உடையும் இந்தியா – கல்கி – ஃபாலோ அப் விமர்சனம்

கல்கியில் ரமணன் எழுதி 16-12-12 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனத்தை வாசிக்க இங்கே  க்ளிக் செய்யவும். இதற்கு எதிர்வினையாக கல்கி இதழில் வந்த விமர்சனம் கீழே. ஆதாரக் குறிப்புகள் 1486 (பாலோ-அப்: விமர்சனம்) ராஜீவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய ‘உடையும் இந்தியா?’ பற்றி கல்கியில் விமர்சனம் செய்த ரமணன், அண்ணாதுரை சிஐஏ ஏஜெண்ட், ஈவெரா வன்முறையைத் தூண்டினார், மற்றும் ஹிட்லர் யூதர்களை இனப் படுகொலை செய்ததை வரவேற்றார் என்று அவதூறு செய்திருப்பதாகவும், திராவிட இனம் என்ற எதுவுமே இல்லை என்று ஆதாரமில்லாமல் வாதிட்டு […]

Read more

அஞ்ஞாடி

அஞ்ஞாடி, பூமணி, பக்கங்கள் 1066, வெளியீடு: க்ரியா, பி-37, கிரவுண்ட் ஃப்ளோர், 5வது குறுக்குத் தெரு, யுனிவர்சிட்டி காலனி, பாலவாக்கம், சென்னை – 41. விலை ரூ. 925 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-208-0.html தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் வரிசையில், கம்பீரமான ஓர் ஆசனத்தைப் பூமணிக்குத் தந்து இருக்கிறது ‘அஞ்ஞாடி’. ஆண்டி, மாரி என்ற இருவர் இடையே முகிழும் நட்பு தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கதை… அதனூடே கடக்கும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்… இவைதான் ‘அஞ்ஞாடி’. […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு – சோழப் பேரரசின் காலம்

தமிழ் மக்கள் வரலாறு – சோழப் பேரரசின் காலம், க.ப. அறவாணன், வெளியீடு: தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை – 600 029. விலை ரூ. 250 கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை.சதாசிவ பண்டாரத்தா, கே.கே.பிள்ளை – ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் சோழர் பேரரசு பற்றிய முதன்மை வரலாற்றை எழுதியதில் முக்கியமானவர்கள். இதில், பெரும்பாலும் சோழ அரசர்களின் வரலாறு முழுமையாகவும், சோழர்காலச் சமூக வரலாறு சற்றே குறைவாகவும் இருக்கும். மன்னர்களின் வரலாற்றைவிட, மக்களின் வரலாற்றைச் சொல்வதே உண்மையான வரலாறாக இருக்க […]

Read more

இருட்டிலிருந்து வெளிச்சம்

இருட்டிலிருந்து வெளிச்சம், அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், புதிய எண்: 243, ஏ. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. விலை ரூ. 240 சினிமா தொடர்பாக அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை வெறும் சினிமா விமர்சனங்களோ, அல்லது திரையுலகம் சம்பந்தமான தகவல் குறிப்புகளோ அல்ல. ஒரு எழுத்தாளன் இந்த பிரமாண்டமான கலையில் எதிர்கொண்ட சில அந்தரங்க தருணங்களைப் பற்றியது இந்த நூல். அந்த தருணங்கள் ஒரு எழுத்தாளனின் நுட்பமான மனதிற்கு மட்டுமே தட்டுப்படுபவை. சினிமாவைப் பொறுத்தவரை நமக்கு முன்னே கடந்து […]

