தேர்வை ரசிப்போம்.. மதிப்பெண் குவிப்போம்

தேர்வை ரசிப்போம்.. மதிப்பெண் குவிப்போம், க.ஜெய்சங்கர், வசந்தவேல் பதிப்பகம், விலை: ரூ.80. ஜவ்வாது மலையில் மலைவாழ் மாணாக்கர்களுக்குப் பாடம் எடுக்கும் பட்டதாரித் தமிழாசிரியர் க.ஜெய்சங்கர். பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்திலும் பிற பாடங்களிலும் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை இந்த நூலில் வழங்கியுள்ளார். நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாரதி தமிழ்வழி ஆங்கிலம் கற்றல் வழிகாட்டி

பாரதி தமிழ்வழி ஆங்கிலம் கற்றல் வழிகாட்டி, கா.அருச்சுனன், எம்பவர் பதிப்பகம், விலை: ரூ.200 ஆங்கில எழுத்துகளின் உச்சரிப்பு, சொற்கள், வாக்கியங்கள், இலக்கணப் பிரிவுகள், பழமொழிகள், மரபுத் தொடர்கள், சுருக்கெழுத்துகள் என ஆங்கிலத்தைத் தொடக்கத்திலிருந்து கற்க விரும்புகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்களைத் தமிழ் வழியாக விளக்குகிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 5/2/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

களிப்பூட்டும் கணிதம்

களிப்பூட்டும் கணிதம், நல்லாமூர் கோவி. பழனி, வனிதா பதிப்பகம், விலைரூ.300. கணிதத்தை எளிதாக கற்க துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். கணித அழகை ரசித்து, அதனுள் மூழ்கவைக்கும் விதமாக எளிமையாக படைக்கப்பட்டு உள்ளது. கணித சிந்தனைகள், கணித மன்ற செயல்பாடுகள், கணித விளையாட்டு, கணித மேதைகளின் சுருக்க வரலாறு என பல தலைப்புகளில் உள்ளது. கணித ஆர்வ களஞ்சியமாக அமைந்துள்ளது. ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாவதை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலும், அவற்றிற்கு இடையேயான தொடர்புகளையும் அடுக்கமைவு மூலம் தகவலாக கோர்க்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பெருந்தலைப்புகளின் […]

Read more

மாண்டிசோரி கல்வி என்றால் என்ன?

மாண்டிசோரி கல்வி என்றால் என்ன?, மீனாட்சி சிவராமகிருஷ்ணன், முல்லை பதிப்பகம், விலைரூ.20. மாண்டிசோரி கல்வி முறை பற்றி சுருக்கமாக விளக்கும் நுால். கற்பித்தல் முறையில் தலைகீழ் மாற்றங்களை பரிந்துரைக்கும் நடைமுறைகளை கொண்டது. சிறு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த கற்றல் முறையை உருவாக்கிய டாக்டர் மரியா மாண்டிசோரி பற்றி சுருக்கமான அறிமுகத்துடன் துவங்குகிறது இந்த நுால். தொடர்ந்து கற்பித்தல் உத்திகள் பற்றி சுருக்கமாக பேசப்பட்டுள்ளது. மாற்றுமுறை கல்விக்கான அறிமுக நுால். – ராம் நன்றி: தினமலர், 26/12/221. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

எண்களின் ஜாலங்கள்

எண்களின் ஜாலங்கள், இரா.சிவராமன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.100. தொடர் வரிசைகள் என்றால் என்ன? பிரமிப்பூட்டும் தொடர் வரிசைகள் எவை? கணிதத்தின் அற்புத பண்புகள் என்னென்ன? கூட்டுத் தொடர் வரிசை எண் அறைகளில் வண்ணமிடும் விளையாட்டு, கணிதத்தில் புதிதாக கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதா? உடனடியாக கூட்டலை கண்டறியும் முறை எது? கணிதத்தில் மிக அடிப்படை அம்சமாக கருதப்படுவது எது? இது போன்ற சிக்கலான் விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வரைபடங்கள், விளக்கங்கள் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார் நுாலாசிரியர் முனைவர் இரா.சிவராமன். – […]

