எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள்
எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 808, விலை 550ரூ.
தற்கால வரலாற்றையும் சென்ற தலைமுறையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த கால கட்டத்தையும் இரண்டறக் கலந்து எழுதிச் செல்கிற நாவல் இது. முத்தமிழன், ரகு உள்ளிட்ட ஏழு கதாபாத்திரங்களுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையும் ஒரு கதாபாத்திரமாக அமைத்திருப்பது புதுமை.
நன்றி: குமுதம், 31/8/2016.
—-
தெரியும் ஆனால் தெரியாது, முனைவர் ந. அப்புராஜ், தண்மதி பதிப்பகம், பக்.110, விலை 120ரூ.
மிகப்பெரிய கருத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் திணித்து வைத்திருப்பதுபோல் உள்ளது, இதில் நூலாசிரியர் சொல்லும் கருத்துகள் யாவும். உதாரணத்திற்கு xerox என்பது அந்த எந்திரத்தின் பெயர். நாம் போட்டோகாப்பியை xerox என்கிறோம். சுருக்கமாகச் சொன்னல் இது கருத்துக் களஞ்சியம்.
நன்றி: குமுதம், 31/8/2016.