற்றை எல்லா இடங்களிலும் பயிர் செய்ய முடியாத, பாசன வசதி இல்லாத சூழலில், புஞ்சை பயிர்களான தானிய வகைகள் பெருமளவு விவசாயிகளுக்கு கைகொடுத்து வந்தன. குறைவான தண்ணீரில், கம்பு, கேழ்வரகு, இவற்றுடன் சிறு தானியங்களான வரகு, குதிரை வாலி போன்றவையும் கணிசமாக சாகுபடி செய்யப்பட்டன. ஆனால், […]

Read more

தலைவலி பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

தலைவலி பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம், டாக்டர் என். பாலமுருகன், கோகி பதிப்பகம், பக். 72, விலை 200ரூ. தலைவலிக்கான காரணங்களும் அதிகம். தலைவலிகளின் வகைகளும் அதிகம். ‘மைக்ரேன்’ என்று சொல்லக்கூடிய ஒற்றை தலைவலி, ஏனைய தலைவலிகளிலிருந்து எப்படி வேறுபட்டது. ஒற்றை தலைவலியில் எத்தனை வகைகள் உள்ளன. ஒற்றை தலைவலியைக் கண்டறியும் சோதனைகள் எவை, அவற்றுக்கான சிகிச்சை முறைகள் எவை என்பன உள்ளிட்ட தகவல்கள், ஆலோசனைகள், அனுபவங்கள் என, அனைத்தையும் அடங்கியது இந்த நுல். தலைக்கு என, தனியே ஒரு தலபுராணம் சிறப்பாக அமைந்திருக்கிறது(பக். 11). […]

Read more
1 2 3 336