Read more

அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2)

அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2), இரா.சிவராமன், வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.110. கணிதம் என்றாலே சிலருக்கு கசக்கும். இருந்தாலும் தேர்வில் முழு மதிப்பெண் பெற உதவுவதும் அதே கணிதம் தான். அத்தகைய கணிதம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நம்மை அறியாமலே பல விஷயங்களில் இந்த கணிதம் முக்கிய பங்காற்றுகிறது. நாம் அதிக அளவு பயன்படுத்தும் வார்த்தைகள் இந்த கணித விதிக்கு உட்பட்டே அமைகின்றன. நகரங்களில் ஏற்படும் நெரிசலையும், பயண நேரத்தையும் குறைக்க […]

Read more

பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல

பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல, இளவேனில், இளா வெளியீட்டகம், விலைரூ.280. இன்றைய கல்வி முறை, குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை எவ்வாறெல்லாம் மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், படிப்பைத் தவிர வேறெதையும் திறமையாகப் பார்க்காத அதன் குறைபாட்டையும் விளக்கும் நுால். ஆசிரியர் – மாணவர் இடையே புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குறிப்பாக, வளர் இளம் பருவ மாணவ – மாணவியரின் உளவியலை அழகாகப் பேசுகிறது. எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டிய மாணவர்கள் குறித்த முழுமையான அறிவைப் பெறுவதற்கு துணை புரியும். காதலும், கிரிக்கெட்டுமாய் கழிந்த பள்ளிப் பருவ […]

Read more

என்ன படிக்கலாம் வாங்க

என்ன படிக்கலாம் வாங்க, க.ம.ராஜேஷ் கந்தன், ஆர்த்தி ராஜேஷ் கந்தன், தென்றல் பதிப்பகம், பக்.600, விலை ரூ.380. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அடுத்து என்ன படிக்கலாம்? என்று கேட்பவர்களுக்கு வழிகாட்டும்விதமாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியல், தொல்லியல்துறை, புள்ளியியல்துறை, லாஜிஸ்டிக், பேஷன் டிசைனிங், அனிமேஷன், மல்ட்டி மீடியா, வனத்துறை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் என விரிந்து கொண்டே செல்லும் பல்வேறு துறைகளில் ஒருவர் பணியாற்ற எதைப் படிக்க வேண்டும் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட படிப்பு எதைச் சார்ந்தது, […]

Read more

தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு

தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு, மு.கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், விலைரூ.500. தமிழ் மொழியை எளிதாக கற்பிக்கும் வகையில் நுட்பமாக ஆய்வு செய்து, உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். பெற்றோரும், ஆசிரியரும் பயன்படுத்த தக்க வகையில் உள்ளது. பின்தங்கிய கிராம அரசுப்பள்ளி மாணவ –மாணவியரிடம் சோதனை முறையில் அமல்படுத்தி, மேம்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அதிகாரியின் பாராட்டும் பெற்றுள்ளது. தாய்மொழி கற்பித்தலில், பெற்றோர், ஆசிரியருக்கு உள்ள பங்கை துல்லியமாக உணர்த்தி, எளிய அணுகு முறையில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன. புரிந்து கற்க ஏதுவாக, 45 நாட்களுக்கு […]

Read more

வேத கணிதம் செயல்முறைகள்

வேத கணிதம் செயல்முறைகள், மு.தனசேகரன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.275 வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக் காட்டுகிறது. கணினி, கால்குலேட்டருக்கு அடிமையான மூளையை, வேதக் கணித முறையால் மீட்டு விடலாம் என்கிறது இந்த நுால். மாணவருக்கு பெரிதும் பயன் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் இக்கணிதத்தில், 16 சூத்திரங்களும், 13 உபசூத்திரங்களும் உள்ளன. இவற்றை, புரி கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் உருவாக்கினார். வேதக் கணிதம் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், […]

Read more
1 2 3 21