காற்று மணல் நட்சத்திரங்கள்

காற்று மணல் நட்சத்திரங்கள், அந்த்வான் து செந்த், எக்சு பெரி, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, விலை 190ரூ. ‘குட்டி இளவரசன்’ தந்த எக்சு பெரியை மறக்க முடியாது. அந்த இளவரசன் கேட்ட சின்னஞ்சிறு கேள்விகளுக்கு விடை அறியாமல் விழித்திருந்தது, அருமையான காலம். எக்சு பெரி எப்போதும் மொழி மயக்கத்தில் கட்டுண்டவர் இல்லை. அவரது சுயசரிதை அடிப்டையிலேயே நாவலின் இனிய பயணம் தொடங்குகிறது. விமானங்களின் செயல்பாட்டில் இருந்த, விஞ்ஞானம் சரிவர பொருந்தி வராத காலக்கட்டத்தில் எழுதியிருக்கிறார். வானத்திலிருந்து பார்த்தால் எல்லாமே அழகு. விமானங்கள் பறக்கும்போது […]

Read more

எங்கதெ

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 எங்கதெ, இமையம், க்ரியா, விலை 110ரூ. இந்த ஆண்டு அதிகம் பேரால் படிக்கப்பட்டு, பரவலாகப் பேசப்பட்ட நாவல் இது. விளிம்புநிலை மக்களின் வாழ்வை யதார்த்தமான சித்திரங்களாக முன்வைப்பதில் தேர்ந்தவரான இமையம், இந்த நூலில் ஓர் ஆணின் மன அவசத்தைப் புனைகதையாக்கியிருக்கிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

எங்கதெ

எங்கதெ, இமையம், க்ரியா, சென்னை, விலை 110ரூ. சாவுற வெளையாட்டு ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை உரத்துப் பேசும் பல கதைகள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிறந்த கதைகளின் வரிசையில் முன்னணியில் வைக்க வேண்டியவற்றில் ஒன்று இமையம் எழுதியிருக்கும் எங் கதெ. இந்த நெடுங்கதையில் திருமணமாகி கணவனை இழந்த ஒரு பெண் மீது ஒருவன் கொண்ட காதல், அந்த ஆணின் பார்வையில் அவனது மொழியில் விவரிக்கப்படுகிறது. இந்த வெளையாட்டுக்கு நானாத்தான் போனேன். அவ கூப்பிடல, அவ இந்த வெளையாட்டுக்கு வல்லன்னுதா சொன்னா. வெளையாட்டுல […]

Read more

முதல் மனிதன்

முதல் மனிதன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, சென்னை, விலை 270ரூ. பிரெஞ்சு இலக்கியத்தின் பெரிய ஆதர்சம் ஆல்பெர் காம்யுதான். வெகுகாலமாக வெளியிடப்படாமல் இருந்து, சமீபத்தில் முதல் மனிதன் வெளியானபோது திசையெங்கும் பெரும் அதிர்வலைகள். சித்தாந்தம் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதில் காம்யு எப்போதும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்போதும் அவருக்கான இலக்கிய மரியாதை, பகிர்வு அப்படியே இருக்கிறது. பிரெஞ்சிலிருந்து நேரடிமொழிபெயர்ப்பு என்பதால், தொனி கொஞ்சமும் குறையாமல் வந்திருக்கிறது. அவரின் குழந்தைப் பருவமும், எதிர்கொண்டபோரும், எதிர்ப்பும், தந்தை, தேடிச் சென்ற […]

Read more

பறவைகள்

பறவைகள், அறிமுகக் கையேடு, ப. ஜெகநாதன், ஆசை, க்ரியா. ஒரு வித்தியாசமான பறவையைப் பார்க்கிறீர்கள். அது என்ன வகை, அதன் பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் இந்த நூல் கைகொடுக்கும். பறவைகளின் அடையாளம், பறவைகளின் பெயர்கள் குறித்த குழப்பங்களைத் தீர்க்கும்வகையில் படங்களும், பெயர்களும் தரப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, 22/4/2014.   —- தமிழரும் தாவரமும், கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகம். தமிழர் பண்பாட்டில் பண்டைக்காலம் தொட்டுத் தாவரங்கள் பெற்றுவந்த முக்கியத்துவம், பண்பாட்டுத் தொடர்புகள், பெற்ற பொருளாதார நலன்களை விரிவாகவும் […]

Read more

கொலைச்சேவல்

கொலைச்சேவல், இமையம், க்ரியா, சென்னை, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-157-5.html எளிய மனிதர்களின் கதைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் நம்காலத்தின் ஆகச்சிறந்த யதார்த்த எழுத்தாளர் இமையம். இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு கொலைச்சேவல். கிராமப்புறங்கள் நவீன வாழ்க்கையை எதிர்கொள்வது பற்றிய பெருமூச்சுகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் உள்ளன. வாசிப்பவர்களை அறையும் பட்டவர்த்தனமான யதார்த்த உண்மைகளைச் சொல்லும் கதைகளாக இவை படைக்கப்பட்டுள்ளன. அணையும் நெருப்பு என்கிற கதையில் வரும் கணவனை இழந்து சமூகத்தாலும் […]

Read more

அஞ்ஞாடி

அஞ்ஞாடி, பூமணி, பக்கங்கள் 1066, வெளியீடு: க்ரியா, பி-37, கிரவுண்ட் ஃப்ளோர், 5வது குறுக்குத் தெரு, யுனிவர்சிட்டி காலனி, பாலவாக்கம், சென்னை – 41. விலை ரூ. 925 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-208-0.html தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் வரிசையில், கம்பீரமான ஓர் ஆசனத்தைப் பூமணிக்குத் தந்து இருக்கிறது ‘அஞ்ஞாடி’. ஆண்டி, மாரி என்ற இருவர் இடையே முகிழும் நட்பு தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கதை… அதனூடே கடக்கும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்… இவைதான் ‘அஞ்ஞாடி’. […]

Read more

கொண்டலாத்தி

கொண்டலாத்தி, எழுதியவர்: ஆசை, பக்கம் 62, க்ரியா, சென்னை. விலை ரூ. 180 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-7.html புள்ளினங்கள் பற்றி நாற்பத்திரெண்டு எழிலான கவிதைகள், அவைகளில் வெளிப்படும் பறவைகளின் தீவிர ஈடுபாடு, கண்ணையும் மனதையும் கவரும் துல்லியமான புகைப்படங்கள், உள்ளடக்கத்திற்கேற்ற நூல் உருவாக்கம். சுகமான வாசிப்பனுபவம் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்நூலின் ஆசிரியர், ஆசை என்று கையெழுத்திட்டிருக்கும் ஆசைத்தம்பி, முன்னர் ‘சித்து’ என்ற கவிதைத்தொகுப்பின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமிழுக்கு எவ்வளவு நீண்ட கவிதை மரபு […]

Read more