இணையச் சிறையின் பணயக் கைதிகள்

இணையச் சிறையின் பணயக் கைதிகள், டாக்டர் மோகன வெங்கடாசலபதி, இந்து தமிழ் திசை, விலை 160ரூ. இணையமும் ஸ்மார்ட்போன்களும் நம்முடைய வாழ்க்கையை எளிதாக்கி இருப்பதோடு, மனநலத்தையும் சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இணையத்தால் மனத்துக்கு ஏற்படும் சிக்கலைப் புரிந்துகொள்ளும் விதமாக ‘சைபர் சைகாலஜி’ எனும் உளவியல் பிரிவே உருவாகியிருக்கிறது. மனிதனும் கணினியும் தொடர்புகொள்ளும் விதத்தில் மனித மனம் அதற்கு எப்படி எதிர் வினையாற்றுகிறது என்பதைப் பற்றியும், அதன் நன்மை தீமைகள் பற்றியும் விளக்கும் ‘சைபர் சைகாலஜி’ பற்றியும் டாக்டர் மோகன வெங்கடாசலபதி எழுதியுள்ளார். நன்றி: தமிழ் […]

Read more

நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும்

நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும், பொறியாளர் ஏ.சி.காமராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.230 கங்கையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழிப்பாதை ஏற்படுத்த முன்னோடித் திட்டமாக உருவாக்க எடுத்த உழைப்பை எடுத்துரைக்கும் நுால். முயற்சிக்கு இடையே சந்தித்த அரசியல் தலைவர்கள் பற்றியும், அவர்களது நேர்மைத் திறம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார். காமராஜர், ராமகிருஷ்ண ஹெக்டே, அப்துல் கலாம், தமிழக முதல்வர்கள் என்று பலருடன் கொண்டிருந்த தொடர்புகளையும், அவர்களிடம் எடுத்துரைத்த தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான திட்டங்களையும் எளிய தமிழில் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் நீர் மேலாண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை […]

Read more

சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சுகமான வாழ்வும்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சுகமான வாழ்வும், ஜி.ராஜா, மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.480. தாவரவியல் பேராசிரியரும் சென்னையில் உள்ள எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் முன்னாள் முதல்வருமான டி.ராஜா சுற்றுச்சூழல் ஆர்வலரும்கூட. தன் வாழ்க்கை அனுபவங்களையும் சுற்றுச்சூழல் குறித்தும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609     இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

மனம் செய்யும் மாய வித்தை

மனம் செய்யும் மாய வித்தை, ரவி வல்லூரி, தமிழில் சுசர்ல வெங்கடரமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ. பலவிதமான பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து இருக்க முடியும் என்றும், மனதை கூர்மையாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்வதன் மூலம், மனம் தானாகவே வலிமை பெற்றுவிடுகிறது என்பதையும் விளக்கும் இந்த நூல், ஆரோக்கியத்துடனும், மனதிடத்துடனும் வாழ்வதற்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்து இருக்கிறது. பிராணாயாமத்தின் சக்தியைக் கூறும் அதேசமயம், யூடியூப் மூலம் வெளிவரும் போலிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. போதையில் இருந்து மீள்வதற்கான வழிகள், […]

Read more

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா, ஆர். நடராஜன், மணிவாசகர் பதிப்பகம், பக்.176,  விலை ரூ.150. இந்தியாவில் இரும்பு, எஃகு ஆலை, மின்சார ஆலை உள்ளிட்ட இன்றைய முக்கியத் தொழில் துறைகள் அனைத்துக்கும் அன்றே அடித்தளமிட்டவர் ஜாம்ஷெட்ஜி டாட்டா. ஜாம்ஷெட்ஜியின் டாட்டா குழுமம் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்த போதிலும், அவரது பெயரன் ஜே.ஆர்.டி. டாட்டாவுக்கு விமானத்துறை மீது தணியாத ஆர்வம் இருந்தது. விமானம் ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்று இந்தியாவின் முதல் விமானியானது மட்டுமல்லாது, அன்றைய ஆங்கில அரசின் அனுமதியுடன் முதல்முதலில் கராச்சி – […]

