விவேகானந்தம்

விவேகானந்தம், எஸ்.சுஜாதன், தமிழில்: ப.விமலா, காவ்யா, பக். 320, விலை ரூ. 350. மலையாளத்தில் எழுதப்பட்ட சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றுப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பே விவேகானந்தம். இந்து மதத்தின் சாராம்சங்களை இந்தியாவுக்குள் மட்டுமன்றி மேற்கத்திய நாடுகளிலும் சுவாமி விவேகானந்தர் பரப்புரை செய்தார். இந்தியா, வெளிநாடுகளில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சுமார் ஆறு வருடப் பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை இந்த நாவல் பதிவு செய்துள்ளது.தீவிர இந்து மதப் பற்றாளரான சுவாமி விவேகானந்தர் பிற மதங்களிலுள்ள நல்ல பல கருத்துகளை தயங்காமல் ஏற்றுக்கொண்டார். […]

Read more

ஒரு கதைசொல்லியின் கதை

ஒரு கதைசொல்லியின் கதை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா… ஏன் சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி தானே சோறு ஊட்டுனாங்க. அப்போ நம்பினோம். மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது, யாராவது பேசுவாங்களானு ஏங்குற மனசுக்கு கதை சொன்னா பிடிக்கும். அதை சிவா செய்து கொண்டிருக்கிறான். வேண்டாமென்று உதறித் தள்ளிய காதலி, குண்டடிபட்டு கிடக்கும் போதும் அன்பு மாறாமல் சிவாவால் பாதுகாக்க முடிகிறதென்றால், அந்த காதல் […]

Read more

கடுவழித்துணை

கடுவழித்துணை, கமலதேவி, வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.150. இறப்பு வீடுகளின் துயரம் நேரடியான கதைமொழியுடன் தமிழ்ச் சூழலில் அறிமுகமானவர் எழுத்தாளர் கமலதேவி. ‘சக்யை’, ‘குருதியுறவு’ என அடுத்தடுத்து ஒரே ஆண்டில் (2019) இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘கடுவழித்துணை’ (2020) இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளே இவரது கதைகளின் நிலம். கிராமமும் நகரமும் கதைகளில் மாறி மாறி வருகின்றன. கதையின் திறப்பு ஏதாவதொரு ஒற்றைச் சொல்லில் மறைந்து கிடக்கும்படி எழுதுவது ஒரு வகை. அந்த மந்திரச் சொல்லைப் பிடித்துக்கொண்டுதான் மொழியால் […]

Read more

தமிழன்னையின் மாட்சி

தமிழன்னையின் மாட்சி, கவிஞர் இரா.கருணாநிதி, வனிதா பதிப்பகம், விலைரூ.140. சந்தக் கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நுால். பொதுவுடைமை, சமூக நீதி, சமூக அவலம், நீர் மேலாண்மை, விழிப்புணர்வு போன்ற கவிதைகளில் பொது நலப் பார்வையைக் காண முடிகிறது. இயற்கை, இல்லறம், தாய்மை, காதல் மற்றும் கையறு நிலை சார்ந்த கவிதைகளில் இதம் இழையோடுவதை உணர முடிகிறது. பொதுவான தலைப்புகளில் வரும் இசைப்பாடல்கள் மற்றும் தத்துவப் பாடல்களில் மனித நேயம் எதிரொலிக்கிறது. சில மழலைப் பாடல்கள் தாலாட்டுகின்றன. – மெய்ஞானி பிரபாகரபாபு நன்றி: தினமலர், […]

Read more

வேத கணிதம் செயல்முறைகள்

வேத கணிதம் செயல்முறைகள், மு.தனசேகரன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.275. வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக் காட்டுகிறது. கணினி, கால்குலேட்டருக்கு அடிமையான மூளையை, வேதக் கணித முறையால் மீட்டு விடலாம் என்கிறது இந்த நுால். மாணவருக்கு பெரிதும் பயன் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் இக்கணிதத்தில், 16 சூத்திரங்களும், 13 உபசூத்திரங்களும் உள்ளன. இவற்றை, புரி கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் உருவாக்கினார். வேதக் கணிதம் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், […]

Read more

பாலில் சர்க்கரை பழுதாகலாமோ?

