கிரா 95

கிரா 95, மூன்று தொகுப்புகள், தொகுப்பாளர்கள் பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், அன்னம் பதிப்பகம், விலை 700ரூ. ஆய்வுகள் அனுபவங்கள், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் 95-வது பிறந்தநாளையொட்டி ‘கி.ரா. என்னும் மானுடம்’, ‘கி.ரா.வும் புனைகதைகளும்’, ‘கோட்பாட்டு நோக்கு ஆய்வு’ என்ற மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. வாசக அனுபவங்கள், இலக்கிய நண்பர்களின் மதிப்பீடுகள், ஆய்வுக் கட்டுரைகள் என பல்வேறு கோணங்களில் கி.ரா.வை அணுகும் 82 கட்டுரைகளின் பெருந்தொகுப்பு. கி.ரா.வின் வாசகர்களுக்கு இக்கட்டுரைத் தொகுப்புகள் புதிய வெளிச்சங்களைத் தரக்கூடும். புதுப் புது அர்த்தங்களையும்கூட. […]

Read more

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர்

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, விலை 120 தமிழ்க் கவிதைத் தடத்தில் பன்மொழி ஆளுமையோடு விளங்கிய அப்துல் ரகுமானின் பவள விழாவையொட்டி, நூலாசிரியர் எடுத்த சற்றே நீண்ட நேர்காணலும் (64 பக்கங்கள்), 4 கட்டுரைகளும் இதில் உள்ளன. கவிதை குறித்த அப்துல் ரகுமானின் விரிந்த பார்வையும், புதியன வரவேற்கும் அவரது எண்ணமும் கவிதை குறித்த அவரது பதில்களில் தீர்க்கமாக வெளிப்பட்டுள்ளன. ஒரு பித்தனைப் போல் தனது கவிதைகளால் கேள்வியெழுப்பிய கவிஞர், ‘இன்னும் எனக்கு இந்த வாழ்க்கை புரியவில்லை’ […]

Read more

அழுததும் சிரித்ததும்

அழுததும் சிரித்ததும், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், விலை 140ரூ. கதைகளாக வேண்டிய கட்டுரைகள் யுகமாயினி இதழில் பேரா. க. பஞ்சாங்கம் எழுதிய பத்திக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். உண்மையில் பஞ்சாங்கம் பொறுமையைக் கைக்கொள்ளாமல் ரொம்பவும் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மிக மிக நல்ல சிறுகதைகளாகவோ நாவல்களாகவோ வந்திருக்க வேண்டிய பல கதைகள் வெறுமனே கட்டுரைகளாகக் கலைந்துவிட்டன. ஆசிரியர் கட்டுரையாகச் சொல்லும்போதே ஒரு பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களுமாய் இருக்கின்றன. சிறுகதை உலகம் பல அரிய முத்துக்களை இழந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. […]

Read more

உலக வரலாற்றை திசை திருப்பிய சொற்பொழிவுகள்

உலக வரலாற்றை திசை திருப்பிய சொற்பொழிவுகள், சௌமாரீஸ்வரி, மங்கை, சென்னை. பல தலைவர்களின் அனுபவப்பூர்வமான வழிநடத்தும் பேச்சுக்கள், வரலாற்றில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் ரஷ்யாவின் விளாடிமிர் லெனின், 1917ம் ஆண்டு நடத்திய போல்ஸ்விக் புரட்சியின் நினைவு தினமான1921ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி உரை நிகழ்த்தினார். அதில் நீ ஓநாய்களுக்கு நடுவில் வாழ நேர்ந்தால், அவற்றைப்போல ஊளையிடப் பழகிக்கொள். அவற்றை முழுவதுமாக வெளியேற்ற இந்த ஏற்பாடு தேவைப்படும் என்றார். காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், ஜவஹர்லால் நேரு, இதிரா […]

Read more

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், சென்னை 80, பக். 1864, விலை 1500ரூ. To buy this Tamil book – www.nhm.in/shop/100-00-0001-014-6.html காவல் தெய்வமான கருப்பசாமியைப் பற்றி புராணங்களில் கூறப்பட்டிருப்பதில் தொடங்கி, அவருடைய வேறு பெயர்கள், பூஜை முறைகள், வணங்க வேண்டிய நாள்கள், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கருப்பசாமி கோயில்கள் பற்றிய தகவல்கள் (அமைவிடம், கோயில் அமைப்பு, வழிபாடு விவரம்) இப்படி கருப்பசாமி குறித்த அனைத்துச் செய்திகளும் அடங்கிய அருமையான தொகுப்பு இது. ஏராளமான படங்களும் […]

Read more