மங்கல இசை மன்னர்கள்
மங்கல இசை மன்னர்கள், டாக்டர் பி.எம். சுந்தரம், முத்துசுந்தரி பிரசுரம், பக். 416, விலை 270ரூ.
திருமணங்களில் தவறாது ஒழிப்பது நாதசுர இசை. இந்த மங்கல இசையை இசைப்பதில் புகழ் பெற்ற கலைஞர்கள் பலர். இவர்களில் முடிசூடா மன்னராக விளங்கியவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவரைப்போலவே புகழ்பெற்று விளங்கிய காருகுறிச்சி அருணாசலம், திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, செம்பொன்னார்கோவில் தட்சிணாமூர்த்தி பிள்ளை, திருவிடை மருதூர் வீருசாமி பிள்ளை, ஷேக் சின்ன மவுலானா உள்பட 126 நாதசுர வித்துவான்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் இது. மிகவும் சிரமப்பட்டு இந்த நூலை உருவாக்கிய டாக்டர் பி.எம்.சுந்தரம் பாராட்டுக்குரியவர். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பற்றி இந்நூலில் காணப்படும் சில தகவல்கள்- 1989ல் தோன்றி 1956ல் மறைந்தவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. முன்பெல்லாம் நாதசுரவித்துவான்கள் நின்றுகொண்டுதான் வாசிப்பார்கள். மேடை போட்டுத்தான் வாசிக்க முடியும் என்ற நிபந்தனை விதித்து, உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கியவர் ராஜரத்தினம் பிள்ளைதான். ராஜரத்தினம் பிள்ளைக்கு 4 மனைவியர். எனினும் சந்ததியின்மையால் சிவாஜி என்ற பையனை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டார். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.
—-
நான், பரஞ்சோதி ஞானஒளி பீடம் அறக்கட்டளை, ஈரோடு, விலை 220ரூ.
1902ம் ஆண்டு தோன்றி 1981ல் மறைந்தவர் ஞானவள்ளல் பரஞ்சோதி மகான். ஆன்மிகத்தில் புதிய கருத்துக்களைப் பரப்பியவர். அவருடைய சீடரான ஸ்ரீ பரஞ்சோதி ஞானஒளி மகான், நான் கடவுள் எனும் அகண்டாகார தத்துவம் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் பற்றிய பல விவரங்களும், தத்துவங்களும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/4/2014.