எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள்

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 808, விலை 550ரூ. தற்கால வரலாற்றையும் சென்ற தலைமுறையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த கால கட்டத்தையும் இரண்டறக் கலந்து எழுதிச் செல்கிற நாவல் இது. முத்தமிழன், ரகு உள்ளிட்ட ஏழு கதாபாத்திரங்களுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையும் ஒரு கதாபாத்திரமாக அமைத்திருப்பது புதுமை. நன்றி: குமுதம், 31/8/2016.   —- தெரியும் ஆனால் தெரியாது, முனைவர் ந. அப்புராஜ், தண்மதி பதிப்பகம், பக்.110, விலை 120ரூ. மிகப்பெரிய கருத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் திணித்து வைத்திருப்பதுபோல் […]

Read more

இசை முரசு நாகூர் ஹனீபா

இசை முரசு நாகூர் ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ. ஆரம்ப காலத்தில் இருந்து, தி.மு.கழகத்தில் விசுவாசத்துடன் பணியாற்றியவர். “இசை முரசு” நாகூர் அனீபா. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடனும், மற்ற தலைவர்களுடனும் நெருங்கிப்பழகியவர். திரைப்படங்களில் பாடி புகழ் பெற்றவர். தி.மு.கழக மாநாடுகளில் அவரது இசை நிகழ்ச்சி தவறாது இடம் பெறும். நாகூர் ஹனீபாவின் வாழ்க்கை வரலாற்றை, வரலாற்று ஆசிரியர் செ. திவான் பெரு நூலாக எழுதியுள்ளார். இதைப் படிப்பதன் மலம் நாகூர் ஹனீபாவின் வரலாற்றை மட்டுமல்ல, […]

Read more

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம், காவ்யா, சென்னை, விலை 1400ரூ. கவிதை, உரைநடை, சினிமா பாடல், நாவல் என அனைத்து துறையிலும் தனக்கென தனி நடை வகுத்துக் கொண்டு இலக்கிய வானில் உச்சத்தைத் தொட்டவர் கவிபேரரசு வைரமுத்து. ஆண் பெண், சிறியோர் பெரியோர், படித்தோர்-பாமரர், உள்நாட்டினர்-வெளிநாட்டினர் என அனைத்துத் தமிழர்களும் உச்சி முகர்ந்து பாராட்டும் உன்னத கவிஞர் அவர். அவரது படைப்புகளை ஆய்வு செய்து எண்ணற்றோர் பி.எச்.டி. மற்றும் எம்.பில். பட்டங்களைப் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 300 பி.எச்டி ஆய்வேடுகளும் 700க்கும் மேலாக எம்.பில். ஆய்வேடுகளும் […]

Read more