காற்று மணல் நட்சத்திரங்கள்
காற்று மணல் நட்சத்திரங்கள், அந்த்வான் து செந்த், எக்சு பெரி, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, விலை 190ரூ.
‘குட்டி இளவரசன்’ தந்த எக்சு பெரியை மறக்க முடியாது. அந்த இளவரசன் கேட்ட சின்னஞ்சிறு கேள்விகளுக்கு விடை அறியாமல் விழித்திருந்தது, அருமையான காலம்.
எக்சு பெரி எப்போதும் மொழி மயக்கத்தில் கட்டுண்டவர் இல்லை. அவரது சுயசரிதை அடிப்டையிலேயே நாவலின் இனிய பயணம் தொடங்குகிறது. விமானங்களின் செயல்பாட்டில் இருந்த, விஞ்ஞானம் சரிவர பொருந்தி வராத காலக்கட்டத்தில் எழுதியிருக்கிறார். வானத்திலிருந்து பார்த்தால் எல்லாமே அழகு. விமானங்கள் பறக்கும்போது தானே பறப்பதுபோல் உணர்வதுதான் நல்லபடியாக அவை சென்றடைவதற்கான காரணங்கள் என்பார்கள்.
நிச்சயமாக கதை சுவாரஸ்யம், சாகசம், ரம்மியம் நிறைந்த வேலை என உணர வைக்கிறார். குட்டி இளவரசன் எழுதப் போவதற்கான ஆரம்ப சாத்தியங்கள் இந்த நாவலிலேயே தெரிய ஆரம்பிக்கிறது. பொதுவாக எக்சுபெரியின் படைப்புகளை மூளை கொண்டு அணுக முடியாது. உணர்வுகளின் சூழ்நிலையில் இன்னும் சுவை தருகிற இதம் சொல்லி மாளாது.
நேரடியாக பிரெஞ்சிலிருந்து வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கிறார். அப்படியே கன்னிமை மாறாமல் மொழி வந்திருக்கிறது. மிகச் சிறந்த நாவல். படித்துப் பார்த்தால் எக்சுபெரியின் ஒரு துண்டு வார்த்தைக்குக் கூட பொருள் இருப்பது புரியும்.
நன்றி: குங்குமம், 5/5/2017.