வம்புக்கு நான் அடிமை
வம்புக்கு நான் அடிமை, மாவடு ராமுடு, சுண்டல் செல்லப்பா, கண்ணா மேங்கோ தின்ன ஆசையா, கே.எஸ்.ராகவன், அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை 4, விலை 90ரூ.
இந்த நூல்களின் ஆசிரியர், அறிவில் சிறந்தவர்களை சிரிக்க வைப்பது கடினம் என்ற கோட்பாடு உடையவர். ஆகவே, நடைமுறை யதார்த்தங்களுடன் நகைச்சுவை உணர்வுடன் படைத்த இப்படைப்புகளை பலரும் விரும்புவர். நன்றி: தினமலர் 21/4/2013.
—-
பழமையான ஞானம், புதுமையான உலகம், எச்.எச். தலாய் லாமா, தமிழில்-டி. வெங்கடகிருஷ்ணன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்.272, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-606-9.html
மனிதனின் எண்ணங்கள் குறித்த சுய முன்னேற்ற நூல்கள் எத்தனையோ வந்துள்ளன. இது சற்று வித்தியாசமாக உள்ளது. உலகில் உள்ள அனைத்து மதங்களின் முக்கிய கருத்து தனி மனித அமைதி, ஆனால் மதங்களே உலகின் பெரும் போராட்டங்களுக்கு மூலகாரணம் என்பது வருத்தம் தரும் உண்மை. ஒரு மனிதன் மதத்தைப் பின்பற்றினாலும், பின்பற்றாவிட்டாலும் ஆன்மிக குணங்களாகிய அன்பு, இரக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவை தவிர்க்க முடியாதவை. முடிந்தவரை பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும். பிற மதத்தினரோடு மற்ற மதத்தினர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எளிய உதாரணங்கள் மூலம் சிறந்த கருத்துக்களைத் தந்திருக்கிறார் தலாய் லாமா. சாதாரணக் கருத்துகளாக இருந்தாலும் அகதிகளாக உள்ள ஓர் இனத்தின் தலைவரான தலாய் லாமாவின் இதுபோன்ற கருத்துகள் எளிய முறையில் சிறய உதாரணங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பூவுக்குள் பூகம்பம், மிகச்சிறந்த கருத்துகள், எளிமையான மொழிபெயர்ப்பு. நன்றி: தினமணி 31-10-2011.