Read more

விகடன் இயர்புக் 2013

விகடன் இயர்புக் 2013, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 125 இது போட்டிகள் நிறைந்த உலகம். இதில் கல்வியும் அறிவும் ஒரு சேரப் பெற்ற மனிதனே வெற்றிபெற முடியும். கல்வியையும் பட்டங்களையும் கொடுக்கும் கல்லூரிகள், அறிவைக் கொடுக்கிறதா என்பது கேள்விக்குறி. இந்த நிலையில், அறிவு ஆயுதத்தை விகடன் பிரசுரம் தயாரித்துள்ளது; ஆண்டுதோறும் தயாரிக்கவும் உள்ளது. ‘புறத்தை அறிந்துகொள்ளப் பயன்படுவது தகவல். தன் அகத்தை ஆராய்ந்து தெளிவதற்கு முற்படுவது அறிவு. வாழ்வின் இருப்பை விளங்கிக்கொள்ள வழிவகுப்பது ஞானம்’ என்று, […]

Read more

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், கபிலன் வைரமுத்து, பக்கம் 200, கிழக்கு பதிப்பகம், சென்னை – 14. விலை ரூ. 150 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-207-2.html நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் ஏங்கித் தவித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் மன உளைச்சல்களையும் அதிலிருந்து அவள் மீண்டதையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும் நாவல். அவளுடைய கணவன் ஊடகத்துறையில் செயல்படக்கூடியவன், அவனுடைய நண்பர்கள் நாட்டின் ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இணையதளங்கள் மூலமாகவும், கண்காட்சிகள் மூலமாகவும் மக்கள் விழிப்புணர்வு பெற வைக்கப் பாடுபடுகிறார்கள். […]

Read more

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு, ம.பொ. சிவஞானம், பக்கம் 160, பூங்கொடி பதிப்பகம், சென்னை – 4. விலை ரூ. 60 ‘செங்கோல்’ வார இதழில் ம.பொ.சிவஞானம் ‘நானறிந்த கலைஞர்கள்’ என்ற தலைப்பில் எழுதிய தொடரின் நூல்வடிவம் இது. எம்.ஆர். ராதா, என்.எஸ். கிருஷ்ணன், கே.ஆர். ராமசாமி போன்ற கலைஞர்களைப் பற்றிக் குறைவாகவும், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் அதிகமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு நடிகர் என்ற முறையிலும், ஓர் அரசியல்வாதி என்ற முறையிலும், நல்ல மனிதர் என்கிற முறையிலும் எம்.ஜி.ஆரின் நற்பண்புகளை மிகவும் சுவையாக விவரித்துச் […]

Read more

வாலிப வாலி

வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, பக். 372, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தர்ராஜன் தெரு, தி.நகர், சென்னை – 17, விலை ரூ. 250 82 வாரங்களாக சென்னை பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் வாலியுடன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். தமிழ் சினிமாவின் வரலாற்றினை வாலியின் மனப்பெட்டகத்தில் இருந்து அள்ளி எடுத்துத் தந்திருக்கிறார்கள். திரை உலகின் ஒவ்வொரு அங்குலத்தையும் வாலியின் வாக்கு அளந்து வைக்கிறது. நம் கண்முன் நான்கு தலைமுறையைத் தாண்டியும் அவரது திரைத்தமிழ் வெள்ளமாய் ஓடிவருவதை ஒவ்வொரு நேர்காணலின்போதும் ரசிக்க முடிகிறது. நான் […]

Read more

பாஷாவும் நானும்

பாஷாவும் நானும், வெளியிட்டோர்: வெஸ்ட்லேண்ட், வெங்கட் டவர், 165, பூந்தமல்லி ஐரோடு, மதுரவாயல், சென்னை – 95. விலை ரூ. 125 ரஜினிகாந்த்தின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் “பாட்ஷா.” அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, வசூல் சக்ரவர்த்தி என்று எடுத்துக்காட்டிய படம். ரஜினி நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் சுரேஷ்கிருஷ்ணா. பாட்ஷா படமாகும்போது நடந்த சுவையான சம்பவங்கள், படப்பிடிப்பில் ரஜினி காட்டிய ஆர்வம், படத்தில் செய்யப்பட்ட மாறுதல்கள்… இவைகளை எல்லாம் கதைபோல் எழுதியிருக்கிறார்கள், சுரேஷ் […]

Read more