தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி
தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி, சந்தியா பதிப்பகம், விலை 900ரூ. ஜோகன் பிலிப் பெப்ரிசியஸ் என்ற பெயர் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், அகராதியியலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. ஏனெனில் பெப்ரிசியஸ்தான் தமிழின் முதல் ‘தமிழ் – ஆங்கிலம்’ அகராதியான ‘பெப்ரிசியஸின் தமிழ் – ஆங்கிலம் அகராதி’யை (Fabricius’s Tamil-English Dictionary) உருவாக்கினார். ஜெர்மனியில் பிறந்தவரும், லுத்தரன் சபையைச் சேர்ந்தவருமான பெப்ரிசியஸின் இந்த அகராதி, வீரமாமுனிவரின் சதுரகாதி வெளிவந்து 47 ஆண்டுகளுக்குப் பின் 1779-ல் வெளியானது. இந்த அகராதியின் முதல் பதிப்பில் 9000 […]
Read more