விந்தன் நாவல்கள் ஓர் ஆய்வு

விந்தன் நாவல்கள் ஓர் ஆய்வு, மு. பரமசிவம், அருள் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-3.html தமிழ்ச் சிறுகதையிலும் புதினத்திலும் நடப்பியல் வாழ்க்கையைக் கற்பனைப் பாங்கோடு படைத்தவர் விந்தன். கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, காதலும் கல்யாணமும், சுயம்வரம் ஆகியன அவருடைய ஆறு நாவல்கள். நாவல்களைப் பற்றிய வினாக்களுக்கும், விமர்சனங்களுக்கும் விடையும் தெளிவும் அளிக்கும் வகையில் நாவல்களை ஆதாரப்பூர்வமான செய்திகளுடன் அறிமுகப்படுத்தி ஆய்வு செய்துள்ளார் விந்தனுடன் நெருங்கிப் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், ஆபிரகாம் பண்டிதர், நா. மம்மது, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 112, விலை 50ரூ. திருநெல்வேலி மாவட்டத்தில் வறுமையான குடும்பத்தில் 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்து 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் வாழ்ந்து இசைத் தமிழுக்கு தன்னிகரில்லா தொண்டாற்றி மறைந்த ஆபிரகாம் பண்டிதரைப் பற்றி எடுத்துரைக்கிறது இந்த நூல். இசை, வேளாண்மை, ஜோதிடம், சித்த மருத்துவம், அச்சுத் தொழில் பல துறை வித்தகராக விளங்கிய ஆபிரகாம் எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரண புருஷன் என்பதை நூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார். இசை […]

Read more

காந்திஜியும் தமிழர்களும்

காந்திஜியும் தமிழர்களும், வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 16, விலை 10ரூ. காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டப் பயணத்தில் தங்கள் உழைப்பையும், உயிரையும் கொடுத்த தமிழர்களின் தமிழ்ப் போராளிகளின் பங்கு அளப்பரியது. இதில் முகம் தெரியாத எண்ணற்ற தமிழர்களும் அடங்குவர். சத்தியாகிரகத்திற்காக தன் உயிரைத் தந்த முதல் பெண் என்ற பெருமை வள்ளியம்மை எனும் 16 வயது இளம் தமிழ்ப் பெண்ணுக்கே உரியது. இந்தியத் திருமணச் சட்டங்களை எதிர்த்துப் போரிட்டதில் ஈடுபட்ட 16 பெண்களில் 10 பேர் […]

Read more

மணிவாசகர் அருளிய திருவாசகம்

மணிவாசகர் அருளிய திருவாசகம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 170ரூ. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கு உருகார் என்று கூறுவார்கள். சிவபெருமான் பற்றி மாணிக்கவாசகர் எழுதிய பாடல்கள் அவை. திருவாசகப் பாடல்கள் மொத்தம் 650. அப்பாடல்கள் கொண்ட அழகிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.   —- ஸ்ரீஅருணாசல பஞ்சரத்னம், முகவைக் கண்ண முருகனடிமை, ஸ்ரீ ரமண பக்த சமாஜம், சென்னை, விலை 80ரூ. ரமண மகரிஷி அருளிய அருணாசல பஞ்சரத்னத்திற்கு எழுதப்பட்ட புதிய விரிவுரை, புலமையும் பக்தியும் பளிச்சிடும் பஞ்சரத்தினத்தின் மையகருத்து, பாடல்களில் […]

Read more

முஸ்லிம் சட்டம்

முஸ்லிம் சட்டம், எஸ்.ஏ.சையது காசிம் அறக்கட்டளை, திரியெம்பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 300ரூ. திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும், நபித்தோழர்களின் விளக்கத்தையும், தீர்ப்புகளையும் ஆதாரமாகக் கொண்டது முஸ்லிம் ஷரியத் சட்டம். ஷரியத் என்றால் பாதை, நேரிய பாதை, சட்டம் என்று பெவாருள். திருமணம், திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு அளிக்கும் மஹர் (மணக்கொடை) திருமண முறிவு (தலாக்), ஜீவனாம்சம், காப்பாளர் பொறுப்பு, கொடை, உயில், சொத்துரிமை போன்ற முஸ்லிம் சட்ட கோட்பாடுகளை பேராசிரியர் எச்.எம்.அபுல்கலாம் முஸ்லிம்சட்டம் என்ற தலைப்பில் அழகிய முறையில் விளக்கி இருக்கிறார். மேலும் […]

