கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர்
கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, விலை 120
தமிழ்க் கவிதைத் தடத்தில் பன்மொழி ஆளுமையோடு விளங்கிய அப்துல் ரகுமானின் பவள விழாவையொட்டி, நூலாசிரியர் எடுத்த சற்றே நீண்ட நேர்காணலும் (64 பக்கங்கள்), 4 கட்டுரைகளும் இதில் உள்ளன.
கவிதை குறித்த அப்துல் ரகுமானின் விரிந்த பார்வையும், புதியன வரவேற்கும் அவரது எண்ணமும் கவிதை குறித்த அவரது பதில்களில் தீர்க்கமாக வெளிப்பட்டுள்ளன. ஒரு பித்தனைப் போல் தனது கவிதைகளால் கேள்வியெழுப்பிய கவிஞர், ‘இன்னும் எனக்கு இந்த வாழ்க்கை புரியவில்லை’ என்று சொல்லியிருப்பதுதான் எவ்வளவு சத்தியமானது.
நன்றி: தி இந்து, 3/2/2018.