Read more

வியக்கவைக்கும் விண்வெளி கருந்துளைகள்

வியக்கவைக்கும் விண்வெளி கருந்துளைகள், நடராஜன், ஸ்ரீதர், ரெ. சந்திரமோகன், மணிமேகலைப் பிரசுரம், விலை 115ரூ. இயற்பியல் அதிசயங்களில் ஒன்று விண்வெளி கருந்துளை. அதீதமான ஈர்ப்பைக் கொண்டு உள்ளது. அதன் ஈர்ப்பாற்றல் பற்றிய நூல். எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்கள் அதன் வழி அமைய நேர்ந்தால் வெகுதூர கிரகங்களுக்குச் செல்வது இயலாத காரியமாகிவிடும். கருந்துளை பற்றிய அரிய தகவல்கள் நிறைந்த நூல். -ராம. குருநாதன். நன்றி: தினமலர், 31/10/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031389_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

புன்னகை ஒரு அரிய ரோபோ

புன்னகை ஒரு அரிய ரோபோ, மோகன் சுந்தரராஜன், அறிவியல் ஒளி, விலைரூ.90. கணினிகள் மட்டுமல்லாது ரோபோக்களின் செயல்பாடும் இனி பெருகிவிடும். அறிவியலின் வளர்ச்சியில் நாடு மேலும் முன்னேற்றம் கண்டுவிடும். இன்றைய தலைமுறை புரிந்து கொள்ளும் வகையில், ஒரு தொடர்கதை மாதிரி ரோபோக்களின் செயல்பாடுகளை அறிவுப்பூர்வமாக விவரிக்கிறார் இந்த நுால் ஆசிரியர். இது போன்று ஒரு ரோபோவுக்கு வைத்துள்ள பெயரே புன்னகை. ரோபோக்களை மனித கட்டளைக்குப் பணிய வைத்து, மனிதன் நலம் பெற உதவி செய்கின்றனர் என்பதை புரியும்படி விளக்கும் கதை. இன்று பழைய வரலாறு […]

Read more

உலகம் பிறந்த கதை!

உலகம் பிறந்த கதை!. சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், விலைரூ.200. புதிர்களின் உறைவிடம் இந்த பிரபஞ்சம். அறிவியல் இந்த புதிர்களுக்கு விடை தேடி விடுவிக்கிறது. இயற்கையை மிஞ்சிய பேராற்றல் இருக்க முடியாது. இந்த பேராற்றலில் அறிவியல் தேடி கண்டடைந்த தகவல்கள் கொண்ட நுால். நுால் மூன்று பெரும் பிரிவாக உள்ளது. முதல் பிரிவு, வான மண்டலம் பற்றியுள்ளது. அடுத்து, புதிர்கள் நிறைந்த பூமி பற்றியதாக உள்ளது. உயிர்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது மற்றொரு பிரிவாக உள்ளது. இந்த பெரும் பிரிவுகளில் துணை தலைப்புகள் வகுக்கப்பட்டு, முறைப்படி […]

Read more

ஆன்மிக ஒளியில் அறிவியல்

ஆன்மிக ஒளியில் அறிவியல், ப.திருமலை, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.240. அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் போன்ற அனைத்தையுமே முன்னோர் ஒரு அர்த்தத்துடன் தான் செய்து வந்திருக்கின்றனர். நம் பழக்க வழக்கங்களில் உள்ள அறிவியல் உண்மைகளை மறந்து விட்டு, வெறும் சடங்குகளாக பார்ப்பதால் உரிய முக்கியத்துவம் தர மறுக்கிறோம். இத்தகைய ஆன்மிக பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறவியல் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் முயற்சி தான் இந்த புத்தகம். முப்பது சிறிய கட்டுரைகளை உள்ளடக்கியது; மருந்துப் […]

Read more

ஆட்டிசம் ஒரு பார்வை

ஆட்டிசம் ஒரு பார்வை, ராதா பாலசந்தர், சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன் & நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் அண்ட் கம்யூனிகேஷன்,  பக்.160, விலை ரூ.150. மூளை வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய நரம்பு சார்ந்த ஒருவகை வளர்ச்சிக் குறைபாடே ஆட்டிசம் என்று கூறும் நூலாசிரியர், ஆட்டிசம் என்பது பலர் நினைப்பது போல ஒரு வியாதி அல்ல. இது ஒரு குறைபாடு மட்டுமே என்கிறார். ஆட்டிசப் பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்வகையில் ஆட்டிசப் பாதிப்புள்ள குழந்தைகளின் உடல், மனநிலையைப் பற்றிய […]

Read more
1 2 3 21