மலையாளக்கரையினில் இஸ்லாம்

மலையாளக்கரையினில் இஸ்லாம், செ.திவான், ரெகான் சுலைமான் பதிப்பகம், விலைரூ.200 கேரளாவில் இஸ்லாம் காலுான்றியதை வரலாற்றுப் பூர்வமாக விவரிக்கும் நுால். மொத்தம் 10 தலைப்புகளில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. எண்ண அலைகளில் துவங்கி, கடல், பழந்தமிழர் வாணிபமும் பன்னாட்டு தொடர்பும், அரேபியா, அரேபியரின் வணிகம், குதிரை, இஸ்லாம், சந்திரன், சேரமான் பெருமாள் இயல்களின் கீழ் தகவல்கள் உள்ளன. முதல் இயலில், தமிழகத்தில் முஸ்லிம்கள் பற்றிய தகவல் வரலாறு மற்றும் சங்க கால இலக்கிய பின்னணியுடன் அலசித் தரப்பட்டுள்ளது. அடுத்து கடல் பற்றிய குறிப்புகளும், இலக்கிய பின்னணி மற்றும் […]

Read more

முகம்மது பின் துக்ளக்

முகம்மது பின் துக்ளக் (கோமாளியாக்கப்பட்ட கோமான்), செ.திவான், ரெகான் சுலைமான் பதிப்பகம், பக்.144, விலை ரூ.100. கி.பி.1325 இல் இருந்து கி.பி.1351 வரை டில்லியில் ஆட்சி செய்தவர் முகம்மது பின் துக்ளக். திரைப்படம், நாடகம், புதினங்களில் அவர் கோமாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் 1971 இல் வெளிவந்த “முகமது பின் துக்ளக்’ திரைப்படத்திலும் அவர் கோமாளியாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார். முகமது பின் துக்ளக் பற்றிய உண்மையான வரலாற்றை இந்நூல் கூறுகிறது. இபின் பதூதாவின் பயணக் குறிப்புகளிலான வரலாற்று நூலில் முகமது பின் துக்ளக் பற்றிக் கூறப்பட்டிருந்த கருத்துகள் […]

Read more

சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா

சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா, செ.திவான், அட்சரம் பதிப்பகம், விலை: ரூ.130, கந்தர்வ கான கிட்டப்பா கிராமபோன் இசைத்தட்டுகள் வெளிவந்த காலத்தில் இசை ரசிகர்களிடம் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் கிட்டப்பா. சங்கரதாஸ் சுவாமிகளிடம் இசைப் பயிற்சி பெற்று இசைநாடக மேடைகளில் கதாநாயகனாக உலாவந்தவர், உச்ச ஸ்தாயியில் பாடுவதில் வல்லவர், கதர் உடுத்தி தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாளை இசையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு. நெல்லையைச் சேர்ந்த வரலாற்றறிஞர் செ.திவான், தன் மண்ணில் பிறந்த மாபெரும் இசைக்கலைஞருக்குச் […]

Read more

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள், செ.திவான், இலக்கியச் சோலை, விலை 90ரூ. காந்தியால் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி கிலாபத் இயக்கம். அந்த இயக்கத்தைத் தொடங்கிய அலி சகோதரர்களின் வரலாறு இது. வரலாற்று ஆய்வாளர் செ.திவானின் 120-வது நூல். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும், செ. திவான், சுஹைனா பதிப்பகம்,  பக்.216, விலை 200ரூ. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றி தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியபோது அதை எதிர்த்து, தனி நபராகவோ, கூட்டாகவோ வன்முறை வழியில் போராட்டங்கள் நடத்தி, தியாகங்கள் பல புரிந்து தம் இன்னுயிரைத் துறந்தவர்கள் ஏராளம். அவர்களில் பலரையும், அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும் இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது. மக்களின் மன எழுச்சியினாலும், வரலாற்றின் மறுமலர்ச்சியாலும் புரட்சி இயக்கங்கள் பல தோன்றி வளரத் தொடங்கின. குறிப்பாக சாபேகர் சகோதரர்களிடம் காணப்பட்ட ஆர்வமும் […]

