கவிஞர் இரா. இளங்குமரனின் இலக்கியப்பணிகள்

கவிஞர் இரா. இளங்குமரனின் இலக்கியப்பணிகள், முனைவர் ப. சிவாஜி, இலக்கியா பதிப்பகம், 176, இராமநாயக்கன் பேட்டை, அம்பலூர், வாணிம்பாடி 636801.பக். 282, விலை 120ரூ- எளிமையான தோற்றம், பண்போடு பழகும் குணம், வள்ளுவத்தை வாழ்வியலாக்க அரும்பாடுபடும் அன்பர். தொல்காப்பியர், வள்ளுவர், வள்ளலார் போன்றோரின் கருத்துக்களை நம் செவிகளில் கொண்டு வந்து சேர்க்கச் செய்யும் தமிழ்க் கடல் என்றெல்லாம் போற்றப்படும் வாழும் தமிழறிஞரான இளங்கமரனாரின் இலக்கிய இலக்கணப் பணிகளை பல்வேறு வகையாகப் பகுத்துப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அகல உழுதாலும் ஆழ உழு என்ற முதுமொழீக்கு […]

Read more

சிட்டு, குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

சிட்டு, குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும், ஆதி வள்ளியப்பன், தடாகம் பூவுலகின் நண்பர்கள், 12/293, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. சிட்டுக்குருவிகளைக் காணவில்லை. ஏன்? செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணமால் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அது உண்மையா? இல்லை என்று சொல்லும் இந்தப் புத்தகம். அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது. ‘மனிதர்களின் நாகரிக வளர்ச்சி, நவீன அறிவியல் தொழில் நுட்பம்தான் சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணம் என்று பிரிட்டன் ஆய்வுகள் செல்கின்றன. குருவிகளின் அழிவுக்கு […]

Read more

ஸ்ரீவால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம் (2 பாகம்)

ஸ்ரீவால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம் (2 பாகம்), சாரநாத கோபாலன், ஸ்ரீ விக்னேஸவரா வேங்கடேஸ்வரா டிரஸ்ட், சென்னை18, பக்,1316, விலை 500ரூ. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்துக்கு சிறப்புகள் பல உண்டு. மனதில் நினைத்ததை முடித்த அனுமன் கதை பேசப்படுவதால், சுந்தரகாண்டத்தைப பரிகாரப் பாராயணத்துக்கும் சிலர் பரிந்துரைப்பதுண்டு. ஆனால் வால்மீகி என்ற கவிஞரின் சிறப்பை உணர்ந்துகொள்ள சுந்தரகாண்டம் பெரிதும் கைகொடுக்கிறது. 68 அத்தியாயங்கள், அனைத்துக்கும் வடமொழி எழுத்துகளில் மூலம், தமிழில் மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு, வடமொழி எழுத்துக்களுக்கானப் பதவுரை ஆகியவை கவியினைத் தெளிவாக […]

Read more

இலக்கிய உலா

இலக்கிய உலா, முகில் தமிழ்ச் செல்வன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 208,விலை 135ரூ. அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்வு. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றின்றி மற்றொன்று இல்லை. இரண்டும் ஒன்றியதே சங்கச் சால்பு. பண்டைத் தமிழர் மறமாண்பும் மறத்திலும் அறம் கருதும் மாட்சியும், வீரத்தோடு ஈரமும் மிகுந்த மாண்பும், பீடும் பெருமிதமும் அளிப்பன. இந்த அரிய சேர்ப்பு – வீரமும், ஈரமும், மறமும் அறமும் அருங்கலவை ஆகும். இந்த வீரம் செறிந்த பனுவல்களைப் பயிலும்போது, வீரம் விளைகிறது. மறம் […]

