நவசெவ்வியல் பொருளியல்

நவசெவ்வியல் பொருளியல், எஸ்.நீலகண்டன், எம்ஐடிஎஸ், காலச்சுவடு வெளியீடு, விலை: ரூ.425. நவசெவ்வியல் உருக்கொண்டபோது நிலவிய உலகப் பொருளியல் சூழலைக் குறித்த விரிவான அத்தியாயம், அதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. தொழில் முதலாளியம் சரிவுற்று, நிதி முதலாளியம் வளரத் தொடங்கிய காலம் அது. பொருளியல் நோக்கில், இந்தியாவின் காலனிய வரலாறும் அந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. மரபுவழித் தொழில்கள் அழிக்கப்பட்டு, காலனி நாடுகள் கச்சாப் பொருட்களை விளைவிக்கும் இடங்களாகவும் சந்தைகளாகவும் மாறிக்கொண்டிருந்த காலத்தில்தான் நவசெவ்வியல் பொருளியல் கோட்பாடுகள் விவாதத்துக்கு வரத் தொடங்கின. நிதி முதலாளியம், பொருளியல் […]

Read more

உயிரசைதல்

உயிரசைதல், ஜீவிதன், நீந்தும் மீன்கள் வெளியீட்டகம், விலை: ரூ.250. எரிந்தணையும் தீவிரம் தொண்ணூறுகளின் மத்தியில் சிற்றிதழ் சூழலில் அறிமுகமாகி 2000 வரை தொடர்ந்து கவிதைகள் எழுதியவர், சிவகங்கையில் வசிக்கும் கவிஞர் ஜீவிதன். பின்னரும் கவிதைகள் எழுதினாலும் முந்தைய அளவுக்குச் சீராக இயங்கவில்லை. நெடுங்காலக் காத்திருப்புக்குப் பின் ஜீவிதனின் கவிதைகள் ‘உயிரசைதல்’ எனும் தலைப்பில் தொகுப்பாகியுள்ளது. 2000-க்குப் பின்பான தமிழ்க் கவிதைகள் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டன. எனினும், ஜீவிதனின் கவிதைகள் கவிமனதின் ஊசலாட்டங்களையும் அலைக்கழிப்புகளையும் அதிகமும் பேசுகின்றன. அக்கவிதைகளில் வெளிப்படும் தவிப்பு அதன் நேர்மைத்தன்மை […]

Read more

மா.அரங்கநாதன் படைப்புகள்

மா.அரங்கநாதன் படைப்புகள், நற்றிணை வெளியீடு, விலை: ரூ.890. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தின் தாக்கம், நவீன இலக்கியத்தின் வெவ்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். கவிதைதான் தொல் இலக்கிய வடிவம். பெரும்பாலான நவீன இலக்கியப் படைப்பாளிகள் கவிதையிலிருந்துதான் தங்கள் எழுத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கவிதை எழுதாமல் நேரடியாகக் கதை எழுதியவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் மா.அரங்கநாதன் (1932-2017). “சிறுகதையே இன்னொரு விதத்தில் கவிதையோட விளக்கம்தான்” என்று கூறிய இவர், கவிதையின் நுண்மையையும் பருண்மையையும் மிகச் சாதாரணமாகத் தன் புனைகதைக்குள் கொண்டுவந்தவர். அவ்வகையில் மா.அரங்கநாதன், தொல் […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள்,  பெ.பெரியார்மன்னன், விவேகா பதிப்பகம், பக்.118, விலை ரூ.145. சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பல்வேறுவிதமான வழிபடும் முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் அமைந்துள்ள பழனியாபுரம் கிராம எல்லை வனப்பகுதியில் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே வழிபடுகிறார்கள். இரவு நேரத்தில் காவல்தெய்வமான “முனி’ உலாவுவதால் இக்கோவிலுக்குப் பெண்கள் செல்வதில்லை. குமாரபாளையம் கிராமத்தின் நுழைவு வாயிலில் வெள்ளாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது “சாராய’ முனியப்பன் கோவில். முனியப்ப […]

Read more

முகம்மது பின் துக்ளக்

முகம்மது பின் துக்ளக் (கோமாளியாக்கப்பட்ட கோமான்), செ.திவான், ரெகான் சுலைமான் பதிப்பகம், பக்.144, விலை ரூ.100. கி.பி.1325 இல் இருந்து கி.பி.1351 வரை டில்லியில் ஆட்சி செய்தவர் முகம்மது பின் துக்ளக். திரைப்படம், நாடகம், புதினங்களில் அவர் கோமாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் 1971 இல் வெளிவந்த “முகமது பின் துக்ளக்’ திரைப்படத்திலும் அவர் கோமாளியாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார். முகமது பின் துக்ளக் பற்றிய உண்மையான வரலாற்றை இந்நூல் கூறுகிறது. இபின் பதூதாவின் பயணக் குறிப்புகளிலான வரலாற்று நூலில் முகமது பின் துக்ளக் பற்றிக் கூறப்பட்டிருந்த கருத்துகள் […]

Read more

அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2)

அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 2), இரா.சிவராமன், வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.110. கணிதம் என்றாலே சிலருக்கு கசக்கும். இருந்தாலும் தேர்வில் முழு மதிப்பெண் பெற உதவுவதும் அதே கணிதம் தான். அத்தகைய கணிதம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நம்மை அறியாமலே பல விஷயங்களில் இந்த கணிதம் முக்கிய பங்காற்றுகிறது. நாம் அதிக அளவு பயன்படுத்தும் வார்த்தைகள் இந்த கணித விதிக்கு உட்பட்டே அமைகின்றன. நகரங்களில் ஏற்படும் நெரிசலையும், பயண நேரத்தையும் குறைக்க […]

Read more

திருமுறையும் திருநெறியும்

திருமுறையும் திருநெறியும், முனைவர் க.சேகர், ஐயா நிலையம், விலைரூ.120. பன்னிரு திருமுறையில் தேவார பதிகங்களை இயற்றிய சமயக்குரவர்கள் சைவ சமய எழுச்சிக்கு ஆற்றிய தொண்டுகளை விவரிக்கும் நுால். கோவில்களில் வடமொழி செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் திகட்டாத தமிழ்ப் பண்ணிசையை ஒலிக்கச் செய்தவரான சம்பந்தரின் நற்பணிகளையும், தெய்வீகப் பண்களையும் பாடித் திருத்தலங்களில் உழவாரப்பணி செய்த நாவுக்கரசரின் இறை தொண்டும், கி.பி., 7ம் நுாற்றாண்டிலேயே கலப்பு மணம் புரிந்த சுந்தரரின் பேதமற்ற தன்மையும், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரின் சிறப்புகளும் விவரிக்கப்படுகின்றன. முருக வழிபாட்டின் தொன்மையை விளக்கி, சங்க […]

Read more

ஒரு காதல் கதை

ஒரு காதல் கதை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.280 காதல் கதை என்று ஆரம்பிக்கப்பட்டாலும், மனித உணர்வுகளை சொல்லுகின்ற கதை. அப்பா, மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்ட விஷயம். எந்த தலைமுறையாக இருந்தாலும் தந்தை, மகன் பிரச்னைக்கு தீர்வு கிடையாது என்பதை அவர்களது வார்த்தைகள் விவரிப்பது சுவையான உணர்வு. வாயும், இதயமும் எல்லாருக்கும், எல்லா நேரமும் ஒண்ணா இருக்காது என்பதற்கு தந்தை, மகன் உரையாடல் ஒரு சோறு பதமாக சொல்லலாம். மெத்த படித்த சீனியர் சிட்டிசன்களின் வடிகால் […]

Read more

அக்கா

அக்கா,  ஏ.எஸ்.பொன்னம்மாளின் சட்ட மன்ற சரிதம், திலகபாமா, காவ்யா,  பக்: 586, விலை ரூ.600. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, ஓர் ஆதிதிராவிடர் நல விடுதியில் வார்டனாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் அரசியலில் நுழைந்து ஏழு முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து சாதனை படைத்த ஏ. எஸ். பொன்னம்மாளின் வாழ்க்கை வரலாறு, சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்த நூல். 1957-இல் முதன்முதலாக நிலக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றது, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, […]

Read more

மலரினும் மெல்லிது

மலரினும் மெல்லிது, வெ.நல்லதம்பி, வள்ளுவன் வெளியீட்டகம், பக்.280, விலை ரூ.300. மலர் சாகுபடியை மையப்படுத்தியும், மலர்கள் குறித்த உலகளாவிய பல நுணுக்கமான செய்திகளை நாவல் முழுவதும் ஆங்காங்கே பதிவுசெய்தும் புனையப்பட்ட நாவல் “மலரினும் மெல்லிது’. மலர் சாகுபடியை வாழ்வாதாரமாகக் கொண்ட, எளிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்த வேளாண் பல்கலைக்கழக மாணவி கமலாவும், அமெரிக்காவில் வசிக்கும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரும் முதன்மைக் கதாபாத்திரங்கள். இவர்கள் இருவருக்கும் மலர்கள் மீதும், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் மலர் சாகுபடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்துதல் […]

Read more
1 2 3 4 5 23