தமிழ் தமிழ் அகராதி

தமிழ் தமிழ் அகராதி, தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொற்களுக்கும் உரிய பொருள் என்ன என்பதைக் கூறும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கும் தமிழைக் கற்க விரும்புகிறவர்களுக்கும் இந்த அகராதி சிறந்த கையேடாகத் திகழும். நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழ் இலக்கிய அகராதி

தமிழ் இலக்கிய அகராதி, பாலுார் கண்ணப்ப முதலியார், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.625 பள்ளி, கல்லுாரிகளில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவ – மாணவியருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட அகராதி நுால். பழந்தமிழ் இலக்கிய சொற்களை, புரிந்து பொருள் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கிய மொழிக்கு மட்டுமின்றி, வழக்கு மொழிக்கான பொருளும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சொல்லகராதியாக மட்டுமின்றி, தொகை சொற்கள், தொடர் மொழி விளக்கங்கள், பிரபந்தங்கட்குரிய விளக்கங்கள், நுால், புலவர்கள் பற்றிய குறிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. பழந்தமிழ் நுால்கள் பற்றியும், அவற்றை இயற்றியவர் பற்றி அறியவும் உதவும். […]

Read more

தமிழ் அகராதி

தமிழ் அகராதி, தொகுப்பு த.கோவேந்தன், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ. தமிழ் இலக்கியங்களில் நெருடலான பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எளிய பொருள் என்ன என்பதைத்தெரிந்து கொள்வதற்காக புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரிடம் தமிழ் பயின்ற புலவர் த.கோவேந்தன், இந்த அகராதியைத்தொகுத்துத் தந்துள்ளார். ஒரே சொல்லுக்கு உரிய பல பொருள்களையும் அகர வரிசைப்படி தந்து இருப்பதால், மாணவர்கள்மட்டும் அல்லாமல் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த நூல் மிக்க பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழ்க்கிளை மொழி அகராதி

தமிழ்க்கிளை மொழி அகராதி, தொகுப்பாசிரியர் இரா.பாலகிருஷ்ணன், சபாநாயகம் பப்ளிகேஷன்ஸ், விலை 400ரூ. ஒரு பொருளைக் குறிக்கும் ஒரு சொல், ஒரு வட்டாரத்தில் ஒரு விதமாகவும், வேறு வட்டாரத்தில் வேறு விதமாகவும் குறிப்பிடப்படுவது கிளை மொழிச் சொற்கள் எனப்படுகின்றன. தமிழ் மொழியில் உள்ள இது போன்ற சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருளுடன் அவை எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவை என்பதையும் அகராதியாகத் தந்து இருக்கிறார் ஆசிரியர். சுமார் 5 ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை மொழிச் சொற்கள் உள்ளன என்பது இதம் மூலம் […]

Read more

சித்த வைத்தியத் திரட்டு

சித்த வைத்தியத் திரட்டு, தி.நா.அங்கமுத்து முதலியார், சங்கர் பதிப்பகம், பக். 264, விலை 225ரூ. பத்தியம், புடம், கிருதம், எரு, விறகு வகைகளையும், நிறுத்தல் அளவை நிறைகள், முகத்தல், பழங்கால சித்த மருத்துவ அளவைகளையும் பட்டியலிடுகிறது இந்நூல் நன்றி: தினமலர், 21/5/2017.   —-   தமிழ் மொழி அகரமுதலி, ஞானச்செல்வன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 120ரூ. மக்களிடம் பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கும், தமிழில் கலந்து கிடக்கும் தெலுங்கு, கன்னடம், பாரசீகம், அரேபியச் சொற்களுக்கும் பொருள் தருவதாக அமைந்துள்ளது இந்நூல். […]

Read more

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி, சந்தியா பதிப்பகம், விலை 900ரூ. ஜோகன் பிலிப் பெப்ரிசியஸ் என்ற பெயர் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், அகராதியியலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. ஏனெனில் பெப்ரிசியஸ்தான் தமிழின் முதல் ‘தமிழ் – ஆங்கிலம்’ அகராதியான ‘பெப்ரிசியஸின் தமிழ் – ஆங்கிலம் அகராதி’யை (Fabricius’s Tamil-English Dictionary) உருவாக்கினார். ஜெர்மனியில் பிறந்தவரும், லுத்தரன் சபையைச் சேர்ந்தவருமான பெப்ரிசியஸின் இந்த அகராதி, வீரமாமுனிவரின் சதுரகாதி வெளிவந்து 47 ஆண்டுகளுக்குப் பின் 1779-ல் வெளியானது. இந்த அகராதியின் முதல் பதிப்பில் 9000 […]

Read more

சட்டச் சொல் அகராதி

சட்டச் சொல் அகராதி, வீ. சந்திரன், புத்தகப் பூங்கா, 17/9, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. நீதிமன்றங்களில் வழக்காடும் தமது வக்கீல்கள் என்ன சொல்லி வாதாடுகிறார்கள் என்பது குறித்து அந்த வழக்குக்கு உரியவர்கள் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது சட்டத்துறையில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியின் காரணமாக, சட்ட நுணுக்கங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் சட்டக்கலை சொற்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழில் வடிவமைத்துள்ளார் ஆசிரியர் […]

Read more

மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை)

மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை), சித்திரக்கதையாக்கம் படம் – காலேப் எல். கண்ணன், வசந்தா பிரசுரம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 50ரூ (ஒவ்வொரு புத்தகமும்). படக்கதையில் விஞ்ஞானிகள் வெறும் கதைகளைவிட சித்திரக்கதைகள் மாணவர்களை அதிகம் கவரும். மேரிக்யூரி, ஆர்க்கிமிடிஸ், அலெக்சாந்தர் பிளமிங், லூயி பாஸ்டியர் ஆகிய விஞ்ஞானிகளின் வரலாறுகள், கண்கவரும் வண்ணப்படங்களுடன், சித்திரக்கதைப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆர்ட் காகிதத்தில், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகங்கள் அமைந்துள்ளன. மாணவ-மாணவிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற புத்தகங்கள்.   […]

Read more