Read more

நாகூர் இ.எம்.ஹனீபா

நாகூர் இ.எம்.ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ. செ. திவான் பாளையங்கோட்டைவாசி. படிப்பு, எழுத்து, மறுமலர்ச்சி எனத் தம் வாழ்நாளைக் கழித்துக் கெண்டிருப்பவர், அடுத்த தனது 100வது நூலை மலபார் மாப்பிள்ளை புரட்சி – 1921 என்ற பெயரில் அதுவும் 1000 பக்கங்களில் வெளியிட இருக்கிறார். சுஹைனா பதிப்பகம் இவரது சொந்தப் பதிப்பகம் திவானுக்கு ‘தி’வானே எல்லை. ஹனீபா இசை முரசு அல்ஹாஜ். இரவது பாடல்கள் ‘ஹனி’போல் மென்மையன்று, முரசுபோல் ஆரவாரமுடையது. திராவிடமும் தெய்வீகமும்(தீன்) இவரது இரண்டு கண்கள். பொருந்தவில்லையே என்று […]

Read more

இசை முரசு நாகூர் ஹனீபா

இசை முரசு நாகூர் ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ. ஆரம்ப காலத்தில் இருந்து, தி.மு.கழகத்தில் விசுவாசத்துடன் பணியாற்றியவர். “இசை முரசு” நாகூர் அனீபா. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடனும், மற்ற தலைவர்களுடனும் நெருங்கிப்பழகியவர். திரைப்படங்களில் பாடி புகழ் பெற்றவர். தி.மு.கழக மாநாடுகளில் அவரது இசை நிகழ்ச்சி தவறாது இடம் பெறும். நாகூர் ஹனீபாவின் வாழ்க்கை வரலாற்றை, வரலாற்று ஆசிரியர் செ. திவான் பெரு நூலாக எழுதியுள்ளார். இதைப் படிப்பதன் மலம் நாகூர் ஹனீபாவின் வரலாற்றை மட்டுமல்ல, […]

Read more

வ.உ.சி. வாலேஸ்வரன்

வ.உ.சி. வாலேஸ்வரன், செ.திவான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், சென்னை, விலை 100ரூ. “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் மகன் பெயர் வாலேஸ்வரன். அவரைப் பற்றிய புத்தகம் இது. இவருக்கு வாலேஸ்வரன் என்ற பெயர் வந்தது எப்படித் தெரியுமா? சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்ட வ.உ.சிதம்பரனாருக்கு வெள்ளையர் ஆட்சி “இரட்டை ஆயுள் தண்டனை” விதித்தது. அத்துடன் அவர் பெற்ற வக்கீல் பட்டத்தை ரத்து செய்து, கோர்ட்டில் வழக்காட முடியாதபடி தடை விதித்தது. விடுதலையடைந்தபின், வ.உ.சி. வறுமையில் வாடினார். கோர்ட்டிற்கு சென்று வக்கீலாக வாதாடவும் முடியவில்லை. […]

Read more

காலம் போற்றும் கவி. கா. மு. ஷெரீப்

காலம் போற்றும் கவி. கா. மு. ஷெரீப், செ. திவான், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், பக். 316, விலை 200ரூ. பாட்டும் நானே பாடலை எழுதியது யார்? பொன்னான வாழ்வே மண்ணாகி போமா, நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே எனும் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் நம் மனக்கண் முன் வருபவர் கா. மு. ஷெரீப். அவரை திரைப்பட பாடலாசிரியர் என்ற அளவில் மட்டும் தெரிந்து வைத்திருக்கும் இக்கால தலைமுறையினருக்கு, […]

Read more

வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள்

வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள், குஞ்ஞாலிகள், செ.திவான், சுகைனா பதிப்பகம், பக். 584, விலை 500ரூ. மரைக்காயர் என்ற சொல்லின் பொருள் என்ன? உண்மையில், 17/5/1498லேயே, இந்தியாவில் அன்னியரை எதிர்த்து போராடும் விடுதலை போர் துவங்கிவிட்டது. ஆம் அன்றுதான், கள்ளிக்கோட்டை அருகே கப்பாடு என்ற இடத்தில் வாஸ்கோடாகாமா என்ற போர்த்துக்கீசியன், மூன்று கப்பல்களோடு இந்திய மண்ணில் கால்பதித்தார். மேலைக் கடற்கரையில் காலூன்றி விட்டால், படிப்படியாக இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்தியாவின் செல்வவளத்தை சுரண்டிவிடலாம் என்பதே போர்த்துக்கீசியர்களின் திட்டம். அப்போது, கள்ளிக்கோட்டையை ஆண்டு வந்த சாமுத்திரி […]

Read more
1 2