பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல

பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல, இளவேனில், இளா வெளியீட்டகம், விலைரூ.280.

இன்றைய கல்வி முறை, குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை எவ்வாறெல்லாம் மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், படிப்பைத் தவிர வேறெதையும் திறமையாகப் பார்க்காத அதன் குறைபாட்டையும் விளக்கும் நுால்.

ஆசிரியர் – மாணவர் இடையே புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குறிப்பாக, வளர் இளம் பருவ மாணவ – மாணவியரின் உளவியலை அழகாகப் பேசுகிறது. எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டிய மாணவர்கள் குறித்த முழுமையான அறிவைப் பெறுவதற்கு துணை புரியும்.

காதலும், கிரிக்கெட்டுமாய் கழிந்த பள்ளிப் பருவ நாட்களை சுவைபடச் சொல்கிறது. கல்வி குறித்த பல்வேறு வழிமுறைகளையும் சொல்லுகிறது.

நன்றி: தினமலர், 11.7.21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *