கருத்து களஞ்சியம்

கருத்து களஞ்சியம், பேரா. அசோகா சுப்பிரமணியன், செந்தில் பதிப்பகம், பக். 168, விலை 160ரூ. மாணவர்களுக்கு முதன்முதலில் சத்துணவு வழங்கிய தலைவர் அபிப்ராய வீக்கம் எனும் சிந்தனையில், நம் மனதில் உயர்வாக விரிந்துள்ள தலைவர்களை பற்றி எவரேனும் விமர்சனம் செய்தால், விமர்சனங்களை புறந்தள்ளுவதும், கூறியவரை மறப்பதும் நம் இயல்பு. அவ்வாறு மறக்கப்பட்டவர்களுள் ஒருவர், சுதந்திர பித்தர், பாராட்டப் பெற்ற சிந்தனை சிற்பி, ம. சிங்காரவேலர். ரவுலட் சட்டம் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சைமன் குழு எதிர்ப்பு, கொடிநாள் போராட்டம் போன்றவை. சென்னையில் பிரபலமடைய காரணமானவர் […]

Read more

சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம்

சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம், பேராசிரியர் மா.ரா. இளங்கோவன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ. ராமையா, அன்பழகன் ஆன கதை எப்படி? கடந்த 1936 முதல் 1955 வரை, 20 ஆண்டுகள், தமிழ் முரசு, தமிழன் குரல், கிராமணி குலம் ஆகிய இதழ்களில் ம.பொ.சி. எழுதிய தலையங்கங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் மூலம் தமிழக வரலாற்றையும், சமுதாய எழுச்சியையும் அறிய முடிகிறது. எனினும் இதில் அவரது செங்கோல் இதழ் தலையங்கங்கள் இடம்பெறவில்லை. ஜாதி, மதம், கட்சி வேற்றுமைகளுக்கு இடமின்றி, […]

Read more

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம், தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், பக். 408, விலை 150ரூ. நாவலின் கதாநாயகி பூவரசி எழுந்து, வராந்தாவின் பக்கம் போய் நின்று, வானத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் மேல் பார்வையைப் பதிக்கிறாள். இந்த அழகான நட்சத்திரக் கூட்டத்திற்கு இடையே உலா வரும் பூமிப்பந்தின் மேல் வசிக்கும் மனிதர்களுக்கு, இப்படியெல்லாம்கூட துன்பங்கள் வருமா? என்று யோசிக்கிறாள் (பக். 203). மிகவும் நல்லவளான பூவரசிக்கு பல சோதனைகள். அவளை தன் மோச வலையில் சிக்க வைக்க முயல்கிறான் ஒரு தீயவன், கடைசியில் […]

Read more

வெற்றி வெளிச்சம்

வெற்றி வெளிச்சம், இயகோகா சுப்பிரமணியம், விகடன் பிரசுரம், பக். 176, விலை 95ரூ. 25 தலைப்புகளில், வெற்றியின் வழிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த நூல். தனது கட்டுப்பாடும், பிறருக்குக் கொடுக்கும் மதிப்பும், மிகுதியான உழைப்புமே வெற்றி எனும் வீட்டிற்கு அழைத்து செல்பவை என்பதை எளிய தமிழில் எடுத்துக்கூறும் இந்த நூல், அனுபவத்தின் வெளிப்பாடு. எதையும் எடுத்துக்காட்டுடன் தெரிவிக்கும்போது எளிமையான புரிதல் என்பது இயல்பாக அமைகிறது என்பதை, இந்த நூலைப் படிப்பவர்கள் எளிதில் உணர முடியும். பண்பும், நாடு சார்ந்த நெறிமுறைகளும், அனுபவசாலிகளின் ஆக்கப்பூர்மான […]

Read more

தங்க விலை ரகசியம்

தங்க விலை ரகசியம், கே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 204, விலை 90ரூ. சின்னச் சின்ன விஷயங்கள். ஆனால் அதில் அடங்கும் பெரிசு. அதை நேரடியாகச் சொல்லாமல் ஹாஸ்யமாக, படித்தால் சிரிப்பு வரும் வகையில் எளிய தமிழில், ஆங்கிலம் அதிகம் கலந்தாலும் நெருடல் இல்லாமல் தங்க விலை ரகசியமாக தந்துள்ளார் ஆசிரியர். கணவன் மனைவி அல்லது நண்பர்கள் இருவர் உரையாடலில் எவ்வளவு செய்தியை உட்புகுத்தித் தந்துள்ளார். அதிரசம் சொல்லும் ருசியும், தங்கவிலை தரும் நாட்டு நடப்பும், ரியல் எஸ்டேட் தகிடுதத்தம், ஆபீஸ் […]

Read more

பட்டினத்தார் (புதுக்கவிதை வடிவில்)

பட்டினத்தார் (புதுக்கவிதை வடிவில்), காவ்யா பதிப்பகம், சென்னை, பக். 1321, விலை 1300ரூ. பட்டினத்தார் இயற்றிய பாடல்களை இன்றைய தலைமுறையினரும் கற்றுணரும் வகையில் புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார் நுலாசிரியர். அதோடு பேரறிவுக் களஞ்சியம் எனும் ஏனைய பாடல்களையும் இந்நூலில் புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார். இந்த இரண்டையும் படைத்தது வெவ்வேறான பட்டினத்தார் என்ற வாதத்திற்குள் செல்லாமல் பாடல்களின் உட்கருத்தினை படிப்போர் உணரும் வகையில் எளிய நடையில் புதுக்கவிதை வடிவில் தந்திருப்பது புது முயற்சியே. புராணக் கதைகள், நாயன்மார் வாழ்க்கை கோயில்கள், கோயில்கள் பற்றிய செவிவழிச் செய்திகள் […]

Read more

வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்

வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள், வெளி ரங்கராஜன், அடையாளம் வெளியீடு, திருச்சி, விலை 100ரூ. அசலானவர்களின் ஆவணங்கள் நாடகத்துக்காக நாடகவெளி என்ற இதழைத் தொடர்ந்து நடத்தியவர் வெளி ரங்கராஜன். தீராநதியில் தொடராக வந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். பேரா. இராமானுஜம் இயக்கிய வெறியாட்டம் நாடகத்தில் தன் அழுத்தமான நடிப்பாற்றலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் காந்திமேரி. ஆண்களே கொடிகட்டிப் பறந்து நாடக உலகில், முழுக்கப் பெண்களே பங்கேற்ற ஒரு குழுவை அமைத்து, சமூகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவர் கும்பகோணம் பாலாமணி. பாஸ்கரதாஸ் பாடல்களால் […]

Read more

அழுததும் சிரித்ததும்

அழுததும் சிரித்ததும், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், விலை 140ரூ. கதைகளாக வேண்டிய கட்டுரைகள் யுகமாயினி இதழில் பேரா. க. பஞ்சாங்கம் எழுதிய பத்திக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். உண்மையில் பஞ்சாங்கம் பொறுமையைக் கைக்கொள்ளாமல் ரொம்பவும் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மிக மிக நல்ல சிறுகதைகளாகவோ நாவல்களாகவோ வந்திருக்க வேண்டிய பல கதைகள் வெறுமனே கட்டுரைகளாகக் கலைந்துவிட்டன. ஆசிரியர் கட்டுரையாகச் சொல்லும்போதே ஒரு பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களுமாய் இருக்கின்றன. சிறுகதை உலகம் பல அரிய முத்துக்களை இழந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. […]

Read more

உலகத் தமிழ்க் கவிதைகள்

உலகத் தமிழ்க் கவிதைகள், தொகுப்பு செல்வா கனகநாயகம், விகடன் பிரசுரம், சென்னை, விலை 250ரூ. உலகத்தின் பரப்பையும் எல்லையையும் மற்ற மனிதர்களின் வாசனையையும் சிந்தனையையும் உணர்ந்து உள்வாங்குவதற்கு முன்பே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவன் தமிழன். அண்டிப் பிழைப்பது மட்டுமே புலவர்களின் இலக்கணமாக இருந்த காலத்தில் நீயோ மன்னன்? என்று கேள்வி கேட்கும் துணிச்சல் தமிழ்க் கவிதைக்கு இருந்தது. கலை கலைக்காகவே அழகியல் இல்லா இலக்கியம் அர்த்தமற்றது. கோஷம் போடுவதற்கும் கவிதைக்கும் வித்தியாசம் உண்டு மகனே என்றெல்லாம் விமர்சனப் புலிகள் தங்கள் […]

Read more

செம்மண் மடல்கள்

செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்), இரா. மீனாட்சி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, பக். 452, விலை 300ரூ. ஆரோவில் கிராமச் செய்தி மடலில் வாசகர்களுடன் உரையாடும் நோக்கில் எழுதப்பட்ட கடிதப்பாணிக் கட்டுரைகளின் தொகுப்பு. கடிதங்கள் நிதர்சனமானவை. அதிலும் ஒரு கவிஞரின் கடிதங்கள் என்பதால் ஆழ்மன உணர்வோடும் கவித்துவத்தோடும் எழுதப்பட்டுள்ளவை. கலை, அறிவியல், பண்பாஈடு, மொழி, பிரபஞ்ச நோக்கு என விரியும் இதன் பரிமாணம் வாசிப்போருக்கு அறிவுச்சுடரேற்றும் தன்மையுடையன. காஞ்சி மகா ஸ்வாமிகள் தனக்கு தந்த நெற்றுத் தேங்காய், சங்கரா என்னும் நாமம் தாங்கி […]

Read more
1 2 3 8