பாலில் சர்க்கரை பழுதாகலாமோ?, ப.க.பொன்னுசாமி, கனவு வெளியீடு, விலைரூ.80. பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக பணியாற்றிய பேராசிரியரின் கட்டுரை தொகுப்பு நுால். சில கட்டுரைகள், அவர் படித்த கல்வி நிறுவனங்களை சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளன. இரண்டு தீபாவளி என்ற கட்டுரையில், சோக நிகழ்வுகள் சொல் ஓவியமாகியுள்ளன. மகன் நாவரசு நினைவுடனும், ஆழ்துளைக் குழாயில் உயிர் விட்ட சிறுவன் சுஜித் நினைவுடனும் வரைந்துள்ளார். சென்னையிலிருந்து புறப்படும் நிகழ்வை ஒரு கட்டுரையாக வடித்துள்ளார். சென்னை வரும்போது, மகன் இருந்தான்; நாய் ஜானியும் இருந்தது. போகும்போது மகனும் இல்லை; […]

Read more

இறையுதிர்காடு

இறையுதிர்காடு,  இந்திரா சௌந்தர்ராஜன், பக்.1104, (2 தொகுதிகள்); விகடன் பிரசுரம், விலை ரூ.1350; இறையுதிர் காடு- ஆனந்த விகடனில் 87 அத்தியாயங்களுடன் தொடராக வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்றால் அது மிகைஅல்ல. சித்தர்களில் போற்றுதலுக்குரியவரும், பிரசித்திப் பெற்றவருமானவர் போகர். பாஷாணங்களின் சேர்மானத்தை நேர்த்தியாக கையாள்வதில் வித்தகர். பழனிமலை முருகப் பெருமானுக்கு நவபாஷாணத்தாலான சிலையொன்றை உருவாக்கியவர். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். முன்னதாக சோதனை முயற்சியாக லிங்கமொன்றை உருவாக்கினார். சிலையை மலைக்கும், லிங்கத்தை உலக வெளிக்கும் என நிர்மாணித்தார். சிலை […]

Read more

அழகிய நதி

அழகிய நதி, பி. ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், விலைரூ.400.   வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர் தரம் பால். இந்தியா பற்றிய கனவுகளில் ஆழ்ந்த கருத்தை சிந்தித்தவர். இந்திய அளவிலும், உலக அளவிலும் அவரது ஆய்வுகளுக்கு வரவேற்பு இருந்துள்ளது. இந்த நுாலில், 18ம் நுாற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்திருக்கின்றன என்பதை மிகவும் விரிவாக ஆவணங்களின் தரவுகளோடு எடுத்துரைக்கிறார். கணிதவியல், வானவியல் சிறந்திருந்ததை பிரிட்டிஷார் ஆவணங்களிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கும்போது, பெருமையை உணர்கிறோம். இந்தியாவில் […]

Read more

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள்

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள்,   ப.ஜெயக்குமார்,  உமாதேவி பதிப்பகம், பக்.144, விலை ரூ. 200.  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஆண்கள் அறுபது பேர்; பெண்கள் மூவர். காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசியார் மூவரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் நேரிடையாக (திருத்தொண்டத் தொகையில்) குறிப்பிடப்பட்டவர்கள். ஆனால், நாயன்மார்கள் பலரது வாழ்க்கையில் அவர்களுக்குப் பெருமளவில் உதவியதுடன், அவர்களை இறையருளுக்குப் பாத்திரமாக்கிய இல்லத்தரசிகள், சகோதரி, மகள் போன்றோரின் சிறப்புகளை உலகறியவில்லை என்பதுடன், நாம் உலகத்தாருக்கு உணர்த்தவில்லை என்பதுதான் உண்மை. அந்த அருஞ்செயலை இந்நூல் செய்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்று பெண் […]

Read more

நபிகளாரின் பொன்மொழிகள்

நபிகளாரின் பொன்மொழிகள் முஸ்னது அஹ்மத், அரபு மூலம்: அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்); தமிழில்: அ.அன்வருத்தீன் பாகவி, சா.யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி; ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன், பாகம் 1; பக்.726; ரூ.650; பாகம் 2; பக்.872;  விலை ரூ.650. 1300 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 780- களில் துர்க்மெனிஸ்தானில் பிறந்து ஈராக்கில் வாழ்ந்த இமாம் அகமது பின் ஹன்பல் என்பவர் தேடி ஆய்வு செய்து தொகுத்த ;முஸ்னது அஹ்மத் என்னும் நூல் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு முதல் இரண்டு பாகங்கள் […]

Read more
1 2 3 17