Read more

செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்

செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம், முனைவர் க. முருகேசன், பக். 170, விலை 80ரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98. பாரதியின் பார்வையில் பிரபஞ்சம், கம்பனில் விழுமிய வாழ்வியல், கட்டடக்கலையைத் தொட்டிடும் சிலம்பு, மணிமேகலையில் அறம், இலக்கியங்களில் கொடியசைதல், குறுந்தொகையில் இலக்கிய நயங்கள், நற்றிணையில் பண்பாட்டுப் பதிவுகள், புறப்பாடல்களில் புரவலர், புலவர் மரபு, ஐந்தெழுத்து மந்திரச் சிறப்பும் திருநீற்று, மகிமையும், மணிவாசகரின் அறிவியல் சிந்தனைகள், ஆண்டாள் பாசுரங்களின் அகப்பொருள் கூறுகள் ஆகிய 11 கட்டுரைகளும் உண்மையாக செந்தமிழ் கோயிலுக்குச் சிற்பங்களாக அமைந்துள்ளன. […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, மாவடு ராமுடு, சுண்டல் செல்லப்பா, கண்ணா மேங்கோ தின்ன ஆசையா, கே.எஸ்.ராகவன், அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை 4, விலை 90ரூ. இந்த நூல்களின் ஆசிரியர், அறிவில் சிறந்தவர்களை சிரிக்க வைப்பது கடினம் என்ற கோட்பாடு உடையவர். ஆகவே, நடைமுறை யதார்த்தங்களுடன் நகைச்சுவை உணர்வுடன் படைத்த இப்படைப்புகளை பலரும் விரும்புவர். நன்றி: தினமலர் 21/4/2013.   —-   பழமையான ஞானம், புதுமையான உலகம், எச்.எச். தலாய் லாமா, தமிழில்-டி. வெங்கடகிருஷ்ணன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்.272, விலை 125ரூ. […]

Read more

குருதியில் நனையும் காலம்

குருதியில் நனையும் காலம், ஆளுரு ஷாநவாஸ், உயிர்மை பதிப்பகம்,a 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18. விலை 100ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0000-202-1.html இஸ்லாமிய அரசியல் எழுச்சி மற்றும் சிந்தனைகளை, பாபர் மசூதி இடிப்புக்கு முன், பின் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் சலுகைகளைப் பெறுவதாக, அதற்குப் போராடுவதாக முன்பு இருந்தது. ஆனால் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு தங்கள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கே பெரும்பாலான நேரத்தைச் செலவு செய்ய […]

Read more

பஞ்சம், படுகொலை, பேரழிவு கம்யூனிஸம்

பஞ்சம், படுகொலை, பேரழிவு – கம்யூனிஸம், அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல்மாடி அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 312, விலை 160ரூ.   To buy this Tamil book online – https://www.nhm.in/shop/978-81-8493-522-6.html உலகில் முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடே இருக்கக்கூடாது. உலகம் முழுவதும் ஏற்றத் தாழ்வு இல்லாத சமத்துவம் நிலவ வேண்டும். உணவு, உடை, வீடு முதலான அடிப்படை வசதிகளுடன் அனைத்து மனிதர்களும் வாழ வேண்டும் என்பன போன்ற கருத்துக்களைக் கொண்ட சித்தாந்தம்தான் […]

Read more

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,

சமயங்களின் அரசியல், தொ. பரமசிவன், விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை 2, பக்கம் 176, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html சைவம் மற்றும் வைணவம் ஆகியவை, சமண புத்த சமயங்களை எப்படி எதிர் கொண்டன? சமணத் துறவிகள், புத்த துறவிகள் மக்கள் கூட்டமாக இல்லாத இடங்களை கைவிட்டு, ஏன் தள்ளியே வாழ்ந்தனர்? பெண்கள் ஏன், துறவிகளாக ஏற்கப்படவில்லை? நிர்வாணம் என்றால் என்ன? பட்டிமன்றம் என்ற சொல் எப்படி வந்தது? என்பது பற்றி, இந்த நூலில் […]

Read more

வாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள்

வாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள், குன்றில் குமரன், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ரஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, பக்கம் 160, விலை 60ரூ. ஜென் என்பது இந்த நிமிடம் இங்கே வாழ்வது, நிமிடத்திற்கு நிமிடம் வாழ்வது, எது ஒன்றையும் சாட்சியாக நின்று கவனித்தல், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது, என்பதை மையமாகக் கொண்டது. தியானம் என்ற சொல்தான் ஜப்பானில் ஜென்னாக உருவெடுத்தது என்கிறார் ஓசோ. அந்த வகையில் இந்த சிறிய புத்தகத்தில் நம் வாழ்வில் அன்றாடம் […]

Read more
1 2 3 11