Read more

பரம(ன்) ரகசியம்

பரம(ன்) ரகசியம், என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 550ரூ. அளவிலும், எடையிலும் சிறியதான, ஆனால் அபூர்வ சக்தி கொண்ட ஒரு லிங்கத்தை அபகரிப்பதற்காக நடக்கும் ஒரு கொலையுடன் நாவல் தொடங்குகிறது. அந்தக் கொலையை செய்தவன், மறு நிமிடமே மர்மமாக இறந்து கிடப்பது முதல் நடைபெறும் ஒவ்வொரு திகில் சம்பவமும் பரபரப்பு நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளன. அத்துடன், அமானுஷ்ய நிகழ்வுகள், ஆன்மிக விசாரம், விஞ்ஞான ஆராய்ச்சிகள் ஆகியவையும் கதையுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், படிக்க மேலும் சுவாரசியமாக உள்ளது. நன்றி: […]

Read more

மங்கல இசை மன்னர்கள்

மங்கல இசை மன்னர்கள், டாக்டர் பி.எம். சுந்தரம், முத்துசுந்தரி பிரசுரம், பக். 416, விலை 270ரூ. திருமணங்களில் தவறாது ஒழிப்பது நாதசுர இசை. இந்த மங்கல இசையை இசைப்பதில் புகழ் பெற்ற கலைஞர்கள் பலர். இவர்களில் முடிசூடா மன்னராக விளங்கியவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவரைப்போலவே புகழ்பெற்று விளங்கிய காருகுறிச்சி அருணாசலம், திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, செம்பொன்னார்கோவில் தட்சிணாமூர்த்தி பிள்ளை, திருவிடை மருதூர் வீருசாமி பிள்ளை, ஷேக் சின்ன மவுலானா உள்பட 126 நாதசுர வித்துவான்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் இது. மிகவும் சிரமப்பட்டு […]

Read more

தந்தை கோரியோ

தந்தை கோரியோ, பிரெஞ்சு மூலம் ஒனோரெ தெ. பல்சாக், தமிழில் ச. மதனகல்யாணி, சாகித்ய அகாடமி, பக். 433, விலை 220ரூ. வெறுப்பெனும் பெருஞ்சரிவில் மனித இதயம் நிற்பது அருமை நெப்போலியன் கத்தியால் சாதித்ததை நான் இறகு முனையால் சாதிப்பேன் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஒனோரே தெ. பல்சாக், 150 ஆண்டுகளுக்கு முன் எழுதிய, லெ பேர் கோரியோ எனும் புதினத்தை, தந்தை கோரியோ எனும் பெயரில், எளிய நடையில் மிக நுணுக்கமாக மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியர் மதன கல்யாணி. மனைவியை இழந்தும், தன் […]

Read more

இணையில்லா இந்திய அறிவியல்

இணையில்லா இந்திய அறிவியல், இரா. சிவராமன், பை கணித மன்றம், பக். 144, விலை 120ரூ. பூமி சூரியன் இடையேயான தூரத்தை கணக்கிட்ட இந்திய அறிவியல் இணையில்லா இந்திய அறிவியல் புத்தகம், இந்தியர்களின் அறிவியல் அறிவை விவரிக்க துவங்கும்போதே, ஆச்சரியங்கள் நம்மை கவ்விக்கொள்கின்றன. ஐரோப்பிய அறிஞர்களின், கணிதம், அறிவியல் கண்டுபிடிப்புகளை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய இதிகாசங்கள், அவற்றை போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றன என்பதை, ஆதாரங்களுடன் விளக்குகிறார் பேராசிரியர். இந்தியர்கள், வேதகாலம் என அழைக்கும் கி.மு. 1500 – கி.மு.500 காலகட்டத்தில், சமஸ்கிருத […]

Read more

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 264, விலை 140ரூ. விசுவ இந்து பரிஷத் நடத்தி வந்த, இந்து மித்திரன் இதழில், நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பேசுவது பழங்கதை அல்ல என்பது முதல் போதி தர்மர் வரை, 31 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாய் இருக்கும் அணு இயக்கத்தை, டாக்டர் பிர்டஜாப் காப்ரா என்ற விஞ்ஞானி புகைப்படமாக எடுத்திருக்கிறார். இதையே நம் முன்னோர்கள், சிவனின் ஆனந்த தாண்டவமாக வர்ணித்திருக்கின்றனர் என விளக்கி உள்ளார். […]

Read more
1 2 3 8